உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முருகன் மாநாட்டால் எங்களுக்கே லாபம் என்கிறது தி.மு.க.,

முருகன் மாநாட்டால் எங்களுக்கே லாபம் என்கிறது தி.மு.க.,

சென்னை : “நாங்கள் 100 மாநாடுகள் நடத்தி, தி.மு.க.,வுக்கு சேர்க்க வேண்டிய ஓட்டுகளை, ஒரே மாநாட்டில் எங்களுக்கு சேர்த்து கொடுத்துள்ளனர்,” என, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தெரிவித்தனர்.

சென்னை அறிவாலயத்தில், அவர்கள் அளித்த பேட்டி:

சமஸ்கிருத மொழிக்கு, மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி உள்ளது. இதனால், வடமொழிக்கு அவர்கள் முன்னுரிமை கொடுப்பது மீண்டும் உறுதியாகி உள்ளது.தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற காரணத்தால் தான், கருணாநிதி தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை வாங்கினார். சமஸ்கிருத மொழிக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவத்தை, மற்ற மொழிகள் உட்பட தமிழ் மொழியும் பெற முடியாமல் போனதால் தான், அனைத்து மாநிலங்களும் ஓரணியில் திரள வேண்டும் என்கிறோம்.முருக பக்தர்கள் மாநாட்டில், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை ஆகியோரை அவமதித்ததால், தமிழகமே கொதித்துப்போய் இருக்கிறது. அவர்களை பழித்தவர்கள் யாரும், தமிழக அரசியலில் தலையெடுத்தது இல்லை. அரசு நடவடிக்கை எடுக்குமா என மக்களே எதிர்பார்க்கும்போது, இதை பெரிதாக்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் இதை புறக்கணித்து விட்டனர். நாங்கள் 100 மாநாடு நடத்தி, தி.மு.க.,வுக்கு சேர்க்க வேண்டிய ஓட்டை, ஒரே மாநாட்டில் எங்களுக்கு சேர்த்து கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramesh Sargam
ஜூன் 28, 2025 22:39

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம். மதுரையில் அன்று நடந்த முருக பக்தர்கள் மாநாடு வெற்றியடைந்ததை பார்த்து திமுக போன்ற கட்சிகளுக்கு திண்டாட்டம், திண்டாட்டம்.


nv
ஜூன் 25, 2025 23:53

கூலிக்கு மாரடிக்கும் வேலைய இந்த திருட்டு திராவிட உபி நல்லா செய்யும், இந்த பாரதி!!


Saai Sundharamurthy AVK
ஜூன் 25, 2025 22:41

ஐந்து லட்சம் பேர் கூடிய இடத்தில் எந்த டாஸ்மாக் கடையிலும் வியாபாரம் களை கட்ட வில்லையாம். ஆகவே இந்து முன்னணி கொடிக் கம்பங்களின் அருகிலேயே வழி நெடுக திமுகவினரும் தங்கள் கொடிகளை நட்டு மனதை தேற்றிக் கொண்டனர். ஆர்.எஸ்.பி போன்றவர்களால் மாநாடு வெற்றி பெற்றதை சீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவர்களின் முகம் அதிர்ந்து போய், பேய் அறைந்தார் போல காணப்படுகிறது. ஆகவே, தங்கள் மனதை தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அண்ணா, பெரியார் போன்றவர்கள் எல்லாம் இனி வேலைக்கு ஆக மாட்டார்கள். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!! தமிழ்நாடு என்பது ஆன்மிக மண் !!!!


அரவழகன்
ஜூன் 25, 2025 18:25

டாஸ்மாக் காற்று வாங்கியதாம்.... அப்புறம் எப்படி தி.மு.க.லாபப்படும்..


எஸ் எஸ்
ஜூன் 25, 2025 10:19

இவர்களின் பேட்டியை பார்த்து சிரிப்பு சிரிப்பாக வருகிறது. தானாக கூடிய கூட்டத்தை பார்த்து திமுக மிரண்டு போய் இருப்பது இந்த பேட்டியில் இருந்தே தெரிகிறது.


Ragupathy
ஜூன் 25, 2025 09:25

பாரதி பெயரை வச்சிகிட்டு என்னென்ன புளுகறான் பாரு...


திகழும் ஓவியன், Ajax, Ontario
ஜூன் 25, 2025 08:47

மன்மோகன் தான் தமிழுக்கே செம் மொழி அந்தஸ்து கொடுத்தது. கட்டுமரம் அல்ல. கட்டுமர மாடல் தமிழை ... என்றது


Siva Balan
ஜூன் 25, 2025 08:18

அண்ணாவிற்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம்... அவரின் வாரிசுகள் ஏன் திமுகவில் இருந்து அடித்து விரட்டப்பட்டார்கள்....


MANNAI RAAJ
ஜூன் 25, 2025 08:02

பெரியாரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் உங்கள் கட்சியினர் மட்டுமே பேசுகிறார்கள் பொதுமக்களுக்கு அவர்களைப் பற்றி கவலை இல்லை எனவே தேவையில்லாமல் கனவு காண வேண்டாம். இன்னும் கேட்டால் உங்கள் கட்சியினர் கூட அவர்களைப் பற்றி பேசுவதில்லை நீங்கள் மட்டும் விளம்பரத்திற்கு அண்ணாவையும் பெரியாரையும் பயன்படுத்துகிறீர்கள்.


...
ஜூன் 25, 2025 22:48

நானும் இதைதான் நினைத்தேன் இப்போது நடப்பது நடத்தவேண்டியது பேசினால் போதும்


பேசும் தமிழன்
ஜூன் 25, 2025 07:53

வெளியே அப்படி தான் சொல்லி மனதை தேற்றிக்கொள்ள வேண்டும்.. வரும் தேர்தலில் ஏற்படப்போகும் தோல்வி பயம் ....மனக்கண்ணில் அப்பப்போ வந்து போகிறது ....எவ்வளவு காலம் தான் பயப்படாதது போல் நடிப்பது .....எப்படி ஒன்று கூடினார்கள் .....நாம் அவர்கள் ஒன்று சேரக்கூடாது என்று தான் ஜாதியை வைத்து அரசியல் செய்கிறோம். ??


முக்கிய வீடியோ