உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அரசு ஊழியர்கள் தி.மு.க.,வை ஏமாற்றுவர்: அன்புமணி

அரசு ஊழியர்கள் தி.மு.க.,வை ஏமாற்றுவர்: அன்புமணி

சென்னை : பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:தமிழகத்தில் கடந்த 2003ல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8m0l5qz1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த தேர்தலின்போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என, அக்கட்சி தேர்தல் அறிக்கையில், வாக்குறுதி அளித்தது.ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்ததும், இது தொடர்பாக பரிந்துரை அளிப்பதற்கு, கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை தி.மு.க., அரசு அமைத்தது. ஆனால், 139 நாட்கள் கடந்தும், அக்குழு எந்த பணியையும் செய்ததாகத் தெரியவில்லை.தமிழக அரசை விட மோசமான நிதி நிலைமையில் இருக்கும் மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அரசுக்கு மனமிருந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தை ஒரு வாரத்தில் அமல்படுத்த முடியும். அரசு ஊழியர்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் தி.மு.க.,வை, வரும் தேர்தலில் அரசு ஊழியர்களும், மக்களும் ஏமாற்றுவது உறுதி. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

rameshkumar natarajan
ஜூன் 23, 2025 10:24

Vanniars will disappoint you, wait and watch.


அப்பாவி
ஜூன் 23, 2025 09:43

அரசு ஊழியர்கள் பொதுமக்களை ஏமாத்தி ஆட்டையப் போட சகல வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. எப்பிடி ஏமாத்துவாங்க மணி?


Oviya Vijay
ஜூன் 23, 2025 07:31

உங்களுக்கு உங்கள் தந்தையே ஏமாற்றுவார்... பொறுத்திருந்து பாருங்கள்...


Srinivasan R
ஜூன் 23, 2025 05:02

ஏமாறுவது உறுதி ( ஏமாற்றுவது அல்ல)


முக்கிய வீடியோ