உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பெயரை மாற்றி மலேஷியா சென்றவர் மரணம்: அடக்கம் செய்து, சான்று வழங்க ஐகோர்ட் ஆணை

பெயரை மாற்றி மலேஷியா சென்றவர் மரணம்: அடக்கம் செய்து, சான்று வழங்க ஐகோர்ட் ஆணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மலேஷியாவிற்கு வேலைக்குச் சென்று இறந்தவரின் உடலை, அந்நாட்டிலேயே அடக்கம் செய்து, இறப்புச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டம், ரோஷன் ரிஷானா தாக்கல் செய்த மனு: என் கணவர் பைரோஸ்கான், மலேஷியாவில் ஒரு ஹோட்டலில் சமையலராக பணிபுரிந்தார். அவர், மாரடைப்பால் இறந்து விட்டதாக, 2024 டிசம்பர், 29ல் எனக்கு தகவல் வந்தது. கோலாலம்பூர் மலாயா மருத்துவ பல்கலை பிணவறையில் உடல் உள்ளது. உடலை அடக்கம் செய்ய முயன்றபோது, அவர் தவறான விபரங்களை வழங்கி, மலேஷியா பயணம் செய்தது தெரிய வந்தது. தன் பெயர் கனி எனக்கூறி, பாஸ்போர்ட் பெற்றுள்ளார். அவர் வேலை செய்த நிறுவன முதலாளியிடம், உடலை ஒப்படைத்து அடக்கம் செய்ய, ஆட்சேபனை இல்லை என்பதற்குரிய சான்றை, சம்பந்தப்பட்ட நாட்டின் துாதரகம் வழங்க வேண்டும் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது. கனி என்ற பெயரில், பைரோஸ்கான் மலேஷியா சென்றதால், அங்குள்ள இந்திய துாதரகம், அதற்கான சான்றிதழை வழங்க தயாராக இல்லை.கனி மற்றும் பைரோஸ் கான் ஒரே நபர்தான். பைரோஸ் கானுடனான எனது உறவை நிரூபிக்க, திருமண அழைப்பிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். மதச்சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி, மலேஷியாவில் உடலை அடக்கம் செய்ய வேண்டும். பைரோஸ் கான் பெயரில் இறப்புச்சான்று வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுஇருந்தார்.நீதிபதி வி.லட்சுமிநாராயணன் பிறப்பித்த உத்தரவு:பைரோஸ் கானும், கனியும் ஒருவர்தான் என, அவரது ஊரைச் சேர்ந்தவர்களின் ஒப்புதல் அறிக்கை, ஜமாத் நிர்வாகம் வழங்கிய கடிதத்தை, மனுதாரர் தரப்பு சமர்ப்பித்தது. பைரோஸ்கானின் உடலை, மலேஷியாவில் அடக்கம் செய்வதில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆட்சேபனை இல்லை. குடும்பமானது பொருளாதார ரீதியாக நன்றாக இல்லை. உடலை இந்தியாவிற்குக் கொண்டு வரும் சூழலில் அவர்கள் இல்லை. மலேஷியாவில் உடலை அடக்கம் செய்வது மட்டுமல்லாமல், பைரோஸ் கான் உயிருடன் இல்லை என்பதற்குரிய சான்றை மனுதாரருக்கு வழங்குவதை உறுதி செய்ய, மலேஷியாவிலுள்ள இந்திய துாதரக உயர் அதிகாரி, முதல்நிலை செயலர், சென்னையிலுள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரக கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார் - - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

vijai hindu
ஏப் 20, 2025 22:45

நம்ம கோர்ட்டு உத்தரவு எல்லாம் அங்க செல்லுபடி ஆகாது .


SP
ஏப் 20, 2025 16:54

மலேசியா நாட்டு அரசு என்ன முடிவு எடுக்கின்றதோ அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்


கான்சௌத்ரி
ஏப் 20, 2025 12:10

மோசடிக்காரனுக்கு சப்போர்ட் பண்ணும் ஜமாத். நாடு வெளங்குமா?


अप्पावी
ஏப் 20, 2025 12:08

இவனுக்கு பாஸ்போர்ட் வழங்கிய அதிகாரிகளையும், லஞ்சம் வாங்கின போலுசையும் டிஸ்மிஸ் பண்ணுங்க.


Karthik
ஏப் 20, 2025 10:20

பேரை மாத்தி பாஸ்போர்ட் வாங்கிட்டு நாடு விட்டு நாடு போயி வேலை செஞ்ச இடத்திலேயே செத்தும் போயிடுச்சு இந்த 420 . இப்ப முறைப்படி எல்லா சடங்கு சம்பிரதாயங்களுடன் இறுதி சடங்கும் செய்து இவர்கள் கேட்கும் பெயரிலேயே இறப்பு சான்றிதழும் குடுக்கணுமாம்.. கொடுத்துடுங்க அரசே. சில வருடங்கள் கழித்து மீண்டும் வருவர் கோர்ட் வாசலுக்கு என் வீட்டில் இருந்த கனியை காணும் காயை காணும் கிணற்றைக் காணும் என்று.


பேசும் தமிழன்
ஏப் 20, 2025 07:48

அதெப்படி ஜமாத் கடிதத்தை ஆதாரமாக ஏற்கலாம்.... பெயரை மாற்றி மோசடி செய்ததது தவறு இல்லையா... அதற்க்கு என்ன தண்டனை ???


kumar
ஏப் 20, 2025 09:09

Very very correct


சூரியா
ஏப் 20, 2025 06:47

எல்லா 420 வேலைகளையும் செய்வார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை