உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோவையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு! நில அதிர்வு பதிவு மையம் துவக்கம்

கோவையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு! நில அதிர்வு பதிவு மையம் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில், கோவை மூன்றாவது பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதால், நில அதிர்வை பதிவு செய்யும் மையம், கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டது.நில அதிர்வுகள் மற்றும் நிலநடுக்கத்தை மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நிலநடுக்கவியல் மையம்(என்.சி.எஸ்.,) கண்டறிந்து வருகிறது. நில அதிர்வு மற்றும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து, அங்கு அதற்கான புதிய கருவிகளை மையம் பொருத்தி வருகிறது. தமிழகத்தில் இதுபோன்று சென்னை, கொடைக்கானல், சேலம் மாவட்டங்களில் ஏற்கனவே நில அதிர்வு மற்றும் நிலநடுக்கத்தை கண்டறிவதற்கான மையங்கள், செயல்பட்டு வருகின்றன.கருவிகளில் இருந்து பெறப்படும் நில அதிர்வு அளவீடுகள், டில்லியில் உள்ள என்.சி.எஸ்., ன் தலைமையகத்தில் பெறப்படும். நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் பிரிவு, 2 மற்றும், 3 என, வகைப்படுத்தப்பட்டு, அங்கு கருவிகள் பொருத்தப்படும். நில அதிர்வு மற்றும் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில், கோவை மூன்றாவது பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, என்.சி.எஸ்., சார்பில், பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நில அதிர்வு கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டது. புதிதாக நிறுவப்பட்டுள்ள மையத்தில், டிஜிட்டல் சீஸ்மோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் பிராந்திய மிகக்குறைந்த அளவிலான அதாவது, 1.0 முதல், 3.0 அளவிலான பூகம்பங்களை பதிவு செய்ய முடியும்.

புது மையத்தால் கண்டறியலாம்'

என்.சி.எஸ்., விஞ்ஞானி டாக்டர் அம்பிகாபதி அம்மானி கூறியதாவது: மத்திய புவி அறிவியல் அமைச்சகம், கோவையை 'சீஸ்மிக் ஹசார்ட் மைக்ரோசோனேஷன்' என்ற வரையறைக்குள் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தின் மாநில பேரிடர் மேலாண்மையுடன் ஒருங்கிணைந்து, புதிய கண்காணிப்பு மையத்தை நிறுவியுள்ளோம். இம்மையம் வாயிலாக, 2,000 கிலோ மீட்டர் வரையிலான துாரத்துக்குள் ஏற்படும், நில அதிர்வு மற்றும் நிலநடுக்கத்தை கண்டறிய முடியும். கடந்த அக்., மாதம், கோவை, விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில், நான்கு புதிய கண்காணிப்பு மையங்களை நிறுவியுள்ளோம். நில அதிர்வு அபாய மதிப்பீட்டு ஆய்வுக்காக, கோவையை அடையாளம் கண்டு புதிய மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான தேவை. மற்ற மூன்று மையங்கள், தாசில்தார் அலுவலகங்களில்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் தாசில்தார், கலெக்டர் அலுவலகங்களின் அருகில், ரயில்வே ஸ்டேஷன் இருப்பதால், ரயில்கள் இயக்கத்தால், நில அதிர்வு அளவீடு பாதிக்கப்படும். இதைக்கருத்தில் கொண்டே பாரதியார் பல்கலை தேர்ந்தெடுக்கப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Barakat Ali
டிச 09, 2024 13:54

சென்னைக்கும் அதே அளவு சாத்தியக்கூறுகள் இருக்க வாய்ப்பு .......


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 09, 2024 12:14

சில நாட்களுக்கு முன்னர் டிசம்பர் 1 2 3 தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்யும் 1977 பின்னர் மிகப்பெரிய அளவில் மழை பொழிவு இருக்கும் என்ற செய்தி தற்போது ஞாபகத்துக்கு வந்தது. அதனால் பதிவிட்டேன்.


கிஜன்
டிச 09, 2024 10:33

நிலநடுக்க நிவாரண நிதி.. டார்கெட் .... எவ்வளவுன்னு மட்டும் சொல்லிடுங்க


சம்பர
டிச 09, 2024 06:10

கோவைக் கெல்லாம் வராது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை