உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வரிசை கட்டி நிற்கும் வாரிசுகள்: பீஹார் தேர்தலில் வெற்றி யாருக்கு?

வரிசை கட்டி நிற்கும் வாரிசுகள்: பீஹார் தேர்தலில் வெற்றி யாருக்கு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரிசு அரசியலுக்கு ஆதரவு தரக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் யார் இதைக் காது கொடுத்து கேட்கின்றனர்? இந்தியாவின் முதல் வாரிசு அரசியலை ஆரம்பித்தவர் நேரு.அவருடைய மகள் இந்திரா, இவரின் மகன் ராஜிவ், அவரது மகன், மகள், மனைவி என, வாரிசு அரசியல் தொடர்கிறது. தமிழகத்தில் தி.மு.க.,வில் இப்போது இன்பநிதி வரை, வாரிசு அரசியலில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம்; ஆந் திராவில் ராஜசேகர் ரெட்டி மகன் ஜெகன் மோகன் ரெட்டி; தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு வின் மகன் நாரா லோகேஷ், இப்போது அமைச்சர்; தெலுங்கானாவிலும் இதே நிலை.பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான, ஐக்கிய ஜனதா தளத்திலும் வாரிசு அரசியல் இப்போது ஆரம் பித்துவிட்டது. பீஹாரில் இந்த கூட்டணி ஆட்சியில், நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். அடுத்த மாதம் இங்கு சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. இந்நிலை யில், 'நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும்' என, கட்சி தொண்டர்கள் வேண்டுகோள் வைத்து உள்ளனர். நிதிஷ் குமாருக்கு வயதாகிவிட்டது; அடிக்கடி ஞாபக மறதியும் கூட. இதனால், தன் மகனை அரசியலில் கொண்டுவர முடிவு செய்துவிட்டார். நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஹர்னவுட் தொகுதி யில் நிதிஷ் மகன் போட்டியிடுவார்' என, சொல்லப் படுகிறது. கூட்டணி வெற்றி பெற்றால், இவருக்கு நிச்சயம் அமைச்சர் பதவி உண்டு.எதிர்பக்கம் லாலுவின் மகனும், எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் எப்படியாவது தங்களுடைய கூட்டணி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என, பாடுபட்டு வருகிறார். இந்த முறை, இவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. ராகோபூர் இவருடைய தொகுதி; இருப்பினும் பூல்பரஸ் என்ற தொகுதியிலும் போட்டியிட விரும்புகிறார். காரணம், அந்த தொகுதியில் அதிக அளவில், ஓ.பி.சி., சமூகத்தினர் வசிக்கின்றனர். 'தன் கட்சி வெறும் யாதவ், முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல், ஓ.பி.சி.,க்கும் உழைக்கிறது' என நிரூபிக்கவே, இங்கு போட்டியிடப் போகிறாராம். எது எப்படியோ... இந்தியா முழுதும் இந்த வாரிசு அரசியல் தங்கு தடையின்றி பரவிக் கிடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V Gopalan
அக் 12, 2025 16:29

Electorates have their option of NOTA


Premanathan S
அக் 12, 2025 13:59

யாரு வெற்றி பெற்று வந்தாலும் எப்போதும் தோற்கப் போவது, பொது மக்களும் , நீதியும் நேர்மையும்


sri muthu
அக் 12, 2025 11:55

தேர்தல் என்றால் அரசியல் கட்சிகள் போட்டி தான் போடும்