உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கு... வாஷிங்டன் சுந்தருக்கு சுந்தர் பிச்சை ஆதரவு

எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கு... வாஷிங்டன் சுந்தருக்கு சுந்தர் பிச்சை ஆதரவு

சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிரான பிரீமியர் லீக் போட்டியில் ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படாததற்கு எதிராக கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை குரல் கொடுத்துள்ளார். பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று முன்தினம் (மார்ச் 25) நடந்த போட்டியில் பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதின. இதில், முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ( 97 ரன்கள், நாட் அவுட்), பிரியன்ஸ் ஆர்யா (47), ஷஷாங்க் சிங் (44 ரன்கள், நாட் அவுட்) ஆகியோரின் அதிரிடியான ஆட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து, பேட் செய்த குஜராத் அணியும் அதிரடியாக ஆடியது. இருப்பினும், அந்த அணியால் 232 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. மேலும், இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் விவாதத்தையே நடத்தினர். வாஷிங்டன் சுந்தருக்கு ஆதரவாக ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அதாவது, 'இந்திய அணியில் இடம் பிடிக்கும் 15 வீரர்களில் ஒருவராக இருக்கும் வாஷிங்டன் சுந்தருக்கு, ஐ.பி.எல்., தொடரில் 10 அணிகள் இருந்தாலும், ஆடும் லெவனில் சேர்க்கப்படாது மர்மமாக இருந்து வருகிறது,' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், அவரது இந்தப் பதிவுக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்தவரும், கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ.,வுமான சுந்தர் பிச்சை கருத்து பதிவிட்டுள்ளார். அதில், 'இந்த விஷயம் எனக்கும் கூட ஆச்சரியமாக இருக்கிறது', என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து கமென்ட் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Narasimhan
மார் 28, 2025 00:39

ஏம்பா சன் ரைஸர்ஸ் உரிமையாளர்கள் யாரப்பா? ஏன் ஒரு தமிழக வீரர் கூட இல்லை ? குஜராத் அணியில் 4 தமிழரகள் உள்ளனர். ஊருக்குதான் உபதேசம்


Ramachandran j
மார் 27, 2025 16:11

வருண் சக்கரவர்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தானே அவருக்கு கே கே ஆர் வாய்ப்பு வழங்கப்படவில்லையா வட இந்தியர்கள் தென்னிந்தியர்கள் என்று பிரிவினை பேசுபவர்கள் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்


Ramesh Sargam
மார் 27, 2025 11:39

இந்திய கிரிக்கெட் அமைப்பு வடக்கத்தியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் தென் மாநில வீரர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். பார்த்தால், இதுவும் ஒருவகை apartheid மாதிரிதான்.


Sampath Kumar
மார் 27, 2025 10:53

இன பாசம் பேசுது போல பேசுங்க ...


வலியவன்
மார் 27, 2025 11:13

ஏன் வலிக்குது. உனக்கு இங்கென்ன வேல. நீ ஒரு ஜந்து, இனிமேல் நீ கருத்து போட்ட..,


வலியவன்
மார் 27, 2025 11:16

அது இன பாசம் ஆனால் நீ ஒரு ஈனம்


Ganesh Subbarao
மார் 27, 2025 13:28

வாஷிங்டன் சுந்தர் ஐயர் இல்லையே அப்புறம் எப்படி இனப்பாசமா இருக்கும்? முரசொலி அறிவாளிகளுக்கு இவ்வளவு அறிவுதான் இருக்குமோ?


MP.K
மார் 27, 2025 10:48

Cricket team like recruitments in IITs but this one is really no.


மூர்க்கன்
மார் 27, 2025 10:25

வாஷிங்டன் சுந்தருக்கு வாஷிங்டனில் இருக்கும் சுந்தர் ஆதரவளிப்பதில் என்ன வியப்பு. முப்பரிமாண வீரர் ஆயிற்றே?


Anbuselvan
மார் 27, 2025 10:22

இந்த விஷயத்தில் திரு சுந்தர் பிச்சை அவர்கள் வெறும் கிரிக்கெட் ரசிகரே ஆவார். கூகுளை தலைவராக இருப்பதனால் அவரது குரல் உங்கள் எல்லோருக்கும் கேட்கிறது. இதுவே சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் குரலை எழுப்பினால் அதை ஒரு செய்தியாகவே மதிக்க மாட்டார்கள்.


Nagarajan D
மார் 27, 2025 09:56

இதுவும் ஒரு வித ராஜ தந்திரமாக இருக்கலாம்.. இந்த வீரரை வேறு எந்த அணியும் எடுக்காமல் இருக்க இவரை விலை கொடுத்து வாங்கி சும்மா இருக்க வைத்தாலும் போதும்...


Oru Indiyan
மார் 27, 2025 09:52

ஒரு சுந்தருக்கு இன்னொரு சுந்தர் ஆதரவு.


புதிய வீடியோ