உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம்: புதிய கோணத்தில் விசாரணை துவக்கம்

ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம்: புதிய கோணத்தில் விசாரணை துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் கடந்த 13 ஆண்டுகளாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில், டி.ஐ.ஜி., வருண்குமார் மீண்டும் விசாரணையை துவக்கி உள்ளார். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு தம்பி ராமஜெயம், 2012 மார்ச் 29ம் தேதி, திருச்சி தில்லை நகரில் நடைபயிற்சி சென்றார். அவரை காரில் கடத்திச் சென்று, திருச்சி - கல்லணை சாலையில் உள்ள திருவளர்ச்சோலை என்ற இடத்தில் கொடூரமாக கொலை செய்தனர். அவரது கைகள் பின்னால் கட்டப்பட்டு இருந்தன. உடல் முழுதும் இரும்பு கம்பியால் சுற்றப்பட்டு இருந்தது. இக்கொலை நடந்து, 13 ஆண்டுகள் ஆன போதிலும், கொலையாளிகள் யார்; திருச்சியில் மிக முக்கிய புள்ளியாக ஆதிக்கம் செலுத்தி வந்த ராமஜெயம் எதற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து, திருச்சி மாநகர போலீசார் மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகளால் கூட துப்பு துலக்க முடியவில்லை. தற்போது இந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். இக்குழுவில், எஸ்.பி., ஜெயகுமார் இடம்பெற்று இருந்தார். இவர், திருவாரூர் மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டதால், ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதனால், விசாரணை அதிகாரிகளாக திருச்சி டி.ஐ.ஜி., மற்றும் தஞ்சாவூர் எஸ்.பி., ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றம் நியமனம் செய்தது. திருச்சி டி.ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்த வருண்குமார், சென்னையில் சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். ராமஜெயம் கொலை குறித்து, திருநெல்வேலி மாவட்டம், மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி சுடலைமுத்துவிடம், அவர் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளார். அதன் அடிப்படையில், சுடலைமுத்துவின் கூட்டாளியான திருச்சி மணச்சநல்லுாரைச் சேர்ந்த ரவுடி குணா என்பவரிடம், நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார். இதுகுறித்து, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கூறியதாவது: திருச்சியில், ரவுடிகள் பிச்சமுத்து, முட்டை ரவி, மணல்மேடு சங்கர் ஆகியோர் அட்டூழியம் செய்து வந்தனர். போலீசார் நடத்திய 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டனர். முட்டை ரவியின் மூளையாக செயல்பட்டவர் ரவுடி குணசீலன் என்ற குணா. இலங்கை தமிழரான இவர், மணச்சநல்லுார் குணா என, அழைக்கப்படுகிறார். தன் குருவான முட்டை ரவி, 'என்கவுன்டர்' செய்யப்பட்டதற்கு ராமஜெயம் தான் காரணம் என கருதினார். இதனால், ராமஜெயத்தை கொல்லாமல் விட மாட்டேன் என சபதம் எடுத்து செயல்பட்டு வந்தார். குணாவின் வலது கரம் தான், திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த ரவுடி சுந்தரபாண்டியன். இவர்களது 'டீம்' தான், புல்லட் மனோகர் என்பவரை கொலை செய்தது. இது, ராமஜெயம் கொலை பாணியிலேயே இருந்தது. மேலும், ராமஜெயம் கொலை செய்யப்பட்ட விதம், இலங்கையில் மடக்களப்பு பகுதியில் நடப்பது போலவே இருந்தது. இதனால், இவரின் கொலையில் இலங்கையைச் சேர்ந்தவர் பின்னணியில் இருப்பதாக, டி.ஐ.ஜி., வருண்குமார் முடிவுக்கு வந்துள்ளார். குணா, சுந்தரபாண்டியன், சுடலைமுத்து உள்ளிட்டோர் தான் ராமஜெயத்தை கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், விசாரணை வளையத்தில், 13 ரவுடிகள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். ராமஜெயம் வாயில் துணி ஒன்றும் திணிக்கப்பட்டு இருந்தது; இது காரில் தொங்க விடப்பட்டு இருந்த திரைச்சீலை என்பதும் உறுதியாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Shankar Ganesh
ஆக 19, 2025 19:26

புரமோசன் நிச்சயம்


MAHADEVAN NATARAJAN
ஆக 16, 2025 08:56

they know who did it. the police do not want to catch the culprit. all political boss's Will


சிட்டுக்குருவி
ஆக 16, 2025 01:48

13 வருடங்களை கடந்தாச்சி .துப்புதுலங்கவில்லை .எதற்கும் தென்காசி புளியாரை கருப்பசாமியிடம் ஒருமுறை கேட்டுப்பாருங்கள் .அவர் ஏதாவது துப்புக்கொடுப்பார் .


Vijay D Ratnam
ஆக 15, 2025 23:29

ரீலு அந்துபோச்சு


Easwar Kamal
ஆக 15, 2025 16:29

ஜெய காலத்தில் இவர்கள் எல்லாம் குண்டர் சட்டத்தில் உள்ளெ போய் இருக்க வேண்டியது. ஜெய செய்த தவறு இவர்களை விட்டு வைத்தது. இப்போது இவர்கள் அராஜகம் மீண்டும் திருச்சியில் தொடர்கிறது.


Tamilan
ஆக 15, 2025 13:02

இந்து மதவாத குண்டர்களின் பின்னணிதான் அனைத்திற்கும் காரணம். அரசியலுக்காக அதிமுக இந்து பரிவாரங்களும் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய கொலைவெறி தாக்குதல்


ஆசாமி
ஆக 15, 2025 13:50

இப்படி புளுகித்தான்...


பேசும் தமிழன்
ஆக 15, 2025 15:51

கொலை..... குண்டு வெடிப்பு..... எல்லாம் உங்கள் கும்பல் நடத்தும் இழி செயல் ....இதை தான் சந்தில் சிந்து பாடுவது என்று கூறுவது.


நிக்கோல்தாம்சன்
ஆக 15, 2025 20:06

இப்படித்தான் பாகிஸ்தானி முஸ்லீம் தீவிரவாதி கசாபையும் , குசராத்து ரயில் எரிப்பு ஈடுபட்ட பன்றிகளை காப்பாற்ற முயன்றீர்கள்


BHARATH
ஆக 17, 2025 14:19

நான் சொல்றேன் உன்னை மாதிரி தீவிரவாத கோஷ்டிதான் இவனுக்கு பயிற்சி கொடுத்தது.


தமிழ்வேள்
ஆக 15, 2025 11:51

சிபிஐ விசாரணை வேண்டாம் என கதறி கதறி அழுதார்கள் போல.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 15, 2025 10:51

இந்த தேடுதல் வேட்டையே உண்மைக் குற்றவாளி பக்கம் மக்களின் பார்வை பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால் பொது ஜனங்கள் எல்லோருக்கும் உண்மைக்குற்றவாளி யார் என்று தெரியும். ஏன், தேடும் கழக காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 15, 2025 10:49

இன்னும் நுறு ஆண்டுகள் ஆனாலும் உண்மையான கொலையாளியை கண்டு புடிக்க முடியாது. இதே போல 2006ல் மதுரை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் பல்லாயிரம் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிந்திருந்த கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற உள்ளாட்சித்துறை அமைச்சரை ஒருவன் கத்தியால் குத்த வந்தானாம். அந்த குத்த வந்தவனையும் இன்று வரை கண்டு புடிக்க முடியாமல் நமது போலீஸ் இருக்கிறது.


Madhavan
ஆக 16, 2025 00:44

அது Z plus பாதுகாப்புக்காக பந்தா நடந்தப்பட்ட நாடகம்.


தியாகு
ஆக 15, 2025 10:27

கட்டுமரம் ஒருமுறை கே என் நேருவிடம் என்னப்பா, திருச்சியில் மலைக்கோட்டையை தவிர எல்லாத்தையும் சுருட்டிட்டியாமே என்று கேட்டாராம். அதற்கு கே என் நேரு என்ன தலைவரே, நீங்க சென்னையில் சுருட்டியதைவிடவா நான் சுருட்டிவிட்டேன் என்று சிரித்துக்கொண்டே மழுப்பினாராம். இருந்தாலும் தலைவர் கேட்டுவிட்டாரே என்று சங்கடப்பட்டுக்கொண்டு தலைவரை கூல் செய்ய கணியக்காவிற்கு திருச்சியில் ஒரு சொத்து வாங்கிக்கொடுத்ததாக தகவல். அதேபோல செம்மொழி மாநாடு கோவையில் நடந்தபோது கட்டுமரம் கட்சியினரிடம் கணியக்காவிற்கு கோவையில் சொத்து ஏதும் இல்லை என்று வருத்தப்பட்டு சொன்னாராம். அதனால் கணியக்காவிற்கு திருட்டு திமுகவினர் கோவையிலும் ஒரு சொத்து வாங்கிக்கொடுத்ததாக தகவல். கட்டுமரம் தனது குடும்ப சொந்தங்களுக்கு சொத்து சேர்த்ததில் எவ்வளவு  உஷார் பாருங்க. இப்போது வழக்கு என்று வந்தால் அண்ணாமலை கணியக்காவின் இந்த சொத்துக்களை பற்றியும் கோர்ட்டில் கேள்வி கேட்பார். அப்போது கணியக்கா கோர்ட்டில் என்ன பதில் சொல்வார்?. பிறகு என்ன வழக்கம்போல வெள்ளைக்கொடியுடன் கணியக்கா ஜகா வாங்கி திரும்பி வந்த சுவடு தெரியாமல் ஓடி விடுவார். இதில் கொடுமை என்னன்னா, இதை படித்துவிட்டும் ஒரு சிலர் கட்டுமர திருட்டு திமுகவிற்கு அடுத்த தேர்தலிலும் ஓட்டு போடுவார்கள். விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.