உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி மோசடி: குஜராத் பா.ஜ., அமைச்சரின் மகன் கைது

100 நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி மோசடி: குஜராத் பா.ஜ., அமைச்சரின் மகன் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளில், 75 கோடி ரூபாய் மோசடி நடந்தது தொடர்பாக, அம்மாநில அமைச்சர் பச்சுபாய் கபாடின் மகன் பல்வந்த் கபாட் நேற்று கைது செய்யப்பட்டார். குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள தோஹாத் மாவட்டத்தின் சில தாலுகாக்களில், 100 நாள் வேலை திட்டம் எனப்படும், 'மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின்' கீழ் நடைபெற்ற பணிகளில், 160 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

போலி பணி நிறைவு

இதையடுத்து, மாவட்ட ஊரக மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தபோது, சாலைகள், தடுப்பணைகள், குளங்கள் போன்றவற்றை அமைக்காமலேயே, அமைத்தது போல் கணக்கு காட்டி பணம் பெற்றது தெரிந்தது. கடந்த 2021 ஜனவரி முதல், 2024 டிசம்பர் வரை, இந்த பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கியதாக, 35 நிறுவனங்களுக்கு போலி பில்கள், போலி பணி நிறைவு சான்றிதழ்கள் வாயிலாக, 75 கோடி ரூபாய் மோசடியாக பணம் தரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஒப்பந்ததாரர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, ஐந்து பேரை கடந்த மாதம் கைது செய்தனர். இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்தகுஜராத் பஞ்சாயத்து மற்றும் வேளாண் அமைச்சர் பச்சுபாய் கபாடின் மகன் பல்வந்த் கபாடுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடியாக பணம் பெற்ற நிறுவனங்களில் பல்வந்தின் நிறுவனமும் ஒன்று எனவும், பழங்குடியின மக்கள் வசிக்கும் தேவ்கத் பரியா, தன்பூர் ஆகிய தாலுகாக்களில் பணிகளை செய்யாமலேயே கோடிக்கணக்கில் பணத்தை பெற்றதும் விசாரணையில் தெரிய வந்தது. தேவ்கத் பரியா சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், பல்வந்தின் தந்தையான அமைச்சர் பச்சுபாய்.

குற்றச்சாட்டு

இதையடுத்து, அமைச்சர் பச்சுபாயின் மூத்த மகன் பல்வந்தை நேற்று போலீசார் கைது செய்தனர். அவருடன், முறைகேடு நடந்த போது தாலுகா வளர்ச்சி அதிகாரியாக இருந்த தர்ஷன் படேல் என்பவரும் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, அமைச்சர் பச்சுபாயின் இளைய மகன் கிரண் கபாட் தலைமறைவாகி விட்டார். 100 நாள் வேலை திட்டத்தில், 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சியான காங்., குற்றஞ்சாட்டி உள்ளது. ஆனால், அரசு அதிகாரிகள், அமைச்சரின் மகன்கள் என சிக்கியுள்ள நிலையில், அரசு தரப்பில் இருந்தோ, அமைச்சரிடம் இருந்தோ எந்த விளக்கமும் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

TAAJ
மே 18, 2025 16:30

தமிழகத்தில் குற்றவாளி அமைச்சர்களுக்கு கோடிக்கணக்கில் செலவழித்து உச்சநீதிமன்றத்தில் இருந்து விடுதலை வாங்கிக் கொடுக்கிறார் ஸ்டாலின்.


Bharathanban Vs
மே 18, 2025 10:59

மாநில அமைச்சரின் மகனை மாநில அரசே கைது செய்கிறதா?


தாமரை மலர்கிறது
மே 18, 2025 07:25

தவறு செய்துவிட்டு தப்பிக்க, குஜராத்தில் திராவிட ஆட்சி இல்லை.


முருகன்
மே 18, 2025 19:15

உலக மகா நடிப்பு மக்கள் மன்றத்தில் எடுபடாது


Kasimani Baskaran
மே 18, 2025 07:07

அரசு மற்றும் பொது மக்களின் இரத்தத்தை உறிஞ்சி வாழும் இது போன்ற ஜந்துக்களை அரை நூற்ராண்டாவது சிறையில் வைக்க வேண்டும். பனி நிறைவு கொடுத்த அதிகாரியையும் சிறையில் அடைக்க வேண்டும். தமிழகத்தில் நூறு நாள் வேலைவாய்ப்புத்திட்டத்தில் பல கோட்டைகளை கட்டியிருப்பதாக தகவல்.


Oviya Vijay
மே 18, 2025 06:56

இதனால் தான் சொல்கிறேன். அரசியலில் யாருமே யோக்கியர்கள் இல்லையென்று. தமிழகத்தில் தாமரை மலரும் என்று கூறும் பாஜகவினர் தங்கள் கட்சியில் இருக்கும் அனைவருமே சத்திய சீலர்கள் ஒரு நயா பைசா கூட அரசியலில் சம்பாதிக்க மாட்டோம். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே எங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றோம் என்று சத்தியம் செய்வார்களோ. கண்டிப்பாக செய்ய மாட்டார்கள். ஏனெனில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் அனைத்து கட்சிகளும் (பிஜேபி உள்பட) ஆளுங்கட்சி மட்டும் சம்பாதிக்கிறார்கள். நாமும் ஆட்சியில் அமர்ந்து சம்பாதிக்க வேண்டும் என்று தான் இலவு காத்த கிளியாக காத்துகொண்டு உள்ளனர். மக்கள் சேவை என்பதெல்லாம் காதில் பூச்சுற்றும் வேலை. மக்களும் அதை நன்கு உணர்ந்துள்ளதால் தான் எதிர்கட்சிகளை அண்ட விடாமல் வைத்துள்ளனர். ஆகையால் தாமரை ஒருநாளும் தமிழகத்தில் மலரவே மலராது.


vivek
மே 18, 2025 07:51

அங்கு 75 கோடி..இங்கு 30000 கோடி.....


vijai hindu
மே 18, 2025 10:41

குஜராத்தில் பாஜக அமைச்சர் மகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இங்கு திருட்டு திராவிட கட்சிகள் திருட்டுத்தனம் வெளியே வந்து உள்ளதா ஆகவே கண்டிப்பா 200 ரூபாய் போட்டா பிரியாணி உங்களுக்கு ரெடி


Oviya Ajith
மே 18, 2025 17:05

பாஜக கைப்பற்றியிருக்கும் அதிகாரத்தோடு ஒப்பிட்டால் நடந்த ஊழல் மிகக்குறைவு. ஆனால் சினிமாவில் பல தில்லாலங்கடி வேலை செய்து நம்பர் ஒன்னாக காட்டிக்கொண்டவர்கள் அதிகாரத்திற்கு வந்தால், கட்டாயம் ஊழலில் சாதனை படைப்பார்கள், சினிமாவைப்போல் அல்லாமல் உண்மையாக. நல்ல வேளையாக தமிழ் நாட்டைக் காப்பாற்ற அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டது.


Amar Akbar Antony
மே 18, 2025 06:53

முக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே பா ஜ க வே ஆண்டாலும் மந்திரியின் மகன்களே ஆனாலும் கைது இதுவே ஜனநாயகத்தின் வெற்றி நீதிமன்றத்தால் பலமுறை குட்டுப்பட்டும் மந்திரி பதவி கொடுத்து இலாக்கா இல்லாமல் அதிகாரம் கொடுத்த, இன்னும் அண்ணா பல்கலை குற்றவாளி மற்றும் சார் இவற்றைப்பற்றி கவலைகொள்ளாமல் டாஸ்மாக் எதிராக நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்ற ஊழல் டாஸ்மாக் மன்னராட்சியை விட கொடுமையான வில்லங்கமான பொய்யை மட்டுமே விளம்பரப்படுத்தி மக்களை மாயையில் வைத்திருக்கும் கொடுந்திராவிட ஆட்சியைவிட குஜராத்தி மாடல் அரசு சிறந்ததே.


D.Ambujavalli
மே 18, 2025 03:44

அங்கும் வாரிசுகளால்தான் தலைவலி போலிருக்கிறது இது குஜராத் மாடல் தமிழகத்துக்கு எவ்விதத்திலும் இளைப்பில்லை என்று காட்டுகிறது


துர்வேஷ் சகாதேவன்
மே 18, 2025 02:29

ED IT CBI எல்லாம் இங்கு போக மாட்டார்களா எதிர் கட்சி ஆளும் மாநிலம் என்றால் தான் போவார்களா


vivek
மே 18, 2025 05:25

இங்கே 30000 கோடி ஊழல்....


nagendhiran
மே 18, 2025 07:07

தற்குறி எங்கு குற்றங்கள் மறைக்கப்படுகிறதோ அதிகம் நடக்கிறதொ அங்கு தான்டா செல்வார்கள்?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 18, 2025 07:08

கைது செய்திருப்பதே குஜராத் போலிஸ் தான்யா.. இதுக்கு ED, IT, CBI எல்லாம் தேவையில்ல.. இதே தமிழ்நாட்டில் சாதாரண வார்டு கவுன்சிலர் பையன் மேல் இங்கிருக்கும் போலிஸ் கை வைக்க முடியுமா.. மத்தவங்க மேல் குத்தம் சொல்ற அளவிற்கு தகுதியை வளர்த்துக்குங்க மொதல்ல.. என்ன டிசைன்றா நீங்க.....!!!