உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: பாகிஸ்தானின் பரிதாப நிலை!

டில்லி உஷ்ஷ்ஷ்: பாகிஸ்தானின் பரிதாப நிலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இந்தியாவோடு நேரடியாக மோதினால் தோல்வி' என்பதை உணர்ந்து கொண்ட பாகிஸ்தான், பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பி, தாக்குதல்களை நடத்தி வருகிறது. தாக்குதலுக்கு பின், காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் உள்ள இந்தியா - -பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் ராணுவத்தை அதிகரித்துவிட்டது பாகிஸ்தான்.ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்த டாங்குகளை திரும்ப அழைத்து, இந்திய எல்லையில் நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் விமான படையின் நிலைமை மோசம். பல போர் விமானங்கள் பரிதாப நிலையில் உள்ளன. இந்த விமானங்களுக்கான உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை; மேலும், பாகிஸ்தான் டாங்குகள் நீண்ட துாரம் பயணித்தால், அதற்கு தேவையான போதிய டீசலும் கிடையாது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wq9tuwdq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்னொரு பக்கம், பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் புரட்சி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இங்குள்ள மக்கள் செயல்பட்டு வருகின்றனர். பலுசிஸ்தான், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலேயே இல்லை; அத்துடன், பாகிஸ்தானின் நிதி நிலைமையும் மோசமாக உள்ளது.இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இதுவரை மூன்று போர்கள் நடைபெற்று உள்ளன; அனைத்திலும் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. இப்போது, நான்காவது முறையாக போர் நடந்தால், பாகிஸ்தானின் நிலைமை என்னவாகும் என்பது, அங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்.'பாகிஸ்தானின் ராணுவ தளபதியான ஆசிம் முனிரின் உத்தரவின் அடிப்படையில் தான், பஹல்காமில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. எனவே இவர், பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தி விட்டார்' என, பாகிஸ்தானில் எதிர்ப்பு குரல்கள் எழுந்து உள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sivakumar
ஏப் 27, 2025 17:42

Timing is the best then, in Chaanakyaa's style (if eliminating potentially harmful group is a priority)


ராமகிருஷ்ணன்
ஏப் 27, 2025 10:38

பாகிஸ்தானின் பரிதாபமான நிலை பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது அல்ல. நமது மனதில் இரக்கம் வர இடமளிக்க கூடாது. பாக்கிஸ்தானின் இரக்கமற்ற செயலுக்கு பதிலடி கடுமையாக எப்படி தரனும் என்பதில் தான் நம் கவனம் இருக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை