உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தலைமுடியை வைத்து தலையெழுத்தை மாற்றியவர் இந்தியாவின் ஜேம்ஸ் பாண்டு அஜித் தோவல்

தலைமுடியை வைத்து தலையெழுத்தை மாற்றியவர் இந்தியாவின் ஜேம்ஸ் பாண்டு அஜித் தோவல்

புதுடில்லி: மிஷன் மஜ்னு , 2023ல் வெளியான பாலிவுட் திரைப்படம். இதில் கதாநாயகனாக சித்தார்த் மல்ஹோத்ரா, கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தனர். பாகிஸ்தானில் நடப்பது போல கதை நகரும். அமன் என்ற பெயரில் சிறு, சிறு வேலைகள் செய்யும் நாயகன் சித்தார்த், இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' ஏஜன்ட் என்பது தான் இந்த கதையில் வரும் ட்ஸ்விட்.

அணுகுண்டு சோதனை

அவர் ஏன் பாகிஸ்தானில் இருக்கிறார் என்பது திரைக்கதையில் சுவாரஸ்யம் குறையாமல் சொல்லி இருப்பர். கடைசியில் இந்தியாவின் 'ரா' உளவு அமைப்பு கொடுத்த அசைன்மென்டை முடித்து விடுவார். அங்கிருந்து தப்ப முயலும்போது, இந்திய அதிகாரிகள் செய்த தவறால், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி உயிரை விட்டிருப்பார். இது வெறும் கதையல்ல.. நிஜத்தில் நிகழ்ந்தது. திரைப்படத்திற்காக சில காட்சிகளை மட்டும் சுவாரஸ்யப்படுத்தி எடுத்திருப்பர். ஆனால், பாகிஸ்தான் அணு குண்டை தயாரிக்கிறதா? எந்த இடத்தில் தயாரிக்கிறது? அதை எப்படி கதாநாயகன் கண்டுபிடித்தார் என செல்லுலாய்டில் விரிந்த காட்சிகள் எல்லாம் நிஜத்தில் நடந்த உண்மை. திரையில் சித்தார்த் நாயகன் என்றால், நிஜத்தில், நம் நாட்டின் ஜேம்ஸ் பாண்டு என்றழைக்கப்படும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தான் நாயகன். கடந்த 1974ல் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதால், பாகிஸ்தான் பதறி போயிருந்தது. பதிலுக்கு தானும் அணுகுண்டு சோதனை நடத்த வேண்டும் என துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. இதற்காக அணு விஞ்ஞானியான ஏ.கே.கான் என்றழைக்கப்படும் அப்துல் காதீர் கானை கொம்பு சீவி விட்டது பாகிஸ்தான். அத்துடன் யுரேனியத்தை வாங்க சீனாவுடனும் கைகோர்த்தது. அதன் பின் அணுகுண்டை உருவாக்குவதற்கான பணிகள் ரக சியமாக மேற்கொள்ளப் பட்டன. பாகிஸ்தானின் குவெட்டாவில் தான் அணு ஆயுத தளம் அமைந்திருக்கும் என சந்தேகித்த இஸ்ரேல், அதை தாக்கி அழிக்கவும் தயாராக இருந்தது. ஆனால், உண்மையில் எங்கு அணு ஆயுத தளம் இயங்குகிறது என்பதை கண்டுபிடித்தவர் நம் ஜேம்ஸ் பா ண்டு அஜித் தோவல் தான். பாதுகாப்பு இதற்காக பாகிஸ்தானில் ஆறு ஆண்டுகள் வரை தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். பெரும்பாலான நேரங்களில் யாசகம் கேட்பவர் போல தலையில் முக்காடு போட்டு ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்துக் கொண்டிருந்தார். அதில் தான், பாகிஸ்தானின் கஹுதா என்ற இடத்தில் அணு ஆயுத தளம் இயங்கி வருவதை கண்டுபிடித்தார் அஜித் தோவல். ஆனால், அதை ஆதாரப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதற்காக யோசித்தபோது தான், அணு கதிர் வீச்சு பற்றிய சிந்தனை அவரது மூளைக்குள் எட்டி பார்த்தது. அடுத்த வினாடியே, அணு விஞ்ஞானிகள் வந்து செல்லும் சலுான் கடையை நோட்டமிட்டார் தோவல். மக்க ளோடு மக்களாக கலந்து, அந்த சலுான் கடைக்கு சென்றவர், அங்கிருந்த தலைமுடியை சேகரித்து ரகசியமாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். உடனடியாக அதை பரிசோதனை கூடத்தில் வைத்து பரிசோதித்தபோது தான், உண்மையிலேயே பாகிஸ்தான் அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது ஊர்ஜிதமானது. அந்த தலைமுடிகளில் அணு கதிர்வீச்சை வெளிப்படுத்தும் யுரேனியம் இருந்தது. இதை வைத்து இந்தியாவின் பாதுகாப்பு கொள்கைகள் வலுப்படுத்தப்பட்டன. தவிர, பாகிஸ்தானின் ரகசியம் அஜித் தோவல் மூலம் வெளியுலகிற்கு கசிந்ததால், அணுகுண்டை தயாரிக்க, அந்நாடு மேலும் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. தேவ்தத் எழுதிய 'அஜித் தோவல் - ஆன் ஏ மிஷன்' என்ற பு த்தகத்தில், நாட்டிற்காக அஜித் தோவல் செய்த சாகசங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankaranarayanan
ஆக 27, 2025 21:00

தலைமுடியை வைத்து தலையெழுத்தை மாற்றியவர்கள் வரிசையில் இருந்தவர் நமது எம்.ஜி.ஆர். அதை பின் தொடர மஹா பாடு படுகிறார் இப்போதுள்ள திராவிட மாடல் அரசு ஆட்சியாளர்


Ashok Subramaniam
ஆக 27, 2025 20:13

நம்முடைய பிரச்சினையே இதுதாங்க.. உதாரணத்துக்குக் கூட அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேம்ஸ் பாண்டு, சிஐஏ, மொஸாட் என்றுதான் பேசுவோம்.... அஜித் தோவால் போன்றவர்களெல்லாம் இங்கேயே பிறந்து, இங்கேயே கற்றவர்கள்.. பிரிட்டனின் அஜித் தோவல், அல்லது அமெரிக்காவின் அஜித் தோவல் என்று அவர்கள் யாராவது பெருமை அடித்துக்கொள்வார்களா?


Rathna
ஆக 27, 2025 16:54

தோவல் தன்னை பாக்கிஸ்தான் அரசு கண்டுபிடிக்காமல் இருக்க, ஒரு முஸ்லீமாக மசூதிக்கு சென்று தினமும் துவா செய்ததும், இதை ஒரு பாகிஸ்தானிய முதியவர் கண்டுபிடித்தார். முதியவர் ஒரு பாகிஸ்தானிய ஹிந்து. அவரது குடும்பம் முஸ்லீம் மதவாதிகளால் அழிக்கப்பட்டதால், அவர் ஒரு போலி முஸ்லிமாக வாழ்ந்து வந்தார். ஒரு முறை அவர் தனது வீட்டிற்கு தோவல் அவர்களை அழைத்து சேர்ந்து தான் வழிபாடும் சிவ பெருமானை டோவலுக்கு காண்பித்ததும் வரலாறு.


A.Kennedy
ஆக 27, 2025 11:32

இதை போல நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை தினமலர் தவிர தினமலரின் நாட்டு ப்பற்று நன்றாக வெளிப்படுகிறது வேறு எந்த பத்திரிக்கைகளும், செய்தி ஊடகங்களும் இதே போல செய்திகளை வெளியிடுவதில்லை என்பது மிகவும் வருத்தமான உண்மை.


கண்ணன்
ஆக 27, 2025 11:26

கடைசியில் அது அமெரிக்காவின் அணு ஆயுதக் கிடங்கென்பதும்...


சசிக்குமார் திருப்பூர்
ஆக 27, 2025 08:02

இதை மையமாக வைத்து இப்போது இரண்டு வெப்சீரீஸ் வந்துள்ளது. சலாக்கர் மற்றும் ஜெய ஜெய ஜெயகே


புதிய வீடியோ