உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜி.எஸ்.டி., : நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

ஜி.எஸ்.டி., : நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

திருத்தப்பட்ட பொருட்கள் மற்றும் ஜி.எஸ்.டி., விகிதங்களின் பலன்களை நுகர்வோருக்கு வழங்கத் தவறும் நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் நிதிகரே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு, ஜி.எஸ்.டி.யில் மாபெரும் மாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. 5 மற்றும் 18 என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தம் கடந்த 22ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. எனினும், மாற்றியமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. பலன் பல இடங்களில் நுகர்வோருக்கு முழுமையாக சென்றடையவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, மத்திய நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் நிதிகரே கூறுகையில், 'ஜி.எஸ்.டி., சலுகைகளை நுகர்வோருக்கு முழுமையாக வழங்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்களை கண்காணிக்கிறோம்' என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Venugopal S
செப் 24, 2025 20:21

நாங்களே ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை தான் மக்களுக்கு ஏதோ நல்லது செய்கிறோம், அதற்கான நல்ல பெயரையும் கிடைக்க விடாமல் செய்தால் கோபம் வரத்தானே செய்யும்!


Nandakumar Naidu.
செப் 24, 2025 16:28

அப்போது, ஆவின் பால் விலையை குரைக்காத தமிழக அரசின் மீது என்ன நடவடிக்கை?.


Vasan
செப் 24, 2025 21:58

Dismissal


ஆரூர் ரங்
செப் 24, 2025 14:34

கூடுதல் ஜிஎஸ்டி வாங்கும் கடைகள் பற்றிப் புகாரளிக்க தொலைபேசி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை விளம்பரமாக வெளியிடலாம். எல்லா ஊடகங்களும் கட்டாயம் வெளியிட வேண்டும்


sivakumar Thappali Krishnamoorthy
செப் 24, 2025 11:12

நீங்க பெட்ரோல் விலையை குறைக்க சொல்றிங்க.. விலை ஏத்தினது குறையாது.. ஏஜெண்டுக்கு, சில்லறை வியாபாரிக்கு தான் லாபம். பொருள்களின் விற்பனை விலை குறைத்து அனுப்பினால் ஒழிய யாரும் புதிய வரி குறைந்த விலைக்கும் விற்க மாட்டார்கள்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
செப் 24, 2025 10:35

ஜி.எஸ்.டி., முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்களை கண்காணிக்கிறார்களாம். எப்படிப்பா கண்டுபிடிப்பீங்க. உங்களால முடியாதுன்னு அவங்களுக்கு தெரியும். அதனால் தைரியமாக கொள்ளையில் ஈடுபடுவார்கள். இதனால் ஒவ்வொரு ஹோட்டலிலும் சென்று தோசை விலை இட்லி விலை குறைந்துள்ளதா என்று பார்ப்பீர்களா? யாரும் ஜி.எஸ்.டி. யை காரணம் காட்டி ஏற்றிய விலையை ஒருபோதும் குறைக்கப்போவதில்லை. வேறு ஏதாவது சொல்லி விலையை ஏற்றுக்கொள்வார்கள். உங்களது அறிவற்ற தனத்தால் இன்றைக்கு பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள்தான்.


Indian
செப் 24, 2025 09:40

என்ப வார்னிங்? கடைல கேட்டா போன மாசம் அதிக விலைக்கு வாங்குன சரக்கு இன்னும் வித்து முடியகேங்கறான். இவிங்களும், இவிங்க ஜி.எஸ்.டி யைக்.குறைச்ச லட்சணமும். எல்லாம் பித்தலாட்டம் ..


Prabu.KTK
செப் 24, 2025 17:43

துர்வாஷ், இந்தியன் எவ்ளோ போலி ஐடி உனக்கு 200 ஓவா சொம்பஎ நீ ?? ஹா ஹா ஹா சூப்பர்


துர்வாஷ்
செப் 24, 2025 08:52

என்ப வார்னிங்? கடைல கேட்டா போன மாசம் அதிக விலைக்கு வாங்குன சரக்கு இன்னும் வித்து முடியகேங்கறான்.இவிங்களும், இவிங்க ஜி.எஸ்.டி யைக்.குறைச்ச லட்சணமும்.


Prabu.KTK
செப் 24, 2025 17:43

இந்தியன் துர்வாஷ்,எவ்ளோ போலி ஐடி உனக்கு 200 ஓவா சொம்பஎ நீ ?? ஹா ஹா ஹா சூப்பர்


சசிக்குமார் திருப்பூர்
செப் 24, 2025 07:53

அரசின் ஆவின் பொருட்கள் விலையை குறைக்காமல். ஏதோ மக்கள் நலனுக்காக தள்ளுபடி என்று ஏமாற்றுவது ஏனோ


Suppan
செப் 24, 2025 15:56

தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுங்கள் எஜமான்


பெரிய குத்தூசி
செப் 24, 2025 07:15

தமிழகத்தில் ஹோட்டல் உணவு பண்டங்கள், சூப்பர் மார்க்கெட் பொருட்கள் அனைத்தும் அதே பழைய விலையில் அல்லது கூடுதலாக விற்கப்படுகின்றன. சில கடைகளில் வரி குறைப்பு கணினியில் செய்யாமல் அதே வரியில் விற்கிறார்கள். நேற்று செங்கல்பட்டு போய்வரும்போது சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள எ2b ல் சாப்பிட்டேன், முன்பைவிட விலை அதிகமாக விற்பதுபோல் தெரிகிறது. சாலையோர உணவகங்களில் விலை எறியுள்ளதே தவிர குறையவில்லை. சென்னை சூப்பர் மார்க்கெட் களில் விலை குறையவில்லை. மத்திய அரசு பொருள் விலை கட்டுப்பாடு மற்றும் வரிகளுக்கு தனி vigilance அமைத்தும் உதவி தொடர்பு எண்கள், மக்கள் எளிதாக பயன்படுத்தி வரிகளை கண்டறிய ஆப் என துரித நடவடிக்கை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் GST யால் தமிழக மக்களுக்கு பலன் இல்லை.


Vasan
செப் 24, 2025 22:02

A2B to be audited as per this allegation. If anybody has A2B bill with old GST rate still, it can be escalated.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
செப் 26, 2025 10:33

யாருக்குங்க புகார் செய்வதற்கெல்லாம் நேரமிருக்கு? இதெல்லாம் முதலில் அரசாங்கம் யோசித்திருக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி