உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கரூரில் விஜய் பிரசாரத்தை முறியடிக்க: தி.மு.க.,வின் டேக் டைவர்ஷன் திட்டம்

கரூரில் விஜய் பிரசாரத்தை முறியடிக்க: தி.மு.க.,வின் டேக் டைவர்ஷன் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தில், தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்காமல் தடுக்க, அக்கட்சி நிர்வாகிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதுடன், வாகனங்களில் வருவோரை திசைதிருப்ப , 'டேக் டைவர்ஷன்' திட்டத்தை செயல்படுத்த, கரூர் மாவட்ட தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. த.வெ.க., தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், வரும் டிச., 20ம் தேதியுடன் முடிவதாக இருந்தது. ஆளும் கட்சி தரப்பில் அனுமதி தருவதில் இழுபறி ஏற்படுத்துவதால், அடுத்த ஆண்டு பிப்., 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0i0jow6z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதிர்வலை மக்கள் சந்திப்பு பயணத்தில் அவரது பேச்சு, தி.மு.க., வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நாளை கரூரில் நடிகர் விஜய் மக்களை சந்திக்கிறார். அவரது சுற்றுப்பயணத்தை தோல்வி அடைய வைக்க, கரூர் மாவட்ட தி.மு.க., களமிறங்கி உள்ளது. த.வெ.க., தொண்டர்களுக்கு மொபைல் போன், டி - சர்ட், பேன்ட் போன்ற பரிசுகள் வழங்கி, தங்கள் பக்கம் திருப்பி வருகின்றனர். இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கரூர் மாவட்டம் தி.மு.க., கோட்டை என்பதை நிரூபிக்க, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க., முப்பெரும் விழாவை பிரமாண்டமாக நடத்திக் காட்டினார். தற்போது, கரூரில் விஜய் மக்கள் சந்திப்பு பயணம் வெற்றி அடையாமல் இருக்க, அதிரடி திட்டத்தோடு களமிறங்கி உள்ளார். அதன்படி, த.வெ.க., நிர்வாகிகள், தொண்டர்களை இழுக்கும் வேலை நடக்கிறது. அவர்களுக்கு மொபைல் போன், டி - சர்ட், பேன்ட் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதை தடுக்க முடியாமல், த.வெ.க.,வினர் திணறி வருகின்றனர். தங்கள் நிர்வாகிகள் குறித்த விபரங்களை பேனர்களில் போட வேண்டாம்; மாவட்டச் செயலர் படத்தை மட்டும் போட்டால் போதும் என த.வெ.க., தலைமையில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. 4 இடங்கள் விஜய் பேசுவதற்கு, கரூர் லைட் ஹவுஸ் கார்னர், வெங்கமேடு எம்.ஜி.ஆர்., சிலை, ஈரோடு வேலுசாமிபுரம், 80 அடி சாலை ஆகிய நான்கு இடங்களை, த.வெ.க.,வினர் தேர்வு செய்தனர். ஆனால், போலீஸ் தரப்பில், வேலுசாமிபுரம் பகுதியில் மட்டும் பிரசாரம் செய்ய இடம் ஒதுக்க முடிவெடுத்துள்ளனர். கரூர் மாநகருக்குள் அணிவகுக்கும் விஜய் ஆதரவாளரின் வாகனங்களை தடுக்கும் திட்டமாக, சாலை பணியை காரணம் காட்டி, 'டேக் டைவர்ஷன்' வாயிலாக, வேறு பாதைக்கு திருப்பி விடும் திட்டமும் உள்ளது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

pakalavan
செப் 27, 2025 14:18

இங்க குறிப்பிட்ட 4 இடமும் மிகவும் சிக்கலான சாலை, அதனால் தான் வையாபுரி்நகரில் அனுமதி தரப்பட்டுள்ளது, நேற்று எடப்பாடி அங்கதான் வந்தார், அன்புமனிக்கும்்அந்த இடம்தான் தரப்பட்டுள்ளது, சின்டு முடியும் வேலை எதுக்கு ?


kamal 00
செப் 27, 2025 10:17

பாலாஜி சொத்து காலி ஆகுற வரை மக்கள் வாங்கிகிட்டே இருங்க


Vasan
செப் 26, 2025 21:04

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை, விஜய் மாநாடு நடக்கும் ஊர்களில், லாக் டவுன் அறிவித்து விடலாமே.


சாமானியன்
செப் 26, 2025 14:55

தேர்தலுக்கு ஆறுமாதம் இருக்கும்போது கவர்னர் ஆட்சி ஏற்படுத்தனும். திமுக சார்பு போலீஸ், அரசு அதிகாரிகளை கண்கானிக்கனும்.


Mr Krish Tamilnadu
செப் 26, 2025 14:35

ஏம்பா நீ அரசியல்வாதி தானே, எனக்கு ஒரு சந்தேகம். ஓட்டு எனக்கு விழும்மா?. விழாதா?. செந்திலு, செந்திலு. ஓட்டு விழாதுகிறாதா, ஒரு சில அறிகுறிகளை வைச்சு தெரிஞ்சுக்கலாம். தூரத்திலா பைக் சத்தமா கேட்குதா?. ஆமாம் கேட்குது. ஜய், ஜய். என்னப்பா?. டிவியில் எல்லாம் உங்கள் விஜய், உங்கள் விஜய் னு பாட்டு கேட்குதா?. ஆமாம் கேட்குது. வழிநெடுக னர் னர் பேனரா இருக்குதா?. ஆமாம் இருக்குது. லேசா தலை தலையாய் மக்கள் கூட்டமா கிளம்பி வர மாதிரி இருக்குதா?. ஆமாம் கிளம்பிட்டாங்களே, நம்மலா மறந்து கிளம்பிட்டாங்களே.


Haja Kuthubdeen
செப் 26, 2025 14:26

விஜய்னா அவ்ளோ பயம் திமுகவிற்கு...


Vasan
செப் 26, 2025 14:25

காலஞ்சென்ற நடிகர் கலைமாமணி விவேக் அவர்களின் நகைச்சுவை காட்சி நினைவுக்கு வருகிறது. அவர்க்கு take diversion கொடுத்து ஆந்திராவுக்கே அழைத்து சென்று விடுவார்கள், சென்னையில் இருந்து. அது போல இவர்கள் கரூரிலிருந்து கேரளா போகாமல் இருந்தால் சரி.


Raju, Assam
செப் 26, 2025 10:37

ஒரு நடிகரைப் பகைத்தார்....பகைத்தவரின் கட்சி சுமார் 12 வருடங்கள் எழுந்திருக்க முடியவில்லை... இன்று மற்றொரு நடிகர் இன்னொரு நடிகரை முடக்கப் பார்க்கிறார்.... முடிவில் ஆட்சி அதிகாரத்தை இழந்து அரசியல் அனாதை ஆகப்போகிறார். சரித்திரம் திரும்புகிறது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 26, 2025 13:24

இந்த நடிகரின் டைரக்டரே திமுக தான்.


எஸ் எஸ்
செப் 26, 2025 09:02

விஜய் வெற்றி பெற திமுக நிர்வாகிகள் கடுமையாக உழைக்கின்றனர்


Moorthy
செப் 26, 2025 07:27

இது போன்ற குறுக்கு வழி சூழ்ச்சிகளால் மாற்று பாதையில் நடு நிலை வாக்காளர்களும் செல்ல துவங்கி விடுவர்


சமீபத்திய செய்தி