வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Passport Visa Emigration எதுவுமே தேவையில்லை ஹாயாக பறந்து வந்து இங்கு தங்கலாம் போகும் போது தன் குஞ்சுகளுடன் சந்தோஷமாக மீண்டும் தன் தாய்நாட்டிற்கு பறந்து செல்லலாம்.
திருப்பூர்: திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில், பல்வேறு வகையான உள்நாடு மற்றும் வெளிநாடு பறவைகள் வலசை வரத்துவங்கியுள்ள நிலையில், புதியதாக ஐரோப்பிய நாடுகளை வாழ்விடமாக கொண்ட பறவை தென்பட்டுள்ளது.திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டிலுள்ள நஞ்சராயன் குளம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், நவம்பர் துவங்கி, ஜன., வரை, பல்வேறு வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது வழக்கம். திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன், உறுப்பினர்கள் நந்தகோபால், சந்தோஷ் மற்றும் ராமசாமி ஆகியோரின் தேடலில், ஐரோப்பிய, ஆப்ரிக்க மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் தென்படும், 'யுரேசியன் ரைநெக்' என்ற பறவை நஞ்சராயன் குளத்தில் தென்பட்டுள்ளது.திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:
நஞ்சராயன் குளத்தில், இதுவரை, 188 வகையான பறவைகள் வந்து செல்வதற்கான பதிவு உள்ள நிலையில், தற்போது, 189வது வகை பறவையாக, 'யுரேசியன் ரைநெக்' பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில், மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடுங்குளிரில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள, இவ்வகை பறவைகள் மிதவெப்ப பகுதிக்கு வலசை வருவது வழக்கம். அந்த வகையில் திருப்பூருக்கு, புதிய வரவாக 'யுரேசியன் ரைநெக்' பறவை வந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன் உப்பாறு அணைப்பகுதியில் தென்பட்ட இப்பறவை, தற்போது, நஞ்சராயன் குளத்துக்கு வலசை வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Passport Visa Emigration எதுவுமே தேவையில்லை ஹாயாக பறந்து வந்து இங்கு தங்கலாம் போகும் போது தன் குஞ்சுகளுடன் சந்தோஷமாக மீண்டும் தன் தாய்நாட்டிற்கு பறந்து செல்லலாம்.