உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வழிபாட்டு உரிமை அவமதிப்பு: காடேஸ்வரா

வழிபாட்டு உரிமை அவமதிப்பு: காடேஸ்வரா

திருப்பூர் : ''ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை தமிழக அரசு அவமதிக்கிறது,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றம்சாட்டி உள்ளார்.

அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை:

வேலுார் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, ஜிட்டப்பள்ளி கிராமத்தில், 200 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில், நடுகல் மற்றும் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த திறந்தவெளி கோவிலை, சுற்றுச்சுவர் எழுப்பி, கோவில் கட்ட முயற்சித்த போது, கோவிலுக்கு அருகில் குடியேறிய பிற மதத்தை சேர்ந்த சிலர், ஆட்சேபனை தெரிவித்தனர் என்பதற்காக, தாசில்தார் கோவில் கட்ட தடை விதித்துள்ளார். பொதுமக்கள், கலெக்டரிடம் முறையிட்டனர். கோவில் கட்ட தடை ஏற்படுத்திய நிலையில், தற்போது, கோவில் திருவிழா நடத்தவும் போலீசார் தடை விதித்துள்ளனர். நீண்ட போராட்டத்துக்கு பின், பெண்களை மட்டும் பொங்கல் வைக்க அனுமதித்துள்ளனர். இதுதவிர, பூசாரி மற்றும் கோவில் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, போலீசாரால் மிரட்டப்பட்டுள்ளனர். இதன் வாயிலாக, மக்களின் வழிபாட்டு உரிமையை காவல்துறை பறித்துள்ளது. இது ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையை அவமதிக்கும் செயல். இவ்வாறு, காடேஸ்வரா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venkatesan
ஜூன் 03, 2025 21:19

No Good


Siva Balan
ஜூன் 03, 2025 13:16

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு என்ன வேலை. இந்த தமிழர்கள் என்னும் அகதிகளை விரட்டவேண்டும்.


lana
ஜூன் 03, 2025 11:24

மக்களின் பிரச்சனைகளை தீர்க்க தான் ஆட்சியாளர்கள். இவர்கள் தீர்க்க அவர்கள் ஏன் வெட்டி சம்பளமும் படிகள் வாங்க வேண்டும். திருப்பூர் இல் சட்ட மீறி மசூதி கட்டப்பட்டது. அதை இடிக்க உய‌ர் நீ‌திம‌ன்ற‌ம் 2 நீதிபதிகள் உத்தரவு போட்டும் 1 வருடமாக இன்னும் நடவடிக்கை இல்லை. இது வங்க கள்ள குடியேறி கட்டியது. ஓட்டு பிச்சை எடுக்கும் அரசுக்கு இந்த சூடு சுரணை இல்லாத மத சார்பற்ற இந்துக்கள் பதில் சொல்ல வேண்டும்


Kalyanaraman
ஜூன் 03, 2025 09:18

சட்டத்தை காக்க வேண்டிய காவல்துறையே ஒரு மதத்திற்கு எதிராக செயல்படும் பொறுப்பற்ற போக்குக்கு சட்டப்படி கடுமையான தண்டனை இல்லை என்பதாலேயே.


முருகன்
ஜூன் 03, 2025 07:38

கடவுளை தவிர வேறு மக்கள் பிரச்சனைகள் எதுவும் பேச தெரியாது இவர்களுக்கு


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 03, 2025 08:17

பால் தினகரன், மோகன் லாசரஸ் இவர்களை மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசுங்கள் என்று என்றைக்காவது கேட்டிருக்கோமா


vivek
ஜூன் 03, 2025 09:07

ஓட்டு போகுது முருகா....அதுக்கு போய் காவடி எடு


Chanakyan
ஜூன் 03, 2025 17:02

இந்த கேள்வியை பிற மத தலைவர்களிடம் எழுப்ப முடியுமா எனக் கேட்க நினைத்தால்??? முடியவில்லை. பிற மதத்தினருக்கு இது போல் எந்த சங்கடத்தையும் இந்த அரசு தரவில்லை. ஓட்டு வங்கி அரசியல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை