வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வடிகால் பேக்கேஜ் சிறப்பாக பயன்பட்டது என திமுக பெருமை பேசுகிறது. அதற்கு தானைத் தலைவரின் பெயரை வைத்து இன்னும் பெருமைப்படலாம்
நாகர்கோவிலில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி: தமிழகத்தில் அரசு நலத் திட்டத்துக்கு பெயர் வைக்க, கருணாநிதியை தவிர வேறு முன்னோர்கள் யாரும் கிடையாதா. முதல்வர் ஸ்டாலினுடைய அப்பா கருணாநிதிக்குப் பின்னால் தான், நாடும் மக்களும் இருக்க வேண்டுமா.ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க அரசு கஜானாவில் காசு இல்லை. பகுதி நேர ஆசிரியர்களுக்கும் சம்பளம் கொடுக்க காசு இல்லை. ஆனால், கருணாநிதிக்கு சமாதி கட்ட மட்டும் எங்கிருந்து வருகிறது காசு?இப்படி ஏற்புடையவற்றை, நியாயமானவற்றை செய்யாததாலேயே, நான் ஆட்சிக்கு வந்ததும் அரசு செலவில் வீண் விரயமாக்கப்படும் சமாதியை இடிப்பேன் என சொல்கிறேன். என் கட்சிக்கு ஓட்டு செலுத்துவோர் யார் என்பதை பார்க்க வேண்டும். பொழுதுபோக்கு தளத்தில் இருந்து கொண்டு தலைவர்களை தேடுபவர்கள், என்னை விரும்புவதில்லை. அவர்களுக்கு நேர்மாறானவர்கள் தான் என்னை விரும்புகின்றனர். போராட்டக் களத்தில் தலைவனை தேடும் மக்கள் தான், என்னை பின் தொடர்வர். காற்று அடிக்கும் திசையில் பறக்கிற பதர்கள் எல்லாம், எனக்கு ஓட்டு செலுத்தப் போவதில்லை. புயலே அடித்தாலும் அதே இடத்தில் இருக்கிற நெல்மணிகள் போன்றோர் தான் எனக்கு ஓட்டு செலுத்துவர்.'நாம் தமிழர் கட்சியின் ஓட்டுகள் சிதறுகின்றன. அது த.வெ.க-.,வுக்கு போகிறது' என, சொல்கின்றனர். த.வெ.க.,-விற்கு செல்வோர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களே கிடையாது. என்னைப் பார்த்து பயந்துட்டாரு என விமர்சிக்கின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் போதே கட்சியை துவக்கி அரசியல் செய்தவர் சீமான். புதிதாக முளைத்திருக்கும் தலைவர், ஜெயலலிதா, கருணாநிதியைக் காட்டிலும் பெரிய தலைவரா? ஒரு ரூபாய் கூட கொடுக்காமல், கடந்த பல தேர்தலில் நிறைய ஓட்டு வாங்கி இருக்கிறேன். அச்சமே இன்றி, பெரும்பாலான தொகுதிகளில் புது வேட்பாளர்களை நிறுத்தினேன். பாலிசாக பாலிடிக்ஸ் செய்ய மாட்டேன்; பாலிசியோடு தான் பாலிடிக்ஸ் செய்வேன். மொழியின் அடிப்படையிலேயே உலகம் முழுக்க அரசியல் கட்டமைக்கப்படுகிறது. தமிழகத்தின் எட்டு கோடி மக்களுடன் கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சி, நாம் தமிழர் கட்சி தான். தனித்து போட்டியிடுவதே மேன்மை என்று கருதுகிறேன். இரண்டு சட்டசபை தேர்தல், இரண்டு லோக்சபா தேர்தல், 10க்கும் மேற்பட்ட இடைத்தேர்தல்கள், இரண்டு உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் தோல்வியடைந்த ஒரே நபர் நான் தான். இது ஒரு வரலாற்று சாதனை. இவ்வாறு அவர் பேட்டியளித்தார். -நமது நிருபர்-
வடிகால் பேக்கேஜ் சிறப்பாக பயன்பட்டது என திமுக பெருமை பேசுகிறது. அதற்கு தானைத் தலைவரின் பெயரை வைத்து இன்னும் பெருமைப்படலாம்