உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓ.டி.பி., பெறுவதற்கு தடை சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., மனு

ஓ.டி.பி., பெறுவதற்கு தடை சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லி சிறப்பு நிருபர்'ஓரணியில் தமிழ்நாடு' முழக்கத்தின் கீழ், பொதுமக்களிடம் ஓ.டி.பி., பெறுவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்த நிலையில், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., மேல்முறையீடு செய்துள்ளது.தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக, 'ஓரணியில் தமிழ்நாடு' என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வந்த தி.மு.க.,வினர் பொதுமக்களிடமிருந்து ஆதார் ஓ.டி.பி., எனப்படும், ஒருமுறை கடவுச்சொல்லை பெற்று வந்தனர்.இதற்கு எதிராக திருபுவனத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி ராஜ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியன், மரியா கிளாட் அமர்வு, ஓ.டி.பி., எதற்காக கேட்கப்படுகிறது? தனி நபரின் பாதுகாப்பு விஷயங்களில் இது பிரச்னையை ஏற்படுத்தாதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு உறுப்பினர் சேர்க்கையின் போது ஓ.டி.பி., பெற இடைக்கால தடை விதித்தனர்.இந்த உத்தரவுக்கு எதிராக தி.மு.க., தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மனுதாரரான ராஜ்குமார் தன் தரப்பு கருத்தை கேட்காமல், இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக தி.மு.க., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'ஓ.டி.பி., பெறும் விவகாரத்தில் பொதுமக்களை வற்புறுத்தவில்லை. மக்கள் தானாக சுய விருப்பத்தின் அடிப்படையில் தி.மு.க.,வில் உறுப்பினராக சேர்ந்து வருகின்றனர்.ஆனால், இந்த விஷயத்தை கருத்தில் கொள்ளாமல் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

c.mohanraj raj
ஜூலை 29, 2025 20:55

ஓடிபி எதுக்குப்பா கேக்குற நீ என்ன லட்ச கணக்குல பணம் போட்டு விடுறீங்க இந்த ஒடிபி தவறாக வழிநடத்தப்பட்டால் யார் பொறுப்பு இதே பிஜேபி செஞ்சா நீ ஒத்துக்குவியா திராவிட திருட்டு கூட்டம்


sankaranarayanan
ஜூலை 29, 2025 19:50

மக்கள் தானாக சுய விருப்பத்தின் அடிப்படையில் தி.மு.க.,வில் உறுப்பினராக சேர்ந்து வருகின்றனர்" அப்படியானால் எதற்காக ஓ.டி.பி யை இவர்கள் நாடவேண்டும் மத்திய நிவாரணங்களுக்கெல்லாம் ஸ்டிக்கர் ஓட்டுவதைப்போன்று ஓ. டி. பி என்ற ஒரு புனித கட்டுப்பாட்டை இவர்கள் நாசமாக்க பார்க்குகிறார்கள் இதை இவர்களிடம் விட்டுவிட்டால் நாடே நாசமாகிவிடும்


சசிக்குமார் திருப்பூர்
ஜூலை 29, 2025 17:53

நாளைக்கு ஒரு வடக்கன் போனில் கூப்பிட்டு நாங்கோ திமுகவில் இருந்து பேசுரோம் உங்களுக்கு முதல்வரு சில்வர் குடம் தரசொல்லுச்சு. உங்களுக்கு வேனும்ணா ஒரு ஓடிபி வரும் அதை சொல்லுங்கோ நான் கன்பாம் பண்ணிக்குது. நாளைக்கு காலையில் குடம் ஊட்டுக்கு வரும். இதை எப்படி தடுக்க முடியும்


N Srinivasan
ஜூலை 29, 2025 15:57

கபில் சிபல் எதிர் கட்சிகளின் ஆஸ்தான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பார்த்து நாளளது செய்வார். அவருடைய வருமானம் எவ்வளவு இருக்கும் ?


Padmasridharan
ஜூலை 29, 2025 13:03

"மக்கள் தானாக சுய விருப்பத்தின் அடிப்படையில் தி.மு.க.,வில் உறுப்பினராக சேர்ந்து வருகின்றனர்" இது உண்மையென்றால் அன்று அப்போல்லோவின் முன் பொதுமக்கள் கூட்டமாக வருத்தத்துடன் காத்திருக்க வேண்டுமே சாமி. ஏன் அங்கு செல்லவில்லை.


மணி
ஜூலை 29, 2025 11:37

திருட்டு கூட்டம்


Ramona
ஜூலை 29, 2025 11:32

இன்றே தடை உத்தரவு கிடைக்கலாம், அது வாதாடும் வக்கீலின் சிறப்பாகும். இந்த வழக்கு அந்த அற்புத வக்கீலுக்கு மேலும் புகழ் ,கெளரவம், முக்கியத்துவம் கிடைக்க உதவும் .


kmumaran
ஜூலை 29, 2025 11:21

எங்கோ இடிக்கிறது சமூகசேவகர் சுப்ரீம் கோர்ட்டை நாடியதும் அதற்கு முன்னாள் நீதிபதிகள் ஆதரவும்


ஆரூர் ரங்
ஜூலை 29, 2025 11:01

அதிகாரத்தில் உள்ள கட்சியின் ஆட்கள் கேட்கும் போது OTP கொடுக்க மறுத்தால் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்பது கோர்ட்டுக்கு நன்கு தெரிந்திருக்கும். இப்படிபட்ட கட்சிக்கு சாதகமாக அளிக்கப்படும் உத்தரவுகள் நாட்டையே அழிக்கும்.


raja
ஜூலை 29, 2025 10:34

சட்டத்தின் ஓட்டைகளை மிக அருமையாக பயன்படுத்தும் ஒரே கட்சி தி மு க. சாதிகளிலும் மாதத்திலும் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தது காங்கிரஸ் என்றால் , தமிழ் நாட்டை முழுமையாக கொள்ளையடித்தது தி மு க. எனும் தீண்டாமை கட்சி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை