உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: சபாநாயகரால் சர்ச்சை?

டில்லி உஷ்ஷ்ஷ்: சபாநாயகரால் சர்ச்சை?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்து பார்லி மென்ட் எம்.பி.,க்களுக்கும், நம் அரசியலமைப்பு புத்தகத்தை அனுப்பி உள்ளார். இந்த அரசியலமைப்பின் முன்னுரையில், மதசார்பின்மை மற்றும் பொது உடமை வார்த்தைகள் இல்லை.சட்ட நிபுணர் அம்பேத்கர் மற்றும் பலர் தயாரித்த, நம் அரசியலமைப்பு 1950ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, இந்த இரண்டு வார்த்தைகளும் முன்னுரையில் இல்லை. இந்திரா, 1975ல் அவசர சட்டத்தைக் கொண்டு வந்தார். 1976ல் மதசார்பின்மை மற்றும் பொது உடைமை வார்த்தைகள், அரசியலமைப்பில் இந்திரா அரசால் சட்ட திருத்தம் வாயிலாக சேர்க்கப்பட்டன. ஓம் பிர்லா, சக எம்.பி.,க்களுக்கு அனுப்பிய அரசியலமைப்பு புத்தகம், 1976க்கு முன் வெளியானதின் மறுபதிப்பு.இது எதிர்க்கட்சியினரை கொந்தளிக்க வைத்துவிட்டது. எதற்கு சபாநாயகர் இந்த புத்தகத்தை அனுப்பியுள்ளார்?'ஆர்.எஸ்.எஸ்., இயக்கமும், பா.ஜ.,வும் இந்த இரண்டு வார்த்தைகளை அரசியல் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என கூறி வருகின்றன. அவர்களுக்கு ஆதரவாக, ஓம் பிர்லா செயல்படுகிறாரா?' என, கேள்வி எழுப்பி வருகின்றனர்.ராகுல் எங்கு போனாலும், கையில் ஒரு சிறு அரசியலமைப்பு புத்தகத்தை மக்களுக்கு காண்பித்து, 'இதை பா.ஜ., அரசு மாற்றப் பார்க்கிறது; ஆனால், அதை நடக்க விட மாட்டோம்' என, சொல்லி வருகிறார். 'இதற்கு பதிலடி கொடுக்கவே, சபாநாயகர் இப்படி செய்துள்ளார்' என, சொல்லப்படுகிறது.இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எங்கெல்லாம் இப்படி ராகுல் தேர்தல் பிரசாரம் செய்தாரோ, அங்கெல்லாம் காங்., படுதோல்வியைச் சந்தித்தது என்பதுதான் உண்மை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

என்றும் இந்தியன்
ஜூலை 20, 2025 17:24

ஓம் பிர்லா, சக எம்.பி.,க்களுக்கு அனுப்பிய அரசியலமைப்பு புத்தகம், 1976க்கு முன் வெளியானதின் மறுபதிப்பு. ஓம் இருளை செய்தது 100% சரியே.இந்தியா, பாகிஸ்தான் பிறகு பங்களாதேஷ் என்று ஏன் பிரிக்கப்பட்டது????முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்று???அப்போ இங்கு வசிக்கும் முஸ்லிம்கள் இந்தியர்கள் அல்லவே அல்ல அவர்கள் முஸ்லிம்கள் மட்டும் தான் அவர்கள் பாகிஸ்தானியர்கள் ஆழ்ந்து பங்களாதேஷிகள் ஆகவே தான் இந்தியா என்னும் நாடு நாசமாக தங்களால் முடிந்த தீவிரவாதம் உதவி ஏதோ ஒரு வகையில் செய்து கொண்டே இருக்கின்றார்கள். ஆகவே இப்போது இந்திய நாடு இந்துஸ்தான் / சனாதன தர்மிஸ்தான் என்று மாற்றப்படவேண்டும் இந்துக்கள் அல்லாதவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் இந்தியாவில் வசிக்கும் அயல்நாட்டினர் என்று அழைக்கப்படவேண்டும். அதற்கான முதல் படி 1976க்கு முன் வந்த அரசியலமைப்பு புத்தகம்.


பேசும் தமிழன்
ஜூலை 20, 2025 09:41

அம்பேத்கர் அவர்கள் தலைமையிலான அரசியல் நிர்ணய சபை குறித்து எழுதாத ஒன்றை .....இருப்பதாக இடைச்செருகல் செய்த ஆட்கள் தான் வெட்கப்பட வேண்டும் .....அதுவும் ஒரு மதத்தை சேர்ந்த மக்களுக்காக தனி நாடு பிரித்து கொடுத்த பின்பு ....கண்டிப்பாக சொல்ல கூடாது.


Saai Sundharamurthy AVK
ஜூலை 20, 2025 08:54

பலே ! சபாநாயகர் அவர்களே !


A viswanathan
ஜூலை 20, 2025 06:56

அம்பேத்கர் எழுதியதை இந்திரா காந்தி திருத்தி எழுதியது சரி என்றால் சபாநாயகர் செய்தது சரிதான்.


SUBBU,MADURAI
ஜூலை 20, 2025 21:31

அருமை..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை