உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துரை வைகோ - மல்லை சத்யா மோதல்; 20ல் நிர்வாகக்குழு கூட்டம்: வைகோ

துரை வைகோ - மல்லை சத்யா மோதல்; 20ல் நிர்வாகக்குழு கூட்டம்: வைகோ

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரைக்கும், துணை பொதுச்செயலர் மல்லை சத்யாவுக்கும் இடையே, மோதல் தீவிரம் அடைந்துள்ளது. மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்க, திருச்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதால், அக்கட்சி இரண்டாக பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. அவர்கள் இருவரையும் சமரசப்படுத்த முயற்சித்து வரும் வைகோ, வரும் 20ல் ம.தி.மு.க., நிர்வாகக்குழு கூட்டம் நடக்கும் என அறிவித்துள்ளார்.

எதிர்ப்பு குரல்

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் மகன் துரை, கட்சியின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முக்கிய மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், கட்சியில் இருந்து வெளியேறினர். அப்போது கட்சி துணை பொதுச்செயலர் மல்லை சத்யா வெளியேறாமல், கட்சியிலேயே இருந்தார். தற்போது, அவருக்கும், துரைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மோதலாக உருவெடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து, துரை ஆதரவாளர்கள், மல்லை சத்யாவுக்கு எதிராக குரல் எழுப்ப துவங்கி உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=djkv0m6i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருச்சி நிர்வாகிகள் கூட்டத்தில், அவரை கட்சியில் இருந்து நீக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ம.தி.மு.க., தொழிலாளர் முன்னணி சார்பில், சென்னை தாயகத்தில் நேற்று முன்தினம் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில், புதிய நிர்வாகிகள் நியமனத்தில், முறைகேடு நடந்துள்ளது, ஜாதி அடிப்படையில் பதவி வழங்கப்பட்டுள்ளது என, சில நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். அதைத் தொடர்ந்து, நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். கூட்டத்திலிருந்து வெளியேறிய துரை, 'கட்சியின் முதன்மை செயலர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.தாயகத்தை விட்டு கோபமாக வெளியேறிய துரையிடம், அவரது ஆதரவாளர் ஒருவர் ஓடி வந்து, 'நீங்க எந்த முடிவும் எடுக்க வேண்டாம்; நான் சம்பவம் செய்துவிட்டு ஜெயிலுக்கு போகிறேன்' என்றார். அதை கண்டுகொள்ளாமல் துரை புறப்பட்டு சென்றார். இம்மோதல் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக, துரை ஆதரவாளரும், வழக்கறிஞருமான சத்தியகுமாரன் அறிக்கை: ம.தி.மு.க.,வில் 30 ஆண்டுகள் அல்ல; 300 ஆண்டுகள் உழைத்திருந்தாலும், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, வைகோ, துரை மட்டுமே ம.தி.மு.க.,வின் அடுத்த பரிணாமம். இதை ஏற்பவர்கள் இருக்கலாம். மறுப்பவர்கள் உடனே வெளியேறி செல்லலாம். ம.தி.மு.க.,வை உடைத்து விடலாம். கட்சியில் பிளவு ஏற்படுத்தலாம்.தாயகத்தை நெருங்கி விடலாம் என, நினைக்கும் துரோகிகளுக்கு சொல்வேன். வைகோ, துரையின் கட்டளையை ஏற்காத, பின்பற்றாத, மதிக்காத யாராக இருந்தாலும், பெட்டியை கட்டிக் கொண்டு, வாயை பொத்திக் கொண்டு, வந்தவழியே சென்று விடுங்கள். இது துரையோட காலம் என்பதை எதிரிகளும், துரோகிகளும் உணரும் காலம் வந்துவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திரைப்பட பாணி பதிவு

அதற்கு பதிலடியாக மல்லை சத்யா வெளியிட்ட அறிக்கை: ம.தி.மு.க.,வில் 32 ஆண்டுகள் அல்ல; 300 ஆண்டுகள் உழைத்தாலும், நீங்கள், எங்கள் அடிமைகளாக கைகட்டி வாய் பொத்தி இருக்க வேண்டும் என மாமன்னன் திரைப்பட பாணியில் பதிவிட்டுள்ளீர்கள். ம.தி.மு.க.,வில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு வெகுமானமாக, புற்றுநோய், பகட்டு வேஷம், நம்பிக்கை துரோகி, பத்தினி வேஷம், வெளியேறுங்கள் என்ற விருதுகளை எனக்கு தந்துள்ளனர்.'விளிம்பு நிலை தலைமுறையில் இருந்த, என்னை குடத்தில் இட்ட விளக்காக, என்னை குன்றின்மேல் வைத்து அழகு பார்த்து, அரசியல் அங்கீகாரம் வழங்கிய வைகோவுக்கு காலம் முழுதும் நன்றியோடு இருப்பேன். என் விசுவாசம், நம்பகத்தன்மையை வைகோ அறிவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இரு தரப்பினரும் மோதல் போக்கை கடைப் பிடிப்பதால், அக்கட்சி இரண்டாக பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்க்கவும், மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், வரும் 20ம் தேதி, ம.தி.மு.க., நிர்வாகக்குழு கூட்டம் தாயகத்தில் நடக்கும் என, வைகோ அறிவித்துள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Bharath
ஏப் 16, 2025 09:00

சத்திய அண்ணன் இல்லனா அப்பா பையன் மட்டும் கட்சில இருக்க வேண்டியதுதன் வேறயாரும் உங்களுக்கு வோட்டை போடமாட்டாக நீங்க உங்க பையன் வச்சி வோட்டை வாங்கவேண்டியதுதான் சத்திய அன்னான் உங்க கட்சில இருக்குறது உங்களுக்கு தன் நல்லது


Balaji amman c
ஏப் 15, 2025 14:58

மல்லை சத்யா அவர்களின் பங்கு இல்லாமல் மதிமுக இருக்க முடியாது இது எங்களை போன்ற அனைவருக்கு தெரியும்


Venugopal, s
ஏப் 14, 2025 22:02

யாரு வைகோ வா? அப்படின்னா யாரு அது? ஓ கள்ள தோணி? மனிப்பு கேள் மன்னிப்பு கேள் அப்டின்னு கூவும்


VENKATASUBRAMANIAN
ஏப் 14, 2025 19:04

இதெல்லாம் ஒரு கட்சி. வைகோவை போல் ஒருவரை பார்க்க முடியாது. ஸ்டாலினை எதிர்த்து கேவலமாக பேசி கட்சி ஆரம்பித்து இப்போது மகனுக்காக அவர் காலடியில் வீழ்ந்து கிடக்கிறார். இன்னுமா இவரை நம்புகிறீர்கள்.


Haja Kuthubdeen
ஏப் 14, 2025 19:02

அதிக பட்சமா 4சீட்டுகள் மட்டுமே வைகோ கட்சிக்கு திமுக ஒதுக்கும்.அதற்கு மேல் ஒர்த் இல்லை...கூட்டணியில் இருப்பதால் இந்த இடங்கள் கொடுக்கும்.


rama adhavan
ஏப் 14, 2025 14:58

பேசாமல் வைகோ, அவர் மகன் முதலானோர் ஆதாரவாளர்களுடன், யாராவது ஓரிருவர் இருந்தால் திமுகவில் சேர்ந்து விட்டு கட்சியை மல்லை சத்தியாவிடம் கொடுத்து விடலாம்.


hariharan
ஏப் 14, 2025 12:03

மொத்தமே நாலு பேர் மட்டுமே இருக்கிறார்கள். இதிலென்ன சண்டை.மருதமலை சினிமாவில் போண்டா மணி, வடிவேலுவை வியாபாரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் ஓரமாக நிற்கச்சொல்லும் சிங்கமுத்து நினைவு வருகிறது.


நிக்கோல்தாம்சன்
ஏப் 14, 2025 11:34

நேபோட்டிசத்தை எதிர்த்து போராடுவது வரவேற்க தக்கது


நிக்கோல்தாம்சன்
ஏப் 14, 2025 18:25

மதிமுகவில் ஒரு ஆண்மகனாவது இருக்கான் , ஆனால் அதன் தாய் கழகத்தில் ?


கண்ணன்
ஏப் 14, 2025 11:34

அக்கட்சியில் உள்ள அனைவருமே முறையான படிப்பறவற்றோர் என்னது தெளிவாகிறது


பேசும் தமிழன்
ஏப் 14, 2025 10:43

ஏண் உங்களுக்கு எல்லாம் அறிவே கிடையாதா.. அவர் அப்பாவே... அது தான் அந்த வைகோ.... அவருக்காக தீக்குளித்து இறந்த ஆட்களை குடும்பத்தை தெருவில் விட்டு விட்டு.. அதே திமுக கட்சியுடன் பதவிக்காக கூட்டணி சேர்ந்து கொண்டு.... தனக்கும் தன் மகனுக்கும் MP பதவி பெற்று சொகுசு வாழ்கை வாழ்கிறார்கள்.... இன்னுமா அவர்களை நம்புகிறீர்கள் ???..... உங்களை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது


புதிய வீடியோ