உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சொன்னீங்களே செஞ்சீங்களா: பா.ஜ., புது பிரசாரம்

சொன்னீங்களே செஞ்சீங்களா: பா.ஜ., புது பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளை முன்னிறுத்தி, 'சொன்னீங்களே, செஞ்சீங்களா' என்ற பிரசாரத்தை, தமிழக பா.ஜ., துவக்கியுள்ளது. இதுகுறித்து, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: நிறைவேற்றப்படாத தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளை முன்னிறுத்தி, 'சொன்னீங்களே, செஞ்சீங்களா' என்ற கேள்வி தொடரை, என் சமூக வலைதள பக்கத்தில் துவக்கி இருக்கிறேன். 2021 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில், 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் மார்தட்து போன முக்கியமான, 100 தேர்தல் வாக்குறுதிகளை, மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இத்தொடரின் பிள்ளையார் சுழியாக, இன்று வரை நிறைவேற்றப்படாத ஒரு வாக்குறுதியை முன்வைத்து துவக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதி எண், 285ல், 'ஊராட்சிகள், அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், மாணவர் விடுதிகள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்படும்' என, கூறப்பட்டு உள்ளது. விரைவில் மற்றொரு காற்றில் பறந்த வாக்குறுதி வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பெருங்கோட்டங்களில் பூத் கமிட்டி மாநாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அமைப்பு ரீதியாக பா.ஜ.,வின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணி நடக்கிறது. தமிழகம் முழுதும் உள்ள, 68,467 பூத்களில் ஒரு ஓட்டுச்சாவடிக்கு, 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. எட்டு பெருங்கோட்டங்கள் வாயிலாக, பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநாடு நடத்தப்படும். அவர்கள், தேர்தல் பணிகளை இன்று முதல் தேர்தல் வரை செய்ய உள்ளனர். அதன் அடிப்படையில், திருநெல்வேலியில் வரும், 17ம் தேதி மாநாடு நடக்க உள்ளது. தொடர்ந்து மாநிலம் முழுதும் எட்டு பெருங்கோட்டங்களிலும் பூத் கமிட்டி மாநாடுகள் நடத்தப்படும். - நாராயணன் திருப்பதி, செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

கூத்தாடி வாக்கியம்
ஆக 16, 2025 17:07

திராவிடியம் இப்போதே எழுபது ஆண்டு அழித்து ஒழித்து விட்டது இன்னும் விட்டால். முடிந்தது. இந்த முட்டு குடுக்குற பயலுக என்ன ஒரு அரசு அலுவலகத்துக்கு போநது உண்டா. போயி பாரு தெரியும். ஒரு அப்ப்ரூவலுக்கு நின்னது உண்டா போ தெரியும்


Shivakumar
ஆக 16, 2025 02:24

1. நீட் தேர்வை ரத்து செஞ்சீங்களா 2. பழைய ஓய்வு ஊதிய திட்டம் என்ன ஆனது. 3. மாதா மாதம் மின்சார கணக்கீடு எடுப்போம் என்று சொன்னீர்களே என்ன ஆச்சு. 4. கல்வி கடன் ரத்து என்று சொன்னீர்களே என்ன ஆச்சு. இன்னும் நிறைய இருக்கு. முதலில் இதற்கு பதில் சொல்லுங்க.


Aravindhasan V L
ஆக 15, 2025 19:17

eanna seyalla


venugopal s
ஆக 15, 2025 15:14

இதை தமிழக பாஜக மத்திய பாஜக அரசைப் பார்த்து கேட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும்!


திகழ்ஓவியன்
ஆக 15, 2025 12:59

15 L சொன்னீங்களே செஞ்சீங்களா , ஆண்டுக்கு 2 கோடி பேர் வேலை சொன்னீங்களே செஞ்சீங்களா, டாலர் 40 ஆக்குவேன் சொன்னீங்களே செஞ்சீங்களா, நதிகள் இணைப்போம் சொன்னீங்களே செஞ்சீங்களா


Sridhar
ஆக 15, 2025 14:40

அறிவுனு கொஞ்சம் இருந்தா தேர்தல் வாக்குறுதினா என்னான்னு தெரியணும். திருட்டு கும்பலின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பர் போட்டு சொல்ற மாதிரி எந்த தேர்தல்ல பிஜேபி இந்த வாக்குறுதிகளை கொடுத்திச்சினு சொல்லணும்.


mathavan
ஆக 15, 2025 12:31

மக்களுக்கான திட்டம் ஏதும் இல்லாம இப்படித்தான் மற்றவர்களை வம்பிழுப்பானுங்க


guna
ஆக 15, 2025 11:20

திருமா கூட திருந்தி நல்ல கருத்து போடுறாரு . இந்த இருநூறு சில்லுகள் தொல்லை தான் இருக்கு


mathavan
ஆக 15, 2025 11:13

எல்லோருக்கும் 15 லட்சம், கருப்பு பணம் ஒழிசுடுவேன், இந்தியாவை வல்லரசு ஆக்குவேன், விவசாயிகளை காப்பேனு, சொல்லி ஓட்டு வாங்கிய பிஜேபி என்ன செஞ்சுதுன்னு ஊருக்கே தெரியும், பக்கத்துநாடு சண்டைபோட்டபோது எதிரிகளை அடக்க வக்கில்லாம சமாதானம் பேசிட்டு, இங்கேவந்து பீலா விடுவது....


vivek
ஆக 15, 2025 12:10

....ஆளு வளர்ந்த அளவுக்கு உனக்கு அறிவு வளரலையே . என்ன செய்ய


திகழ்ஓவியன்
ஆக 15, 2025 13:04

என்னவோ யோக்கியன் போல ,


Shivakumar
ஆக 16, 2025 02:27

இந்தியா இப்போ வல்லரசு தாண்டா. அதில் என்ன சந்தேகம் உனக்கு. விவசாயிகளின் நலனுக்கு தான் முதலிடம் என்று பிரதமர் சொல்லி இருக்கார். அதற்காக அமெரிக்காவை எதிர்த்து கொண்டும் இருக்கார். முதலில் படிடா பரமா


Oviya Vijay
ஆக 15, 2025 09:57

தேசியத் தலைமையிடமிருந்து மாநிலக் கட்சி அலுவலகத்திற்குக் கிடைக்கும் பணத்தை வைத்து சமோசாவையோ பக்கோடாவையோ சாப்பிட்டுக் கொண்டு காலத்தைத் தள்ளவும்... இவை தவிர்த்து உங்களால் தமிழகத்தில் ஒன்றும் முடியாது... எக்காலம் ஆயினும் இதுவே இங்கு பாஜகவின் நிலை... இந்நிலை என்றைக்குமே மாறப் போவதில்லை...


vivek
ஆக 15, 2025 11:10

முதல்வர் சொன்ன காலை உணவு திட்டம் உங்களுக்கு இல்லை. அது துப்புரவு தொழிளாளர்களுக்கு.....எதுக்கு முட்டு.....


vivek
ஆக 15, 2025 11:17

பாவம் ஓசி பிரியாணியும் இருநூறு ரூபாயும் இனி கிடைக்காது என்ற விரக்தியில் இதயம் பத்திரமாக இருக்குமா....


Mario
ஆக 15, 2025 09:15

அந்த 15 லட்சம், 2 கோடி வேலை வாய்ப்பு சொன்னீங்களே செஞ்சீங்களா: மக்கள் கேள்வி


முக்கிய வீடியோ