உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அழுகிய முட்டைகளை வாங்கி ஆம்லெட் போடும் ஹோட்டல்கள்

அழுகிய முட்டைகளை வாங்கி ஆம்லெட் போடும் ஹோட்டல்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சி மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில், பள்ளிக் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் முட்டை மற்றும் உணவுப் பொருட்களை ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வது நடக்கிறது. பண்ணைகளில் அழுகிய முட்டைகளை வாங்கி, பேக்கரி போன்ற உணவகங்களில் உணவுப் பொருட்கள் தயாரிப்பதும் அதிகரித்துள்ளது.கடந்த செப்., மாதம் திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள ஹோட்டல் ரத்னாவில், தமிழ்நாடு அரசு முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள், உணவு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை, ஆம்லெட், ஆப்பாயில் தயாரிக்க பயன்படுத்தியது தெரிந்தது. அந்த ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த 19ம் தேதி, திருச்சி, தென்னுார் ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள இரண்டு பேக்கரிகளில் சோதனை நடத்திய மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள், கேக், பிரட் தயாரிப்பதற்கு வைத்திருந்த 8,000 அழுகிய முட்டைகளை கைப்பற்றி அழித்தனர். அதேபோல், நேற்று முன்தினம், திருச்சி மாவட்டம், முசிறி சேலம் சாலையில் உள்ள கணேசன் என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தி, அங்கு உணவு தயாரிக்க வைத்திருந்த 90 அழுகிய முட்டைகளை கைப்பற்றினர்.அப்போது, அந்த ஹோட்டலுக்கு விற்பனை செய்வதற்காக, சதாசிவம் என்பவர் டூ-வீலரில் எடுத்து வந்த 900 முட்டைகளையும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கைப்பற்றி அழித்தனர். மேலும், ஹோட்டலுக்கு 'சீல்' வைத்த அலுவலர்கள், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அழுகிய முட்டைகள் விற்பனை செய்தவர் ஆகியோர் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ram pollachi
அக் 25, 2024 14:51

பழமுதிர் நிலையங்களில் விற்காத அழுகும் நிலையில் உள்ள எல்லா பழத்தையும் அடித்து பச்சை பால், சர்க்கரை கொஞ்சம் பனிக்கட்டி போட்டு கொடுத்தால் சப்பு கொட்டி சாப்பிடுவோம்...


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 25, 2024 14:30

ஆயிரம் ரூபாய் அபராதம் பத்து நாட்களுக்கு வியாபாரம் செய்யக்கூடாது. ஏற்கனவே வியாபாரம் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு தடை இல்லை. பத்து நாட்கள் மட்டும் புதிய வாடிக்கையாளர்களுடன் வியாபாரம் செய்யக்கூடாது. இதுவே எனது கட்டளை எனது கட்டளையே சாசனம்.


Barakat Ali
அக் 25, 2024 10:37

அதாவது கூமுட்டையை யூசு பண்ணுறாங்க .....


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 25, 2024 09:40

அட போங்கப்பா, இதே ஒரு நியூஸ் ன்னு போட்டுக்கிட்டு. உழவர் சந்தையில விக்காத அழுகின வாடிப்போன மிதிபட்ட காய்கறிகளை எல்லாம் வாங்கிட்டுப்போயித்தான் ஹோட்டல்ல சமைச்சு போடறாங்க. என்னமோ முட்டையை மட்டும் சொல்லறீங்களே?


Smba
அக் 25, 2024 07:01

அழுகிய முட்டையில் ஆம்லட் போட முடியாது தெரிந்து விடும் கப்சா வுக்கு அளவே இல்லியா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை