உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சனாதன தர்மத்தை பாதுகாக்க ஜனசேனாவில் புதிய பிரிவு துணை முதல்வர் பவன் கல்யாண் அதிரடி

சனாதன தர்மத்தை பாதுகாக்க ஜனசேனாவில் புதிய பிரிவு துணை முதல்வர் பவன் கல்யாண் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

எலுரு: ''சனாதன தர்மத்தை பாதுகாக்கும் நோக்கில், ஜனசேனா கட்சியில், 'நரசிம்ம வாராஹி படை' என்ற புதிய பிரிவு துவங்கப்படுகிறது,'' என, அக்கட்சி தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்தார். ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், துணை முதல்வராக உள்ளார். எலுரு மாவட்டத்தின் ஜகன்னாதபுரம் என்ற கிராமத்தில் ஆண்டுக்கு மூன்று சமையல் காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும், 'தீபம் - 2' என்ற திட்டத்தை, துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.இதன்பின், துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியதாவது:நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். ஆனால், என் நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறேன். சமூக வலைதளங்களில் சனாதன தர்மத்தை விமர்சிப்போர் அல்லது அவமரியாதை செய்வோர் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். சனாதன தர்மத்தை பாதுகாக்க, ஜனசேனாவில், 'நரசிம்ம வாராஹி படை' என்ற பெயரில் புதிய பிரிவு துவங்கப்படுகிறது. பெண்கள் மீது தாக்குதல், சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுப்போர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில், 11 நாட்கள் விரதமிருந்து ஏழுமலையானிடம் துணை முதல்வர் பவன் கல்யாண் மன்னிப்பு கேட்டார்.அப்போதே, 'சனாதன தர்மத்தை பாதுகாக்க தேசிய அளவில் அமைப்பை உருவாக்க வேண்டும்' என, அவர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சுலைமான்
நவ 04, 2024 14:26

ஜனசேனா கட்சி இந்தியா முழுவதும் பரவ வேண்டும். பாரத மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும். மிஷநரிகளின் கொட்டம் அடங்க வேண்டும்.


Sivagiri
நவ 04, 2024 13:13

ஜாதிவாரி கணக்கெடுக்கும் பொழுது, கிறிஸ்டின், முஸ்லீம், புத்திஸ்ட் - ஆக மதம் மாறியவர்களை, ஜாதியில் சேர்க்க கூடாது... போலி ஹிந்துக்களை கண்டறிய, வீட்டுக்குள் சென்று எந்த வழிபாடு என்று சோதனை செய்து ஜாதியில் சேர்க்க வேண்டும்... புதிய ரேஷன் கார்டு கொடுக்கும் பொழுது, வீட்டுக்குள் வந்து தனி குடித்தனம்தானா, தனி சமயலறை இருக்கா, எத்தனை பேர் இருக்கிறார்கள், என்று நல்லா சோதனை போடுவது போல...


Sivagiri
நவ 04, 2024 13:08

இங்கே, அதை அழிக்கிறதுக்கு நூறு வருஷத்துக்கு முன்னமேயே ஆரம்பிச்ச்சு. தமிழ்நாட்டின் மொத்த கட்சிகளும், வேலை செஞ்சிக்கிட்டிருக்கு . . .


shanker sekar
நவ 04, 2024 11:34

இவர் செய்வது உண்மையில் காலத்தின் கட்டாயம். இந்து மதத்தை காப்பாற்றி கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளபட்டுள்ளோம். அதே சமயம் இது எல்லை மீறி போய் நாடகம் என்ற நிலை ஏற்பட கூடாது.


Balaji Radhakrishnan
நவ 04, 2024 11:04

Follow the great Bhavan Kalyan.


S S
நவ 04, 2024 09:25

பிஜேபிக்கு போட்டியாக இவரும் கிளம்பிவிட்டார்.


Nandakumar Naidu.
நவ 04, 2024 08:40

excellent. In every state True Hindu Leader must be born like him. Especially in Tamil Nadu.


venkat venkatesh
நவ 04, 2024 05:30

Great


Karmegam,Sathamangalam
நவ 04, 2024 08:17

பவன் கல்யாணின் இந்த அதிரடி முடிவு கிறிஸ்தவ மதம் மாற்றிகளின் தலையில் விழுந்த பேரிடியாகும் இப்போதுதான் இந்துக்கள் விழித்துக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறார்கள். இனிமேல் அங்கிகளும், லுங்கிகளும் அப்பாவி இந்துக்களை முன்பு போல ஆசைகாட்டி ஏமாற்றி மதம் மாற்ற முடியாது.


சமீபத்திய செய்தி