உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / போன் நம்பர் எதுக்கு கேக்கறாங்க தெரியுமா... நான் சொல்லவே தேவையில்லை: பழனிசாமி

போன் நம்பர் எதுக்கு கேக்கறாங்க தெரியுமா... நான் சொல்லவே தேவையில்லை: பழனிசாமி

சேலம் : சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,விற்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டு, நேற்று திறப்பு விழா நடந்தது. அலுவலகத்தை திறந்து வைத்த பின், கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அளித்த பேட்டி:அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வலிமையாக உள்ளது. இதில் யாரும் குழப்பம் ஏற்படுத்த முடியாது. வரும் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம். அடுத்தாண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை துவங்கி உள்ளனர். நான்கரை ஆண்டுகளாக எதையும் செய்யாமல், ஆட்சியின் இறுதி கட்டத்தில் புதிது புதிதாக ஏதேதோ சொல்லி, மக்களை ஏமாற்றப் பார்க்கின்றனர். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் வாயிலாக தி.மு.க.,வினர் வீடு வீடாகச் சென்று, ஒவ்வொருவரின் மொபைல் எண்ணையும் குறித்துக் கொள்கின்றனர். இதெல்லாம் எதற்காக பயன்படுத்த போகின்றனர் என்பதை நான் சொல்ல தேவையில்லை. இப்படி சேகரிக்கப்படும் அனைத்து எண்களும், தி.மு.க.,வின் ஐ.டி., அணிக்குச் செல்கிறது. அவர்கள் தேர்தல் நேரத்தில் அதை ஓட்டுக்காக பயன்படுத்துவர். அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்றார். மக்கள் முன் ஒரு பெட்டியை வைத்து, அதில் குறைகளை எழுதிப் போடுங்கள்; ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் பிரச்னையை தீர்க்கிறேன் என்றார்.நான்காண்டுகள் கடந்த பின்பும், ஒரு பிரச்னையும் தீரவில்லை. ஆனால், பெட்டி காணாமல் போய் விட்டது. அ.தி.மு.க., கட்டணியின் மவுசு மக்களுக்கு தெரியத் தெரிய, நிறைய கட்சிகள் கூட்டணி நோக்கி வரும்.கனிம வளத் துறை உள்பட தமிழகத்தின் அனைத்து துறைகள் வாயிலாகவும் கொள்ளையோ கொள்ளை நடக்கிறது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஒவ்வொரு துறை ஊழல் மீதும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்பாவி
ஜூலை 15, 2025 21:12

நீங்க கேஷா குடுங்க.


என்றும் இந்தியன்
ஜூலை 15, 2025 17:59

போன் நம்பர் கேட்பது இதற்கு தான். இப்போது cyber crime என்னும் செயல் கொடி கட்டி பறக்கின்றது. அதன் காரணம் 1 இப்போதே இந்த நம்பருக்கு போன் செய்து நீங்கள் யாருக்கு ஒட்டு போட்டீர்கள் என்று சொல்லவும். உங்கள் போன் செய்தி கிடைத்தவுடன் உங்கள் பேங்க் அக்கௌன்ட் நம்பர் சொல்லவும் உங்களுக்கு ரூ. ......... உங்கள் பங்குக்கு அனுப்பப்படும் என்று வரும் அதற்குத்தான் இந்த போன் நம்பர் இல்லையென்றால் இப்படியும் இருக்கும். தோற்று விட்டால் அந்த போன் நம்பரிலிருந்து பணம் பறிக்கப்படும்.


ஆரூர் ரங்
ஜூலை 15, 2025 11:59

போன் நம்பர் வாங்குவது சதுரங்க வேட்டைக்குதான். வலையில் மாட்டினா அழிவுதான்.


SUBBU,MADURAI
ஜூலை 15, 2025 13:37

இந்த முதுகு குத்தி எடப்பாடியை போட்டு பொளப்பதா அல்லது இப்போதைக்கு வேணாமா என்று ஒரே குழப்பமா இருக்கு ஏதனுக்கும் கொஞ்ச நாளைக்கு விட்டு வைப்போம் அதன்பிறகு தூக்கிப் போட்டு. .


Rajan
ஜூலை 15, 2025 09:36

This may enable to send mo ey thro gpay or other sources before election date.


raja
ஜூலை 15, 2025 09:35

கோபால புற திருட்டு திராவிட ஓங்கோல் கொள்ளை கூட்ட பரம்பரை கோமாளிகளுக்கு தமிழன் வரும் தேர்தலில் நன்றாக கூரிய ஆப்பை அடிக்கவேண்டிய இடத்தில் அடித்து ஆழமாக செருகுவார்கள்...


அருண், சென்னை
ஜூலை 15, 2025 08:37

போன் ந வைத்து தேர்தல் நேரத்தில் போன் செய்து, யாருக்கு ஓட்டுன்னு கேட்டு, அவர்களின் பெயரை நீக்கிவிடுவார்கள்...இது போன பாராளுமன்ற தேர்தலில் நடந்தது.. பட்டியில் அடைத்து வோட்டு வாங்கி ஜெயத்தது ஞாபகம் இருக்கா? மேலும் 1 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் நடந்தது.... எப்படியாவது அராஜகம் செய்து வோட்டு வாங்கிய ஆகனுமகிறதுல தீர்கமா இருக்காங்க திமுகாகரனுங்க.. பதவி வெறி... கொலை, கொள்ளை, கற்பழிப்புக்கு பஞ்சமே இல்லை இவர்கள் ஆட்சியில்... விலைவாசி ஏற்றம் உச்சகட்டம்... மதம் பிறகு விலைவாசி ஏற்றம் இசுலாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் நல்லதா? என்ன உழச்சாலும், அது இப்போ இருக்க முதல் குடும்பத்துக்கதான் உழைக்கிறீர்கள் என்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கோ, உங்கள் குழந்தைகளின் முன்னேற்றுத்துக்காக அல்ல, இது எப்போ மக்களுக்கு புரியுதோ அப்போதான் தமிழ்நாடு உருப்படும்... sun நெட்ஒர்க், கலைஞர் டிவி, புதியாதலைமுறை சேனல்கள் முற்றிலும் பொய் செய்தி பரப்புகிறார்கள்... இதுவெல்லாம் DMK சேனல்ன்னு மக்களுக்கு புரிவதில்லை


அப்பாவி
ஜூலை 15, 2025 08:34

இருக்குற ஜன் தன் வங்கி கணக்குகளை இழுத்து மூடுங்க. மெடல் குத்திக்க்ட்டது போதும்.


vivek
ஜூலை 15, 2025 08:49

அதுதானே பார்த்தேன்...நீ என்னைக்கு அறிவோட கருத்து போட்டிருக்கே


SUBBU,MADURAI
ஜூலை 15, 2025 19:13

இந்த அப்புசாமி ஒரு மன நோயாளி எப்போதும் எதிர்மறை கருத்துகளை மட்டும் தான் போடுவார்.


Padmasridharan
ஜூலை 15, 2025 07:33

இவங்க ரெண்டு பேருமே ஜெயிக்க போறதில்ல. ஏதோ கமல் தனிச்சு நிக்கறாருனு போட்ட ஓட்டுக்கள் விஜயம் செய்கிற கட்சிக்கு போகும். NOTA வ எடுத்துட்டாங்கன்னா அதுவும் இவருக்கு சேரும்.


Muralidharan S
ஜூலை 15, 2025 07:10

விஞ்ஞான பூர்வமாக கண்டுபிடிக்க முடியாதபடி தகிடுதித்தம் செய்வதில் கைதேர்ந்தவர்கள்... தேர்தல் கமிஷன் அரசியல் கட்சிகள் மொபைல் செயலிகள் - GPay, PhonePay, Paytm - UPI மூலம் பணம் பரிவர்த்தனை செய்து ஓட்டுக்கு பணம் தருவதை தடுக்கவேண்டும்.


பாபு
ஜூலை 15, 2025 06:35

ஃபோன் நம்பர் கேட்பதும் அதை வைத்து IT செல் மூலம் அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடுவதும் தனி மனித உரிமை மீறல்கள். வழக்கு போட்டு இதை நிறுத்த வேண்டும்.


முக்கிய வீடியோ