வாசகர்கள் கருத்துகள் ( 3 )
All the best.
நல்ல முயற்சி
நல்ல முயற்சி.
சென்னை: வணிக நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடி கூப்பன் போல, பிரதமரின், 'அனைவருக்கும் வீடு' திட்டத்தில் பயன் பெறுவோருக்கான மானியத்தை, பணமாக்கி பயன்படுத்தும் வகையில், கூப்பன்களாக கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அனைவருக்கும் வீடு என்ற கொள்கை அடிப்படையில், பிரதமரின் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், ஏழை மக்களுக்கு மானிய விலையில் வீடு கட்டி கொடுப்பதுடன், நிலம் வைத்து இருப்பவர்களுக்கு வீடு கட்டுவதற்கான பணம் மானியமாக வழங்கப்படுகிறது.மூன்றாவது கட்டமாக, நடுத்தர வருவாய் பிரிவினர், வங்கிக்கடன் வாயிலாக வீடு வாங்கும் போது, அதற்கான வட்டி விகிதத்தில், 2 சதவீத தொகையை மத்திய அரசு மானியமாக வழங்கும். இந்த சலுகை திட்டம், 2023ல் முடிந்தாலும், இன்னும் சில சலுகைகள் சேர்த்து மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது.இதுகுறித்து, வீட்டுவசதி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தனியார் நிறுவனங்களில், வீட்டு உபயோக பொருட்கள், ஜவுளிகள், வாகனங்கள், உணவு பொருட்கள் விற்பனையில், தள்ளுபடி மற்றும் பரிசு கூப்பன்கள் புழக்கத்தில் உள்ளது போல், வீடு வாங்குவோருக்கான மானியம் வழங்குவதிலும் கூப்பனை அறிமுகப்படுத்த, மத்திய அரசு தீர்மானித்துள்ளது.வங்கிக்கடன் வாயிலாக வீடு வாங்கும், நடுத்தர, குறைந்த வருவாய் பிரிவினருக்கு, வட்டி விகிதத்தில் குறிப்பிட்ட தொகையை அரசு மானியமாக வழங்கும். ஏற்கனவே, வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள் வாயிலாக, பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு, மானிய தொகை நேரடியாக வழங்கப்பட்டது. இந்த தொகையை பெற, வீடு வாங்கி ஓராண்டு வரை மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.அதற்கு பதிலாக, வீடு வாங்குவோருக்கான மானிய தொகையை, பணமாக்க கூடிய கூப்பன்களாக வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன; விரைவில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
All the best.
நல்ல முயற்சி
நல்ல முயற்சி.