சில்லரை விலை உயர்வை தடுக்க வெங்காயத்தை விற்கிறது அரசு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த, கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை அதிக அளவில் சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து நுகர்வோர் விவகார செயலர் நிதி கரே கூறியிருப்பதாவது:
வெங்காயத்தின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை, டன்னுக்கு 550 டாலர் என்பதை, மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. வரி நீக்கத்திற்கு பின் வெங்காய ஏற்றுமதி அதிகரித்து, உள்நாட்டில் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக, அரசு கையிருப்பில் உள்ள வெங்காயத்தின் விற்பனையை தீவிரப்படுத்தியுள்ளது. அரசே விற்பனை
சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லி உட்பட முக்கிய நகரங்களில் மொத்த விலை சந்தையில் வெங்காயத்தை அரசு விடுவித்து வருகிறது.நாடு முழுதும் கிலோ 35 ரூபாய் என்ற சில்லரை விலையில் வெங்காயம் விற்பனையை அரசு கூட்டுறவு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த விற்பனையை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. டில்லியில், கடந்தாண்டு இதே காலத்தில் கிலோ 38 ரூபாயாக இருந்த வெங்காயத்தின் சில்லரை விற்பனை விலை தற்போது 55 ரூபாயாக உள்ளது. மும்பை மற்றும் சென்னையில்முறையே, 58 மற்றும் 60 ரூபாயை எட்டியுள்ளது. நம்பிக்கை
மேலும், காரீப் பருவ வெங்காய சாகுபடி பரப்பு அதிகரித்துள்ள நிலையில், அதன் அறுவடை துவங்கி வெங்காய வரத்து அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதுமட்டுமின்றி, 4.7 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பில் உள்ளதால் வெங்காயம் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கையை அரசு கொண்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். மத்திய அரசின் கையிருப்பில், 4.7 லட்சம் டன் வெங்காயம் சென்னை உட்பட நாடு முழுதும் உபரி இருப்பு விற்பனை கூட்டுறவு அமைப்புகள் மூலம் கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனை மும்பை, சென்னையில் முறையே 58 மற்றும் 60 ரூபாயை எட்டியுள்ளது.