உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தீபாவளி இனிப்புகளில் விலங்கு கொழுப்பு இருக்கா?

தீபாவளி இனிப்புகளில் விலங்கு கொழுப்பு இருக்கா?

கோவை : தீபாவளி இனிப்புகளில் விலங்கு கொழுப்பு எதுவும் கலக்கப்படவில்லை என, உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.சமீபகாலமாக, இனிப்புகளில் விலங்கு கொழுப்பு சேர்ப்பது குறித்து, பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இனிப்புகளை பொறுத்தவரை, லட்டு போன்ற இனிப்புகளில் பசும் பாலிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய், நெய் பயன்படுத்தப்படுகின்றன.தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், கோவையில் விற்பனையாகும் இனிப்புகளில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக, புகார் ஏதும் வந்ததா என, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ் செல்வனிடம் கேட்டோம்.

தமிழ்செல்வன் கூறியதாவது:

கோவையில், இனிப்புகளில் விலங்குகள் கொழுப்பு எதுவும் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறு விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தால், இனிப்புகளின் வாசனையில் இருந்தே தெரிந்துவிடும்.தீபாவளிப் பண்டிகையை பொறுத்தவரை, இனிப்புகளில் நெய்க்கு பதிலாக பாமாயில், வனஸ்பதி பயன்படுத்தப்படும். இதை தடுக்க தொடர் ஆய்வு நடத்தப்படுகிறது. தீபாவளி இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.அதன்படி, அனுமதிக்கப்பட்ட நிறங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பால் மூலம் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை, மூன்று நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது. அடைக்கப்பட்ட எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.பிற எண்ணெய்களை பயன்படுத்தக் கூடாது. இனிப்புகளை தயாரிக்க, ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை, மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட, பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.சூடான உணவுகளை, பிளாஸ்டிக் டப்பாக்கள், பைகளில் வைத்திருக்கக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருட்களில், அனைத்து விபரங்களும் தெளிவாக கூறப்பட்டிருக்க வேண்டும். தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்கள் புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.கோவையில், இனிப்புகளில் விலங்குகள் கொழுப்பு எதுவும் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறு விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தால், இனிப்புகளின் வாசனையில் இருந்தே தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அல்போன்ஸ்
அக் 16, 2024 18:13

கொழுப்பு கலந்தா அதுக்கு தனியா 5 சதவீதம் ஜி.எஸ்.டி போட்டு தாளிச்சுருவாங்க ஒரு அம்மா.


அப்பாவி
அக் 16, 2024 16:31

என்னத்த கலந்து குடுத்தாலும் துண்றதுக்கு ஆளுங்க இருக்காங்கோ. வீட்டில் சனைக்க போரடிக்குதுங்கோ. கடை பிரியாணி, பலகாரம் வாசனை தூக்கலா சூப்பரா இருக்குங்கோ. லேபில் மேலே சுத்தமான பசு நெய்யில் செஞ்சதுன்னு ஒட்டித் தருவோம்கோ. நாமதான் வல்லரசுங்கோ.


ஆரூர் ரங்
அக் 16, 2024 15:43

அந்த புதிய ஈர வெங்காய சீடரின் மகிழ்ச்சி 2 பவன் இனிப்புகளை நம்பி வாங்க ஆளில்லை.


Nandakumar Naidu.
அக் 16, 2024 10:39

இருக்கலாம், யார் கண்டது? இப்போதெல்லாம் விவேகம்,நீதி,நேர்மை எல்லாம் கிலோ எவ்வளவு என்று கேட்கும் நிலை உள்ளது. ஹிந்து விரோதிகள் தயாரிக்கும் இனிப்புகளில் விலங்குகள் கொழுப்பு இருக்கலாம். ஹிந்துக்கள் கவனமாக இருக்க வேண்டும்.


கிருஷ்ணதாஸ்
அக் 16, 2024 09:13

எதுவும் தவறில்லை!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை