உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அரசு மருத்துவமனையில் குழந்தையின் கைவிரல் துண்டிப்பிற்கு இழப்பீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவமனையில் குழந்தையின் கைவிரல் துண்டிப்பிற்கு இழப்பீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் விரல் கவனக் குறைவாக துண்டிக்கப்பட்டதற்கு ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனு: கூலி வேலை செய்கிறேன். எனது மனைவி பிரசவ சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 2021ம் ஆண்டு மே 25ல் அனுமதிக்கப்பட்டார். பெண் குழந்தை பிறந்தது. அதற்கு இடது கையில் ஊசி மூலம் மருந்து செலுத்த 'வென்ப்ளா'னை ஸ்டிக்கர் மூலம் ஒட்டி பட்டையாக 'ஸ்கேல்' வைத்திருந்தனர். அதை நீக்குவதற்காக 'டிஸ்சார்ஜ்' ஆவதற்கு முன் குழந்தைகள் வார்டுக்கு சென்றோம்.அப்போது பணியிலிருந்த நர்ஸ் 'வென்ப்ளா'னை கத்தரிக்கோலால் நீக்க முயன்றார். கவனக்குறைவால் கையின் கட்டைவிரலை கத்தரித்துவிட்டார். விரல் துண்டானது. அதை ஒட்டவைக்க முயன்றனர். தையல் போட்டனர். விரல் இயல்பாக செயல்பட வாய்ப்பில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். சிறப்பு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் தவறிவிட்டது. குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் உள்ளது. எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: மனுதாரருக்கு ஏற்கனவே தமிழக அரசு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்கியுள்ளது. மீதம் ரூ.6 லட்சத்து 75 ஆயிரத்தை 12 வாரங்களில் வழங்க சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைக்கு 12 வயது பூர்த்தியானதும் சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Bhaskaran
ஜூன் 22, 2025 11:46

அந்த செவிலி ஊதியத்தில் பிடிக்கனும்


Ramkumar Ramanathan
ஜூன் 21, 2025 08:33

because of these kind of incidents, people is afraid of going to govt hospitals. attitude of govt hospitals must change


T.சங்கரநாராயணன், ஈரோடு
ஜூன் 21, 2025 08:25

தொடர்புடைய மருத்துவமனை ஊழியர்களின் சம்பளத்தில் இந்த தொகையை பிடித்தம் செய்ய வேண்டும்


முக்கிய வீடியோ