உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: தம்பதி சந்திப்பில் சந்தேகம்!

டில்லி உஷ்ஷ்ஷ்: தம்பதி சந்திப்பில் சந்தேகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விஷயம் பலரையும் குழப்பிவிட்டது. பா.ஜ., - எம்.பி.,யாக இருப்பவர் தேஜஸ்வி சூர்யா. பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதியிலிருந்து, இரண்டாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றவர். சென்னையில் உள்ள கர்நாடக இசைக்கலைஞரும், பரதநாட்டிய கலைஞருமான சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்தார் சூர்யா.இவரும், இவரது மனைவியும், முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., - எம்.பி.,யுமான ராஜாவை சமீபத்தில் டில்லியில் சந்தித்தனர். சூர்யா ஒரு ஹிந்துத்வவாதி; ராஜாவோ ஹிந்துத்வாவை கடுமையாக எதிர்ப்பவர்; மேலும், பல மேடைகளில், ஹிந்துக்களை கடுமையாக விமர்சனம் செய்து வருபவர்.'அப்படியிருக்கும்போது, ராஜாவை, மனைவி சகிதமாக ஏன் சூர்யா சென்று பார்க்க வேண்டும்' என, பா.ஜ., - எம்.பி.,க்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது தி.மு.க.,விலும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது. தி.மு.க., - எம்.பி.,க்களும் இந்த சந்திப்பு குறித்து ஆச்சரியப்படுவதுடன், 'எதற்கு பா.ஜ., - எம்.பி.,யுடன் சந்திக்க வேண்டும்?' என, கேள்வி எழுப்புகின்றனர்.'ராஜா ஒரு சீனியர் எம்.பி., சபாநாயகர் இல்லாதபோது சபையை நடத்தும் பொறுப்பில் இருப்பவர். எனவே, மரியாதை நிமித்தமாகத்தான் அவரைச் சந்தித்தோம்' என, சக எம்.பி.,க்களுக்கு பதில் சொன்னாராம் சூர்யா. ஆனால், இதை யாரும் நம்பத் தயாராக இல்லை. 'இரண்டு அரசியல்வாதிகள் சந்திக்கின்றனர் என்றால், அரசியல் பேசாமல் இருப்பரா?' என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rasheel
மார் 31, 2025 20:37

அழகான மனைவியை பாதுகாக்க வேண்டியது கணவனின் கடமை.


நரேந்திர பாரதி
மார் 31, 2025 13:39

இந்த சந்திப்பில் எனக்கும் உடன்பாடில்லை...ஒருவேளை அமித்ஷா/மோடி ஆலோசனையின் பேரில் சந்தித்து இருக்கலாம் அடுத்த சட்டமன்ற தேர்தலில் தீயமுக ஒருவேளை தொங்கிப்போனால், ராசாவை தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டேவாக மாற்றும் யோசனையாக இருக்க வாய்ப்புண்டு...


N.Purushothaman
மார் 31, 2025 08:16

ஆண்டிமுத்து ராசாவை தேஜஸ்வி சந்தித்தது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று ....ஊழலில் திளைத்த பெருச்சாளியையே மரியாதை நிமித்தம் என்கிற பெயரில் சந்திப்பது தேவையற்ற ....


ராமகிருஷ்ணன்
மார் 30, 2025 21:55

ஆசி வழங்க சிறிதும் தகுதியற்றவர் 2 G ஊழல்காரர் ராசா. அவர்கிட்ட குடும்பத்துடன் சென்றது பெரும் பாவம். நீங்கள் பல கோயில்கள் சென்று பரிகாரம் செய்து கொள்ளுங்கள்


kalyan
மார் 30, 2025 17:13

இந்த சந்திப்பை சனாதன தர்மத்தை பரப்ப தனது இசை நாட்டிய திறமையை தீவிரமாக செயல்படுத்திக்கொண்டிருந்த, திருமதி சிவஸ்ரீ தேஜஸ்வி யாதவ், தடுத்திருக்க வேண்டும். ஏனெனில் அவரோ தென்னகுர் புரந்தர விட்டலரின் பரம பக்தை . திமுக பாராளுமன்ற அங்கத்தினர் ஆ ராஜா வயதில் மூத்தவரானாலும், ஒரு சனாதன விரோதி. ஹிந்து தர்மங்களை கீழ்த்தரமாக விமரிசிப்பவர். ஆசி வழங்குவதற்கு தகுதியற்றவர் .


நரேந்திர பாரதி
மார் 31, 2025 13:34

திருமதி சிவஸ்ரீ தேஜஸ்வி யாதவ்???


naranam
மார் 30, 2025 08:21

ஊழலின் ராஜாவை சந்தித்தது பா ஜ க வுக்கு இழுக்கு தான்.


சிவம்
மார் 30, 2025 08:18

ஒரு சக எம்.பி., அதுவும் வயதில் பெரியவர் என்ற முறையில் பார்த்து ஆசிகள் வாங்குவதில் என்ன இருக்கிறது. மோடிஜி கூடத்தான் மரியாதை நிமித்தமாக பல காங்கிரஸ் தலைவர்களுடன் பேசுகிறார். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா! தேஜஸ்வி மிகவும் தெளிவாகதான் இருக்கிறார்.


Dharmavaan
மார் 30, 2025 08:37

ஆசி வழங்க தகுதி உள்ளவனா இந்த 2ஜி திருடன் .வழங்கினால் அவன் புத்தி இவனுக்கும் வந்துவிடும் பாலில் விஷம் போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை