உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராஜ்யசபா சீட் கேட்டு தே.மு.தி.க., துாது; அ.தி.மு.க., தலைமை மவுனம்

ராஜ்யசபா சீட் கேட்டு தே.மு.தி.க., துாது; அ.தி.மு.க., தலைமை மவுனம்

சென்னை : ராஜ்யசபா 'சீட்' கேட்டு, தே.மு.தி.க., தரப்பில் துாது அனுப்பப்பட்ட நிலையில், அதை கண்டு கொள்ளாமல், அ.தி.மு.க., தலைமை மவுனம் காக்கிறது.கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெற்றது. அக்கட்சி போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும், தோல்வியை தழுவியது. தே.மு.தி.க.,விற்கு ராஜ்யசபா எம்.பி., சீட் வழங்குவதாக, அ.தி.மு.க., தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது என, அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோர் கூறினர். ஆனால், அ.தி.மு.க., - தே.மு.தி.க., கட்சிகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்து, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், தமிழகத்தில் ஜூலை மாதம் காலியாக உள்ள, ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க., கோட்டாவில், ராஜ்யசபா எம்.பி., பதவியை கைப்பற்ற, தே.மு.தி.க., தரப்பில் மீண்டும் துாது அனுப்பப்பட்டுள்ளது. அ.தி.மு.க., தலைமை அதை கண்டு கொள்ளாமல், மவுனம் காத்து வருகிறது.இந்நிலையில், சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், பிரேமலதா நேற்று கூறியதாவது: முதல்வர் 'நிடி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க, டில்லி சென்று திரும்பி உள்ளார். அவரது பயணத்தால், தமிழக மக்களுக்கு நல்லது நடந்தால் வரவேற்கிறோம். அவர் எதற்காக சென்றார் என்பதை, அவர்தான் சொல்ல வேண்டும். அமலாக்கத் துறை சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. சோதனைக்கு பின் என்ன நடந்தது என்பதை, மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். ராஜ்யசபா தேர்தல் தேதி இப்போதுதான் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் நேரம் இருக்கிறது. பொறுமை கடலினும் பெரிது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Pmnr Pmnr
மே 28, 2025 18:14

கமலுக்கு எம்பி பதவி கொடுக்கும் போது. பிரேமலதாவுக்கு எம்பி பதவி கொடுக்க கூடாதா


ஆரூர் ரங்
மே 28, 2025 10:51

மகனின் படத்தை ரிலீஸ் செய்ய ஜெயண்ட் உதவியை நாடுவது. பின்னர் எதிர்புறம் சீட் கேட்பது ன்னு ரெண்டு பக்கமும்?.


Gentleman
மே 28, 2025 10:24

விஜயகாந்த் மனைவி என்ற அந்தஸ்தை தவிர வேற என்ன இருக்கு இந்த அம்மணியிடம் சமூக சேவை பூஜ்யம், தம்பி சுதீஷ் வேஸ்ட் மற்றும் மகனுக்கோ அனுப்பவும் இல்லை அரசியலிலும் மற்றும் சமூக சேவை யிலும் எம் பி பதவி என்ன கடலை மித்தாய் போல நினைக்கிறார்கள் போல கட்சியை மூடி விட்டு தினமும் அன்ன தானம் செய்தால் விஜகாந்த்திற்கு புண்ணியம் சேரும்


naranam
மே 28, 2025 09:39

பேராசை மற்றும் பதவி வெறி பிடித்தவர் இந்த அம்மையார் !


முருகன்
மே 28, 2025 09:48

மற்ற கட்சிகள் மாதிரி அப்படி எத்தனை பதவியை அடுத்த கட்சியிடம் தேமுதிக பெற்றுள்ளது


ராஜ்
மே 28, 2025 08:21

எல்லோரும் தி.மு.க, அதிமுக வை தலை முழுகிட்டு த.வெ.க வுக்கு போங்க. சீட்டும் கிடைக்கும். ஜெயிக்கவும் வாய்ப்பு.ஆட்சியிலும் பங்கு உண்டாம்.


SUBBU,MADURAI
மே 28, 2025 03:46

ஆசைக்கு இல்லை அளவென்ற எல்லை என்பது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ இந்த பிரேமலதாவிற்கு நூறு சதவீதம் பொருந்தும். தேமுதிகவிற்கு சட்டமன்றத்தில் ஒரு MLA கூட இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் பிரேமலதா அவருடைய கட்சிக்கு ராஜ்யசபா சீட் கேட்கிறார் என்று தெரியவில்லை. என்றைக்கு இவர் அந்தக் கட்சியின் பொறுப்புக்கு வந்தாரோ அன்றிலிருந்தே விஜயகாந்த் கஷ்டப்பட்டு உருவாக்கிய தேமுதிக என்ற கட்சியின் வீழ்ச்சி தொடங்கி விட்டது. இனிமேல் அக்கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்பதுதான் உண்மை.


நல்லவன்
மே 28, 2025 15:45

சுப்பு அவர்களே நீங்கள் கூறுவது உண்மை ... இதே போல் எந்த அடிப்படையில் வாசன் Rajya சபா இடம் பெற்றார் என்பதும் கேட்கபட வேண்டிய ஒன்று


சமீபத்திய செய்தி