வாக்காளர் விபரங்களை சேகரிக்கும் தி.மு.க.,: தேர்தல் நேர கவனிப்புக்கு தயாராகும் பட்டியல்
தேர்தலில் ஓட்டுகளை அள்ள, வாக்காளர் விபரங்களை சேகரிக்கும் பணியில் தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். இதன் வாயிலாக, முன் கூட்டியே பரிசு பொருள் வழங்கவும், தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா செய்யவும், தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8f4rg19j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து, தேர்தல் பணியை மேற் கொள்ளுமாறு தி.மு.க.,வின ருக்கு, அக்கட்சி தலைவரான முதல்வர் ஸ்டாலின், உத்தரவிட்டுள்ளார். மண்டலங்கள்
இதற்காக, 234 தொகுதிகளும் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மூத்த அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், மண்டல பொறுப்பாளர்கள், தேர்தல் பிரிவு நிர்வாகிகளுடன், முதல்வர் ஸ்டாலின், சென்னையில் ஆலோசனை நடத்தினார். சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் தொடர்பாக நடந்த அந்த கூட்டத்தில், தனியார் மற்றும் கட்சி சார்ந்த குழுவினர் மேற்கொண்ட கருத்து கணிப்பை முதல்வர் காண்பித்துள்ளார். மேலும், இழுபறியாகவும், அ.தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு சாதகமாகவும் உள்ள தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, தமிழகம் முழுதும் மண்டல பொறுப்பாளர்களாக உள்ளவர்கள், பணிகளை துவக்கி உள்ளனர். சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய வடக்கு மண்டலத்தில் 41 தொகுதிகள் உள்ளன. அந்த மண்டலத்துக்கு, அமைச்சர் வேலு பொறுப்பாளராக உள்ளார். அவர், தேர்தல் பணி தொடர்பாக, மாவட்ட, ஒன்றிய, பேரூர் செயலர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 'செப்., 26க்குள், வாக்காளர் விபரங்களை, பி.எல்.ஏ., எனப்படும் ஓட்டுச்சாவடி பாக முகவர் - 2க்கு கொடுத்த நோட்டில், குடும்ப வாரியாக சரி பார்த்து எழுத வேண்டும். ' தேர்தல் பார்வையாளர்கள் அனைவரும், இந்த பணியை, பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், பாக முகவர், பாக குழுவை வைத்து உடனே முடிக்க வேண்டும். இந்த விபரங்களை, தினமும் இரவு 7:00 மணிக்கு, வாட்ஸாப்பிலும் பகிரவேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. பரிசுபொருள்
இது குறித்து தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தி.மு.க., சார்பில், ஓட்டுச்சாவடிக்கு தலா ஒரு பாக முகவர் மற்றும் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என ஓட்டுச்சாவடி பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், வார்டு மற்றும் தெரு அடிப்படையில் வாக்காளர் விபரங்களை சேகரித்து வருகின்றனர். ஒரு குடும்பத்தில் எத்தனை ஓட்டுகள், வாக்காளர் ஜாதி, தொழில், கல்வி, தி.மு.க., அல்லது மாற்றுக்கட்சி, எந்த கட்சி அனுதாபி அல்லது நடுநிலை வாக்காளர் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்கின்றனர். இவற்றை, கட்சியின் தேர்தல் பணி நிர்வாகிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். அதன் பிறகு, அந்த பட்டியலின்படி, விரைவில் வீடு வீடாக பரிசு பொருள் வழங்கி வாக்காளர்களை கவர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் திருத்தப்பட்டியல் வெளியாகும்போது, அதை சரி பார்க்கவும் இந்த பட்டியல் உதவும். இது தவிர, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் ஓட்டு விபரங்கள் தெரிந்து விடும் என்பதால், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை, 'கவனித்து' ஓட்டுகளை அள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார் -- நமது நிருபர் - .