உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோபத்தில் பா.ஜ. தலைமை!

கோபத்தில் பா.ஜ. தலைமை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல், ஒருவர் மீது இன்னொருவர் புகார் தருவது என்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வியாதி, தமிழக பா.ஜ.,வை தொற்றிக் கொண்டு விட்டது; இது பா.ஜ., தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தமிழக பா.ஜ., மீது கோபத்தில் உள்ளாராம். 30 பொதுக்குழு உறுப்பினர்களும், ஒருவருக்கு எதிராக ஒருவர் கட்சி தலைமைக்கு புகார் அனுப்பிய வண்ணம் உள்ளனர். அதிலும், சில புகார்கள் தனிப்பட்ட வாழ்க்கையை குறி வைத்துள்ளது. 'இப்படி புகார் செய்து கொண்டிருந்தால், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் எப்படி பா.ஜ., வளரும். பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகை தருவதோடு, தமிழை உலக அளவில் எடுத்து செல்கிறார். ஆனால் தமிழக பா.ஜ., தலைவர்கள் இப்படி செயல்படுகின்றனரே' என, தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டாராம் நட்டா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை