உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மீண்டும் ஆட்சியில் பங்கு கோஷம்; வி.சி., மீது தி.மு.க., கோபம்

மீண்டும் ஆட்சியில் பங்கு கோஷம்; வி.சி., மீது தி.மு.க., கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்:ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கரூரில் போஸ்டர்களை ஒட்டியுள்ளதால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தாண்டு, தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கடந்த ஓராண்டு காலமாகவே, வி.சி.க.,வில், 'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு' என்ற கோஷம் எழுப்பப்பட்டு வருகிறது. கூட்டணிக்கு பங்கமாக அமையும் என்பதால், கட்சியின் தலைவர் திருமாவளவன், இதை வலியுறுத்தாமல் அமைதியாக இருந்து வருகிறார்.ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கோஷத்தை வேகமாக எழுப்பிய கட்சியின் துணைப் பொதுச்செயலராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை, பதவியில் இருந்து நீக்கியதோடு, கட்சியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்தார் திருமாவளவன். இதையடுத்து, கட்சியில் இருந்து விலகி, தன்னுடைய கருத்தை உயர்த்திப் பேசும் த.வெ.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டு விட்டார் ஆதவ் அர்ஜுனா. இந்நிலையில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா கடந்த 14ல், நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் வி.சி.க., உள்ளிட்ட அமைப்பினரும், அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடினர்.அதையொட்டி, கரூர் அருகே திருமாநிலையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வி.சி.க., ஆதரவாளர்கள் சிலர், போஸ்டர் ஒட்டினர். அதில், 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால், தி.மு.க., தரப்பு கோபம் அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kulandai kannan
ஏப் 17, 2025 18:30

இந்த இரு திராவிட திருட்டு கட்சிகளுக்கும் கூட்டணி ஆட்சி என்றால் வேப்பங்காய் தான்.


அப்பாவி
ஏப் 17, 2025 14:35

திருட்டு திமுக ஆளுங்களுக்கே அமைச்சர் பதவி குடுத்து மாளலை. இதிலே ஆட்டையில் பங்கு வேற கேக்கறாங்க.


ராதாகிருஷ்ணன்.
ஏப் 17, 2025 12:21

கொஞ்ச நேரம் சும்மா இருங்கப்பா கொடுக்கிற 6 சீட்டையும் குறைத்து விட போகிறார்கள்


theruvasagan
ஏப் 17, 2025 11:56

கூட்டாச்சித் தத்துவம் எல்லாம் ஒன்றிய லெவல்ல மட்டும்தான். குன்றியத்துல நானே ராஜா. நானே மந்திரி. சமூகநீதி சமத்துவம் பேசறதெல்லாம் எங்ககிட்ட வேலைக்காகாது.


vijai hindu
ஏப் 17, 2025 11:31

வாயை வச்சுகிட்டு கம்முனு இருங்க இருக்கிற பிளாஸ்டிக் சேரும் போயிடும்


Haja Kuthubdeen
ஏப் 17, 2025 10:24

தனித்து நின்னால் ஒத்த சீட்டில் கூட ஜெயிக்கவே முடியாது என்று திருமாக்கு தெரியும். திமுகவின் பலவீனம் அறிந்து ரொம்ப தாண்டி குதிக்கிறார்கள்.


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
ஏப் 17, 2025 08:11

ஆர்வக் கோளாறினால் செய்து விட்டனர். மன்னித்து பெட்டியை அனுப்பி வைக்க தெருமா அறிவாலயம் சென்று மண்டியிடும்.


naranam
ஏப் 17, 2025 04:51

பிளாஸ்டிக் தவிர வேறு ஒன்றும் தர மாட்டார்கள். திமுக வினர் சொல்வது ஒன்று செய்வது வேறொன்று.


சமீபத்திய செய்தி