உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., கூட்டணி 100 தொகுதிகளில் வீக்; உடன்பிறப்பே வா துவங்கிய பின்னணி

தி.மு.க., கூட்டணி 100 தொகுதிகளில் வீக்; உடன்பிறப்பே வா துவங்கிய பின்னணி

சென்னை: தி.மு.க., கூட்டணிக்கு, 100 சட்டசபை தொகுதிகளில் பலம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளதால், 'உடன்பிறப்பே வா' ஆலோசனை கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பலம் குறைவு

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. தேர்தலுக்கு குறைந்த காலமே இருப்பதால், ஆட்சியை தக்க வைப்பதற்கான தீவிர முயற்சியில் தி.மு.க., தலைமை இறங்கியுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y5vdugx2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூட்டணி கட்சிகளின் அதிருப்தியை சரி செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தை ஏழு மண்டலங்களாக பிரித்து, அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களை பொறுப்பாளர்களாக தி.மு.க., தலைமை நியமித்துஉள்ளது. தொகுதி நிலவரம், வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளின் செயல்பாடு உள்ளிட்டவற்றை கண்காணிக்க, 'ஐபேக், பென்' உள்ளிட்ட மூன்று நிறுவனங்களை தி.மு.க., தலைமை நியமித்துள்ளது. இதில், பென் நிறுவனம் வாயிலாக, தி.மு.க., கூட்டணி வெற்றி வாய்ப்புகள் குறித்து, சட்டசபை தொகுதி வாரியாக, இரண்டு மாதங்களாக அலசி ஆராயப்பட்டுள்ளது.இதில், 100 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி பலம் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. இத்தகவல், முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இதையடுத்து, கட்சியின் ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகிகளை, தனித்தனியாக சந்திக்கும் ஆலோசனை கூட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி உள்ளார். தி.மு.க., தலைமை அலுவலகமாக, அறிவாலயத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு, 'உடன்பிறப்பே வா' என பெயரிடப்பட்டு உள்ளது.

வேகம் காட்டவில்லை

இதுவரை 35க்கும் அதிகமான தொகுதிகளின் நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, அவர்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். தேர்தல் பணிகளில் வேகம் காட்டவில்லை என்றால், தயவு தாட்சண்யமின்றி கட்சி பதவிகளும் பறிக்கப்படும் என அறிவுறுத்தி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

ஜூன் 13 முதல், 'உடன்பிறப்பே வா' என்ற பெயரில் நிர்வாகிகள் சந்திப்பை முதல்வர் நடத்தி வருகிறார். இதுவரை சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை, பரமத்தி வேலுார், கவுண்டம்பாளையம், பரமக்குடி, ஸ்ரீரங்கம், குன்னம், ஆர்.கே.நகர், கிருஷ்ணகிரி, அணைக்கட்டு, சங்கராபுரம், ஸ்ரீபெரும்புதுார், மயிலாப்பூர், தி.நகர், அந்தியூர், மொடக்குறிச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை முடிந்து உள்ளது. இந்த தொகுதிகள் அனைத்திலும், தி.மு.க., கூட்டணியின் செல்வாக்கு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கட்சியின் ஓட்டு வங்கியை பலப்படுத்த, இங்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அறிவுறுத்தல்

மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்களில், கூடுதல் பயனாளிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், மண்டல பொறுப்பாளர்களுக்கு தனித்தனியாக அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ஜூலை 09, 2025 07:00

தி.மு.க., கூட்டணி 100 தொகுதிகளில் வீக்..இந்த செய்தியினால் தமிழ்நாட்டில் ஓட்டுகள் விலைகூடும் ..அதனாலென்ன அதையும் வாங்கி கழகம் வெற்றிபெறும் உடன்பிறப்பே வா குவாட்டரை அருந்து ..கோழிப்பிரியாணியை சுவை .. அந்த மயக்கத்திலேயே வாக்கு சாவடிக்கு செல் இன்னும் ஒரு ஐந்தாண்டுகளுக்கு உங்களுக்காக உழைக்க உத்தரவிடு ..கழகத்திற்கு வாக்களி ..டோக்கனை கொடுத்து ரூபாயை பெற்றுக்கொள் .உரிமை தொகை உனக்கு ...அடிக்கடி டாஸ்மாக் சென்றிடு ..அரசின் வருமானத்தை உயர்த்து ...


Shivam
ஜூலை 08, 2025 22:54

இப்ப யார்ரா நேர்மையா இருக்கா


ராமகிருஷ்ணன்
ஜூலை 08, 2025 20:50

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, மற்றும் தேர்தல் நேரத்தில் திமுகவினர் செய்யும் தில்லு முல்லுகளை தவிர்க்க மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் கனிசமான ஓட்டுகள் நேர்மையான கட்சிகளுக்கு கிடைக்கும். தேர்தலுக்கு 1 மாதம் முன்பே கட்சியினர் கூடும் கூட்டங்கள் மிக கடுமையாக கண்காணிக்க வேண்டும். பணம், பிரியாணி டாஸ்மாக் சரக்கு பரிமாற்றம் தடை செய்ய வேண்டும். மொத்ததில் திமுகவின் தில்லாலங்கடி வேலைகளை தடுத்தாலே திமுகவின் தோல்வி சர்வ நிச்சயம்.


V RAMASWAMY
ஜூலை 08, 2025 20:40

தேவையென்றால் உடன்பிறப்பு தேவையில்லையென்றால் வேறு யாரோ? உடன்பிறப்புக்களுக்கு சொத்தில் பங்கு உண்டா?


theruvasagan
ஜூலை 08, 2025 20:01

100 தொகுதிகளிலும் கடைமடை வரைக்கும் தண்ணீர் போயிருக்காது. இடையில இருக்குற மாவட்டம் வட்டம் சதுரம் முக்கோணம் எல்லாம் கடைசி சொட்டு வரை உறிஞ்சி சாப்பிட்டிருக்கும். அதுதான் பலம் குறைந்ததற்கான காரணம்.


krishna
ஜூலை 08, 2025 15:44

DRAVIDA MODEL UDAN PARUPPUGAL VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI. OSI QUARTER BRIYANIKKU GOPALAPURAM MATTRUM KURU NILA MANNARGAL LATCHAM KODIGALIL KOLLAI ADIKKA IVANUGA VERI PIDITHU SLAIVAANUGA.MOOLAI ILLA JENMANGAL.


Muralidharan S
ஜூலை 08, 2025 15:26

பணமழையில், குவாட்டர் மழையில், பிரியாணி மழையில் நனைய தாயாராக இருக்கும் வாக்காளர்களின் ஒட்டு இருக்கும் வரை, மாற்று மதத்தினர் வாக்கு வங்கி இருக்கும் வரை திரவிஷ முன்னேற்ற கழகம்..எதை பற்றியும் கவலை பட மாட்டார்கள்....


நரேந்திர பாரதி
ஜூலை 08, 2025 15:16

இதோ ஆரம்பிச்சாச்சு...தேர்தல் முடியிற வரைக்கும் உடன் பிறப்பே, உளுத்தம் பருப்பேன்னு எதாவது சொல்லி பினாத்தவேண்டியதுதான்...இருக்கவே இருக்கானுங்க ஆடுறா ராமா ஆடுறா கொத்தடிமைகள்


ஜூலை 08, 2025 14:23

வெய்யிலில் நீற்று விறைத்துப்போன உடன்பிறப்பே வா ?


Ganapathy
ஜூலை 08, 2025 13:29

நீங்கதான் திராவிடமாச்சே...எவ்வளவு கொறயுதா அத்தனை இடங்கள் ஆந்திராவுல கேரளாவுல கர்நாடகாவுல போட்டியிடலாமே


முக்கிய வீடியோ