உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஸ்டாலின் வேட்பு மனுவில் தகவல்கள் மறைப்பு? வழக்கு தள்ளிவைப்பு

ஸ்டாலின் வேட்பு மனுவில் தகவல்கள் மறைப்பு? வழக்கு தள்ளிவைப்பு

சென்னை: கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில், அறக்கட்டளை தகவல்களை மறைத்தது தொடர்பாக, விசாரணை நடத்த கோரிய மனு மீதான விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட திருஞானசம்பந்தம் என்பவர் தாக்கல் செய்த மனு: சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் தொகுதியில், முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தி.மு.க., அறக்கட்டளை நிர்வாகியாக, தான் இருப்பதையும், அறக்கட்டளை சார்பாக, செங்கல்பட்டு மாவட்டம், கடம்பாடியில் 2.27 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கிய விபரத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே, மனுவை பரிசீலித்து, விசாரணை நடத்தவும், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தரப்பில், 'வேட்பு மனுவில் அறக்கட்டளை குறித்த விபரங்களை சமர்ப்பிக்க அவசியமில்லை' என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், 'வேட்பு மனுவில் என்ன தகவல்கள் மறைக்கப்பட்டு உள்ளன என்பதற்கான ஆதாரங்கள் எங்கே' என, மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில், சில ஆவணங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. அந்த ஆவணங்கள் தமிழில் இடம் பெற்றிருந்ததால், அவற்றை மொழி பெயர்த்து தாக்கல் செய்ய, மனுதாரருக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mani . V
ஜூலை 29, 2026 05:01

ஒன்னும் அவசரமில்லை. 2056 ஆண்டு விசாரித்துக் கொள்ளலாம். 2016 ஆண்டு இரும்புக்கை கோப்பால் சார் வெற்றி பெற்றது செல்லாது என்ற வழக்கையே இன்னும் விசாரிக்கவே ஆரம்பிக்கவில்லை. இதுக்கென்ன அவசரம்?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 28, 2026 22:24

கமாண்டரை ஏன் தொட்டுப் பார்க்குறாங்க >> சீண்டிப் பார்க்குறாங்க >>


என்றும் இந்தியன்
ஜூலை 28, 2026 17:55

ரூ 3.25 லட்சம் கோடி ஸ்டாலினிடம் உள்ளது??சேர்த்தது யார்??அவர் அப்பா கருணாநிதி???மன்னார்குடியிலிருந்து சென்னை வரும்போது டிக்கெட் எடுக்கக்கூட வசதிஇல்லாமல் திருட்டு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்த இவர் சேர்த்த சொத்து ரூ 3.25 லட்சம் கோடி????அரசியலில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அதை யாரும் தட்டிக்கேட்கமுடியாது என்பது போல இருக்கின்றது?????


என்றும் இந்தியன்
ஜூலை 28, 2026 17:51

Movable Assets: ₹3.30 crore includes bank deposits and personal holdingsImmovable Assets: ₹2.96 crore includes self-acquired and inherited residential and agricultural landSpouse Assets: His wife, Durga Stalin, d movable assets of ₹1.32 crore and immovable assets of ₹2.11 crore. Annual Income: Reported as ₹30.54 lakh for the 2024-25 financial year


பல்லவி
ஜூலை 28, 2026 16:28

அவர் ஒரு முன்னாள் முதல்வர் ஆவார் இந்த சிரிப்பு எல்லாம் முடிந்து விட்டது. பேரனும் மகனும் ஆட்சிக்கு வந்தால் இந்த மாதிரி தான் சிரிப்பு வரும்.


duruvasar
ஜூலை 28, 2026 14:13

கொண்டை டிசைனை மாற்றவேண்டும்.


krishna
ஜூலை 28, 2026 12:50

ADA NEENGA VERA ENGA THALA 10000 ROOVAA KANAKKU KAAMICHARU.KUDUMBSTHODA LONDON ONE WEEK SUTTRULA POYITTU VANDHU IPPO VERUM 9000 ROOVAA MATTUME KAYIL ULLADHU.PAAVAM AVARU.


Naga Subramanian
ஜூலை 28, 2026 11:30

என்ன ஒரு தெய்வீக சிரிப்பு- பாருங்க


Arumugam Palani
ஜூலை 28, 2026 09:38

எந்த நீதிமன்றங்களுக்கும் அந்த குடும்பம் பல்லாயிரம் கோடிகளை தங்கள் வசம் வைத்துள்ளது என்பதும் அவர்களுடைய சொகுசு வாழ்க்கை முறைகளும் தெரியாதா ..


vijay
ஜூலை 28, 2026 06:44

தலைவர் சிரிப்ப பாத்தீங்களா


பிரேம்ஜி
ஜூலை 28, 2026 08:28

அவரு நம்பள பாத்து நக்கலா சிரிக்கிற மாதிரி இருக்கு! எத்தனை கேஸூ போட்டாலும் எந்தக் கொம்பனாலேயும் என்னையும் ஒண்ணும் செய்ய முடியாது என்கிறாரோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை