உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மூத்த நிர்வாகிகளுக்கு ஓய்வு கொடுங்கள்: உதயநிதி ஆதரவாளர்கள் போர்க்குரல்

மூத்த நிர்வாகிகளுக்கு ஓய்வு கொடுங்கள்: உதயநிதி ஆதரவாளர்கள் போர்க்குரல்

- நமது நிருபர் -'மூத்த நிர்வாகிகளுக்கு கல்தா கொடுக்க வேண்டும்' என, தி.மு.க.,வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆதரவாளர்கள் குரல் எழுப்பியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iirjeieq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய, கள ஆய்வு குழு ஒன்றை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அமைத்துள்ளார். விசாரணையை முடித்து, அக்குழு வரும், 10ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க உள்ளது. சமீபத்தில், கோடை கால ஓய்வுக்காக, கர்நாடக மாநிலம், மைசூரு அருகே உள்ள குடகு மலை பகுதிக்கு, ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளிட்ட, 10 பேர், சென்றனர். அங்கு நடந்த ஆலோசனையின் போது, 'மூத்த நிர்வாகிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். துணை பொதுச்செயலர் பதவிகளை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். 'உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள துரைமுருகனை, பொதுச்செயலர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும். செயல் தலைவர் பதவியை உதயநிதிக்கு வழங்க வேண்டும்' என, ஸ்டாலினிடம் முன்னாள் அமைச்சர் மகேஷ் உள்ளிட்ட சிலர் வலியுறுத்தியுள்ளனர். 'இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு, ஒரு மாவட்ட செயலர் என்ற வகையில் நியமிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிறுத்தப்பட்ட புதுமுகங்களும், இளைஞர்களும் தான் வெற்றி பெற்றனர். 'எனவே, தி.மு.க., நிர்வாகத்தில் இளைஞர்களுக்கு முக்கிய பதவிகள் தரப்பட வேண்டும். மூத்த நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதல் குழுவில் மட்டுமே இடம் தர வேண்டும்' என, உதயநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் குறித்து, ஸ்டாலின், அப்போது எந்த முடிவும் சொல்லவில்லை. தற்போது, சென்னை திரும்பியுள்ள நிலையில், தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், மூத்த நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, கனிமொழி, எ.வ.வேலு உள்ளிட்டோருடன், இது தொடர்பாக ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். கள ஆய்வுக்குழு அறிக்கைக்கு பின், இது தொடர்பான நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம் என, அறிவாலய வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mani . V
ஜூன் 06, 2026 04:31

"தம்பி பாலிடால்" "என்னண்ணே?" "இரும்புக்கை கோப்பால் சாருக்கு 73 வயது ஆகிறது" "அதுக்கு ஏன்னே கத்துறீங்க?"


sankaranarayanan
ஜூன் 05, 2026 20:38

ஒருவர் கோபாலபுறத்து விசுவாசி அவரை வெளியே தள்ளினால்கூட அவர் கோபாலபுரத்து சாலைகளிலேயே மன்னிக்கவும் சித்தரஞ்சன் சாலையிலேயே உலவிவருவார் அவர்க்கு வேறு ஒன்றுமே தெரியாது மற்றொருவர் மன்னர்குடியில் இருந்தாலும் அவரும் சித்தரஞ்சன் சாலை வீட்டிர்க்குள்ளேயே உலவுவார் அவர் சொல்வார் நான் கலைஞரின் உயிர் நண்பன் அவருடனேயேதான் இருப்பேன் நான் இப்போதும் உங்களை விட்டு போக மாட்டேன் என்பார் என்ன செய்வது இந்த இருவர்க்கும் தனி பதவிகளை உருவாக்கி அவர்களை ஒரு மூலையில் உட்கார வைப்பதுதான் கட்சியின் முறை


A M Palanisamy
ஜூன் 05, 2026 18:59

இளைஞர்கள் கட்சி பொறுப்பிற்கு வருவது கட்சியை உயிரோட்டமாக வைத்துக்கொள்ளும். உண்மை. ஆனால் உதயநிதியின் நண்பர்களுக்கு மட்டுமே பதவி என்றால் அந்த இளைஞர்களால் ஒரு பயனும் இல்லை.


முருகன்
ஜூன் 05, 2026 17:43

இது நடந்தால் மட்டுமே திமுகவை காப்பற்ற முடியும்


duruvasar
ஜூன் 05, 2026 09:43

நெம்பெர் 2 வில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறாரே ஓகே வா டெங்கு ?


sankaranarayanan
ஜூன் 05, 2026 09:27

நேரு காலத்தில் அவர் காமராஜர் பாணியை கடைப்பிடித்து கட்சியில் மூத்த பிரமுகர்களுக்கு ஒய்வு கொடுத்தார்கள் அதையே பின் பற்றினாலும் விஜய் அவர்கள் ஆரம்பத்திலேயே தனது கட்சியில் பெரும்பாலும் இளைஞர்களையே தேர்ந்தெடுத்து வெற்றி கண்டுள்ளார் இதைத்தான் தானும் புள்ளையாண்டான் பின் பற்றி திராவிட மாடல் கட்சிக்கு உயிர்ப்பித்து கொடுக்க முயற்ச்சி செய்கிறார்


Ranganathan
ஜூன் 05, 2026 08:28

திமுகவின் தேஜஸ்வி கையில் அதிகாரம் தரவும். வளர்ச்சி எப்படியோ அது போல தளர்ச்சியும் தவிர்க்க இயலாது. மாற்றம் ஒன்றே மாறாதது..


Raajan
ஜூன் 06, 2026 05:12

தீம்காவின் தேஜஸ்வி? பிடி ₹200


முக்கிய வீடியோ