உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதல்வர் ஸ்டாலினிடம் ராஜ்யசபா சீட் கேட்டாரா வைகோ?

முதல்வர் ஸ்டாலினிடம் ராஜ்யசபா சீட் கேட்டாரா வைகோ?

சென்னை : ராஜ்யசபா எம்.பி., பதவி தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசிய தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2019, லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., இடம்பெற்றது. தொகுதி பங்கீட்டில் ஈரோடு லோக்சபா தொகுதியும், வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்கப்பட்டது. கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க., முதன்மை செயலர் துரைக்கு, திருச்சி லோக்சபா தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. கூட்டணிக்கான ஒப்பந்தத்தில், ராஜ்யசபா 'சீட்' மீண்டும் வைகோவுக்கு வழங்குவது குறித்து, எந்த உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. வரும் ஜூலை மாதத்தில் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு 4 எம்.பி.,க்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதில், ம.நீ.ம., கட்சி தலைவர் கமலுக்கு ஒரு பதவி தரப்பட உள்ளது.சமீபத்தில் சென்னையில் நடந்த ம.தி.மு.க., நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய வைகோ, 'தனக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை என்றாலும், கட்சி தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்; யாரும் கோபப்படக்கூடாது' என்றார்.இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை நேற்று முன்தினம் இரவு, வைகோ சந்தித்து, 20 நிமிடங்கள் பேசினார். அப்போது, ராஜ்யசபா 'சீட்' பற்றியே, முதல்வரிடம் வைகோ பேசியதாகக் கூறப்படுகிறது. ஆனால், 'கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசித்து, நல்ல தகவல் சொல்கிறேன்' என ஸ்டாலின் சொல்லி இருப்பதால், ம.தி.மு.க., தரப்பு அப்செட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

எவர்கிங்
ஏப் 25, 2025 18:40

எடுப்பது பிச்சை இதில் பகுமானம்


ராமகிருஷ்ணன்
ஏப் 25, 2025 17:03

வாய்ச்சவடால் சக்கரவர்த்தி அண்ணன் வைகோவை விட பச்சோந்தியை உலகில் எங்குமே பார்க்க முடியாது.


பாரத புதல்வன்~தமிழக குன்றியம்
ஏப் 25, 2025 16:42

அய்யா இந்த ராசியான மனுஷனுக்கு ஓர் பதவி குடுத்து தக்க வையுங்க.... அப்பதான் 2926 ல் தீ மு க மண்ணை கவ்வும்


krishna
ஏப் 25, 2025 16:23

IDHU ORU KATCHI


பேசும் தமிழன்
ஏப் 25, 2025 13:31

இதுக்கு பேசாமல் நாலு தெருவில் ......


hariharan
ஏப் 25, 2025 13:14

உன்னை ஒரு MPயாக நாங்கள் பார்க்கவில்லை. சிரிப்பு நடிகனாக பார்க்கிறோம். நாங்கள் தீக்குளித்த உன் தொண்டர்கள் சத்தியமா கோபப்பட மாட்டோம். எங்க அந்த பெட்டி, வெய்யில்ல காய வையுங்க.


Seekayyes
ஏப் 25, 2025 12:18

இன்னும் இருக்குற மிச்சசொச்ச நாட்களில் கூட பதவி அரிப்பு கேக்குது பாரேன். தன்மானமே இல்லாத...


lana
ஏப் 25, 2025 11:12

thondarkal கேள்வி கேட்க மாட்டார்கள். ஏனென்றால் அப்படி ஒருவர் இருந்தால் தானே கேட்க முடியும்.


பேசும் தமிழன்
ஏப் 25, 2025 08:23

உனக்கு பதவி இல்லையென்றால்..... அவர்கள் ஏன் கோபப்பட போகிறார்கள்..... உன்னால் பதவி இல்லாமல் இருக்க முடியாது.... பதவி இல்லையேல் உன்னை யாரும் சீண்ட மாட்டார்கள்.


Rajarajan
ஏப் 25, 2025 06:08

பாத்துக்கோங்க, இதான் ஊருக்கு உபதேசம் செய்யும் ஜனநாயகம். அப்பன், மகன், மகள், பேரன், பேத்தி இவர்களே சுற்றி சுற்றி பதவி சுகம் அனுபவிப்பர். இதில் தொண்டர்கள் ஏன் கோபப்படவில்லை என்பதே கேள்வி.


பிரேம்ஜி
ஏப் 25, 2025 07:37

தொண்டர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள்! தொண்டர்கள் அடிமைகள்! அடிமைகள் கேள்வி கேட்க கூடாது! கேட்க முடியாது! பல்லாக்கு தூக்கிகள் பல்லாக்கில் ஏற ஆசைப்படக் கூடாது!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை