உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஹிந்துக்கள் சிறுபான்மையினராக கூடாது; தமிழ்நாடு வி.ஹெச்.பி., தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு

ஹிந்துக்கள் சிறுபான்மையினராக கூடாது; தமிழ்நாடு வி.ஹெச்.பி., தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு

திருப்பூர்: ''ஹிந்துக்கள் நாட்டில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராகி விடக்கூடாது,'' என, திருப்பூரில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி பேசினார். தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், திருப்பூரில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நேற்று நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 82 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. ஸ்ரீநகர் பகுதியில் துவங்கிய ஊர்வலம் பல்வேறு பகுதிகள் வழியாக ஆலாங்காடு வந்தடைந்தது. அங்கு நடந்த விழாவில், ஊர்வலத்தை துவங்கி வைத்து, மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி பேசியதாவது: எந்த தடையையும் தகர்த்தெறிபவர் விநாயகர். இந்த விழாவுக்கு தடை போட யாராலும் முடியாது. எவ்வளவு தடை வந்தாலும் விழா சிறப்பாக நடைபெறும். விநாயகர் எந்த அமைப்புக்கோ, எந்த தனி நபருக்கோ மட்டும் சொந்தமானவர் இல்லை. அனைத்து ஹிந்து அமைப் புகளுக்கும் விழா நடத்த உரிமை உள்ளது. மாநிலம், மொழி, ஜாதி என பிரிந்து கிடக்கும் ஹிந்துக்களை ஒன்றிணைப்பது தான் ஹிந்து அமைப்புகளின் பணி. ஹிந்துக்களை ஹிந்துக்களாக இருக்க வைப்பதும் கடமை. அமைப்புகளுக்குள் பிளவு ஏற்படுத்த வேண்டும் என யாரும் நினைக்க வேண்டாம். ஒரு அமைப்பால் மற்றொரு அமைப்பை அழிக்க முடியாது. ஈ.வெ.ரா., விநாயகர் சிலைகளை உடைத்தார்; கடவுளை மறுத்தார். ஆனால், இன்று தமிழகத்தில் 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடக்கிறது. மாநிலத்தில் பெரிய விழாவாக இது நடக்கிறது. வங்கதேசம், பர்மா என பல பகுதிகளிலிருந்தும் திருப்பூர் வந்து வேலை செய்கின்றனர். கேரளாவில் ஐந்து மாவட்டங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையாக உள்ளனர். இந்நிலை நீடித்தால், ஹிந்து நாட்டில் ஹிந்துக்கள் சிறுபான்மையாகி விடுவர். இந்நிலை தமிழகத்துக்கு ஏற்படக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Venugopal S
ஆக 30, 2025 22:44

அதனால் ஒவ்வொரு ஹிந்துவும் ஐந்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறாரா?


pakalavan
ஆக 30, 2025 22:13

மதம் மதம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி பிழைக்கும் சங்கி கூட்டம்


T.sthivinayagam
ஆக 30, 2025 21:41

கோபால் ஜீ எந்த ஹிந்துக்களை சொல்கிறார் காவடி எடுக்கும் பெரும்பாளான ஹிந்துக்களையா அல்லது கல்லா கட்டும் ஹிந்துக்களையா பாரத ஹிந்துக்கள் தான் புரியாமல் கேட்கிறார்கள்


vivek
ஆக 30, 2025 22:09

நிச்சயமாக உன்னை போல ஜால்ரா இந்துக்கள் கிடையாது சிவநாயகம்


Rathna
ஆக 30, 2025 19:15

பங்களாதேஷி மற்றும் பாலைவனம் கலாச்சாரத்தால் மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இரண்டாவது பிரிவினையை உண்டாக்க அவர்கள் gulf நாட்டு பணத்துடன் வேலை செய்வது தெரிகிறது.


பேசும் தமிழன்
ஆக 30, 2025 10:06

அவர் பேசியது 100 சதவீதம் உண்மை.... பாலைவன மார்க்க ஆட்களுக்கு.... மதத்தின் பெயரால் நாட்டை பிரித்த பின்பு.... அவர்களை இங்கே இருக்க அனுமதித்தே தவறு.... நாட்டின் பிரிவினைக்கு பின்பு இங்கே இருந்த மார்க்க ஆட்கள் எத்தனை சதவீதம் அதிகரித்து இருக்கிறார்கள்.... பாகிஸ்தான் நாட்டில் இருந்த இந்து மற்றும் சீக்கியர்... பார்சி.... போன்ற சிறுபான்மையினர் எத்தனை சதவீதம் குறைந்து இருக்கிறார்கள் என்று பார்த்தாலே உண்மை தெரிந்து விடும்..... யார் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று !!!


AMMAN EARTH MOVERS
ஆக 30, 2025 09:19

நாங்கள் ஒற்றுமையாதான் இருக்கோம் உங்கள போன்ற தலைவர்கள்தான் வந்து பிரிவினையை உருவாக்குகின்றீர்கள்


Mettai* Tamil
ஆக 30, 2025 10:00

ஆமா நீங்க ஒற்றுமையாதான் இருக்கீங்க .அதனாலதான் கோவையில் 1998 ல் 58 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் வாழ்நாள் ஊனமாக இருக்காங்க. சமீபத்தில் சிலிண்டர் வெடிப்பு என ஏமாத்த பார்த்தீங்க. அணைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு mp, 5000 வருஷ பழமையான தமிழ் கடவுள் முருகன் மலையில், ஒரு 500 வருசத்துக்கு முன்பு கொள்ளையடிக்க வந்த மொகலாயன் சமாதி என்று சொல்லிக்கொண்டு ,தமிழ் குமரன் மலையின் புனிதத்தை கெடுக்கவும் செயிரீங்க ...


vivek
ஆக 30, 2025 10:12

earth movers மண்ணை தோண்டு ....சாக்கடையை தொண்டாதே


BALAJI
ஆக 30, 2025 12:37

உண்மையை சொன்னதற்கு நன்றி அம்மன்


பேசும் தமிழன்
ஆக 30, 2025 20:25

Amman Earth.... அட நீங்க வேற.... அவரே போலி பெயரில் இருக்கும்.... பாலைவன ஆள்.... அப்படி தான் பேசுவார்.


guna
ஆக 30, 2025 22:09

இவனின் GST கிடைக்கும்


பேசும் தமிழன்
ஆக 30, 2025 22:18

நீங்கள் மட்டும் ஒற்றுமையாக இருந்து பயன் இல்லை ....அனைத்து மதத்தினருக்கும் அந்த உணர்வு இருக்க வேண்டும்.....நாடு ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் நினைத்தால் .....மதரீதியாக எங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டு .....நாட்டையும் பிரித்த பாவிகள் அவர்கள் .


சமீபத்திய செய்தி