உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காங்.,கை விட கூடுதல் சீட் வேண்டும்; தி.மு.க.,வுக்கு வி.சி., திடீர் நிபந்தனை

காங்.,கை விட கூடுதல் சீட் வேண்டும்; தி.மு.க.,வுக்கு வி.சி., திடீர் நிபந்தனை

சென்னை: ''தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வலுவாக இல்லை என்பதால், அவர்களை விட கூடுதல் இடங்களை, வி.சி.,க்கு ஒதுக்க வேண்டும்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னி அரசு தெரிவித்தது, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.தி.மு.க., கூட்டணியில் வி.சி., உள்ள நிலையில், பா.ம.க.,வும் வர வேண்டும். இவ்விரு கட்சிகளும் ஏற்கனவே ஒரே கூட்டணியில் இருந்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ty8e296i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு, வி.சி., தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், வி.சி., துணை பொதுச்செயலர் வன்னி அரசு, காங்கிரசை விமர்சித்து, தனியார் 'டிவி' நேர்காணலில் பேசிய வீடியோவை, வி.சி., நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அதில், வன்னி அரசு கூறியிருப்பதாவது:தி.மு.க., கூட்டணியில், தி.மு.க.,வுக்கு அடுத்து வி.சி., தான் வலிமையான கட்சி. அதனால், எங்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கும்படி கேட்கிறோம். இப்படி கேட்பது என் போன்றோரின் விருப்பம். இதனால், கூட்டணி கட்சியை குறைத்து மதிப்பிடவில்லை.தமிழகத்தில் வலுவான கட்சி குறித்த கணக்கெடுப்பை நடத்துங்கள். எந்த கட்சி வலிமையான கட்சி என்று கேளுங்கள். காங்கிரசுக்கு தமிழகத்தில் என்ன இருக்கிறது?அகில இந்திய அளவில் ராகுல் தலைவராக, பா.ஜ.,வுக்கு மாற்றாக இருக்கிறார். தமிழகத்தில் அமைப்பு ரீதியாக நாங்கள் வலிமையாக இருக்கிறோம். காங்கிரசை விட எங்களுக்கு கூடுதல் இடங்களை கொடுங்கள்.பா.ம.க., - வி.சி., ஒரே கூட்டணியில் சேர வேண்டும் என்பதை கூற, செல்வப்பெருந்தகைக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. அவர், வி.சி.,யை சார்ந்தவரோ, தலைவரோ இல்லை. அவர் கட்சி குறித்து வேண்டுமானால் பேசட்டும். அவர், இன்று ஒரு கட்சியில் இருப்பார்; நாளை மற்றொரு கட்சிக்கு சென்று விடுவார். எங்கள் தலைவர் திருமாவளவன் வெளிப்படையாக அறிவித்து விட்டார். எங்கள் நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியிருக்கிறோம். பா.ஜ., - பா.ம.க., இடம்பெறும் கூட்டணியில், நாங்கள் ஒருபோதும் இருக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

எஸ் எஸ்
ஜூலை 05, 2025 22:05

காங்கிரஸ் கட்சிக்கு இந்த அவமானம் தேவையா? விசிக வை கூட்டணியில் இருந்து வெளியேற்ற திமுக வை வலியுறுத்த வேண்டும். மறுத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறி திமுக வுக்கு பாடம் புகட்ட வேண்டும். காங்கிரஸ் இல்லாமல் திமுக வெல்ல முடியாது. ஆனால் காங்கிரஸ்காரர்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது


Krishnamurthy Venkatesan
ஜூலை 05, 2025 21:56

திருமாவின் இந்த கூற்றுகூட திமுகவின் மற்றுமொரு ராஜதந்திரம். இதனையே சாக்காக வைத்துக்கொண்டு காங்கிரஸிற்கு குறைந்த எண்ணிக்கையில் சீட்டும், காங்கிரஸிற்கு கொடுக்கப்பட்ட சீட்டை காரணம் காட்டி அகில இந்திய கட்சி விசிக விற்கு அதைவிட குறைந்த சீட்டும் திமுக கொடுக்கும்.


Ramesh Sargam
ஜூலை 05, 2025 21:20

என்னதான் முட்டிமோதினாலும் ஏதோ ஒன்றோ அல்லது இரண்டு சீட்டோதான். உங்கள் நிபந்தனையை திமுக செவிகொடுத்துக்கூட கேட்கமாட்டார்கள்.


SUBRAMANIAN P
ஜூலை 05, 2025 15:46

தலீவரே, பேசாமே 2016 மாதிரி மீண்டும் ஒரு மக்கள் நல கூட்டணி பார்ட்டு-2 ஆரம்பிச்சிடுங்க.. அதுல திமுக அதிருப்தி கூட்டணி கட்சிகளை முதலில் ஒன்னு சேருங்க.. அதுல கொங்குராசு. ரவுடிபெருந்தொகை, தவாக.வேலையில்லாத முருகன், மதியில்லாத வைகோ, இன்னும் தேமுதிக இதர சில்லறைகளோட முதல்வர் வேட்பாளரா நீங்களே இருந்திடுங்க. இதைவிட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்காது.. அப்புறம் கடைசிவரை அறிவில்லாத ஆலயத்துல கழுவல் வேலைதான் பார்க்கணும்.. அம்புடுதேன் சொல்லிப்புட்டேன்.


ராமகிருஷ்ணன்
ஜூலை 05, 2025 14:45

TVK யுடன் ரகசிய பேச்சு வார்த்தை நடக்கிறது. எப்படியோ தோல்வி நிச்சயம். அதிக இடங்களில் நின்று தோற்போம் கிறுத்தவ முன்னேற்ற முன்னணி என்ற பெயரில் தொடங்கலாம்


sridhar
ஜூலை 05, 2025 13:33

கூடுதல் பிளாஸ்டிக் சீட் தருவாங்க , அது தான் உன் தகுதி . ஒரே ஒரு பொது தொகுதி கூட கிடையாது .


krishna
ஜூலை 05, 2025 10:39

KURUMA MEENGA YAARU UNGA LEVEL ENNA.ULAGATHUKKE PRESIDENT AAGALAAM.CM POST ELLAM JUJUBI.IDHELLAM ORUKATCHI IVAR ELLAM ORU THALAIVAR.INDHA KEDU KETTA POZHAPPUKKU THONDARGAL VERA KEVALAM.


angbu ganesh
ஜூலை 05, 2025 09:31

உனக்கு அந்த கவலைதான் lockup மரணத்தை பத்தி ஏம்ப்பா கவலை உனக்கு


vijai hindu
ஜூலை 05, 2025 09:04

இருக்கிற பிளாஸ்டிக் சேரும் பரி போகப்போகுது


Subburamu Krishnasamy
ஜூலை 05, 2025 08:35

he is not worth for politics.


சமீபத்திய செய்தி