உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்... அதிர்ச்சியில் மம்தா!

டில்லி உஷ்ஷ்ஷ்... அதிர்ச்சியில் மம்தா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நவராத்திரி சமயத்தில், மேற்கு வங்கத்தில் ஒன்பது நாட்களும் காளிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=srfpdytc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த மாநிலத்தின் ஒவ்வொரு நகரிலும், கிராமத்திலும் பெரிய பந்தல் அமைத்து, காளி தேவி சிலையை வைத்து பூஜை செய்வர்; நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அன்னதானம் நடக்கும்.மேற்கு வங்க கிராமிய நடனங்கள் நடைபெறும். கோல்கட்டாவின் ஒவ்வொரு பகுதியிலும், ஒரு முக்கிய இடத்தில் பெரிய பந்தல் அமைப்பர்.அந்த சமயத்தில், என்ன விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறதோ, அதை பந்தலின், 'தீம்' ஆக வைத்து விடுவர்.சமீபத்தில், கோல்கட்டா மருத்துவமனையில், ஒரு இளம் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுதும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்க, உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.இந்த முறை கோல்கட்டாவின் பூஜா பந்தல்களில், இளம் மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பந்தல்களில் தீம் அமைக்கப்பட உள்ளதாம்; இது, மம்தா கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.'இந்த முறை பந்தல் அமைக்க அரசு தரப்பிலிருந்து, 75,000 ரூபாய் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ஆனால், 'எங்களுக்கு உங்கள் பணம் வேண்டாம்' என, பூஜா பந்தல் நடத்துவோர் மறுத்து விட்டனராம்.அனைத்து அரசியல் கட்சியினரும், இந்த விஷயத்தில் மம்தாவிற்கு எதிராக உள்ள நிலையில், 'நவராத்திரி சமயத்தில், பந்தல் தீம் விவகாரமும் தங்களுக்கு எதிராக உள்ளதே' என, மம்தா அதிர்ந்து போயுள்ளாராம்.இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, மேற்கு வங்க ஹிந்துக்களை ஒன்றிணைக்க, பா.ஜ., முயன்று வருகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mahendran Puru
ஆக 26, 2024 09:05

தேர்தலுக்கு முன்னர், பாஜக, சந்தேஷ்காளி பிரச்சினையை ஊதி ஊதி பார்த்து ஊத்திக்கிட்டதுதான் மிச்சம். இப்போது இந்தப் பிரச்சினை. நியாயமான விஷயங்களை அரசியலாக்கி தீர்வு காணாமல் பிரிவினை உண்டாக்கி ஆமை பாஜக குளிர் காயும் போது பிரச்சினை பின்தங்கி விடுகிறது.


Venkatesan
ஆக 27, 2024 14:30

சந்தேஷ் காளியில் நடந்த கொடூரம் எந்த கிராமத்து பெண்களுக்கும் நடக்க கூடாது. அதை மமதை அரசு அடக்கிய முறை அதை விட கொடுமை. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கான் மாதிரி பேச கூடாது.


Kuttimani
ஆக 25, 2024 19:18

இந்த பிரச்சனையை உருவாக்குனதே பிஜேபி தான் திதி க்கு இதெல்லாம் வேணும் இந்தியா கூட்டணியை என்னா பாடு படுத்தினாரு ராகுல் சொன்னதை கேட்டுருந்தா இப்ப பிஜேபி ஆட்சி வந்துருக்காது இதை தான் எல்லா மாநிலத்திலயும் பன்னுவார்


Mr Krish Tamilnadu
ஆக 25, 2024 12:47

நவராத்திரி முடிவதற்கு தீர்ப்பு காளி தேவி வழங்கி விடுவார்.நல்லது.


குமரன். தென்காசி
ஆக 25, 2024 09:03

அதிகாரம் பதவிவெறி என்று கேள்வி பட்டிருக்கிறேன் அதை மம்தா ஆட்சியில் பார்க்கும் போது மனது பதைபதைக்கிறது வருங்கால இந்தியாவைப்பற்றி துளியும் கவலை அவரிடம் இல்லை ஒரு பெண்ணிடம் இவ்வளவு வன்மம் கூடாது கருணையே வடிவான ஒரு தாயுள்ளம் எங்கே?


vijai
ஆக 25, 2024 07:12

super


புதிய வீடியோ