உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆந்திரா செல்லும் முதலீடுகள்; தவற விடும் தமிழக அரசு

ஆந்திரா செல்லும் முதலீடுகள்; தவற விடும் தமிழக அரசு

அமராவதி: தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய, கிட்டத்தட்ட 9,700 கோடி ரூபாய் முதலீடுகளை, கடந்த மூன்று மாதங்களில், ஆந்திரா ஈர்த்து உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. தென்னிந்தியாவின் தொழில் மையமாக ஆந்திராவை மாற்றுவதில் மாநில அரசு, தீவிர கவனம் செலுத்துகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஏசி நிறுவனமான கேரியர் குளோபல், சென்னையை மையமாக கொண்டு, தென்னிந்தியாவில் தன்னுடைய முதல் ஆலையை அமைக்க திட்டமிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nauidaz2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், சென்னைக்கு அருகே, ஆந்திர எல்லையான ஸ்ரீசிட்டியில் தற்போது ஆலை அமைக்க இந்நிறுவனம் முன்வந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில், கேரியர் குளோபல், 1,000 கோடி ரூபாயை அங்கு முதலீடு செய்ய உள்ளது. இதன் வாயிலாக 500- 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, கூறப்படுகிறது.தென்கொரியாவை சேர்ந்த எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தமிழகம் அல்லது கர்நாடகாவில் ஆலை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், விரைவான நிலம் ஒதுக்கீடு, உடனடி ஒப்புதல் வாயிலாக ஆந்திரா முந்தி கொண்டு, 5,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து உள்ளது. இது தவிர, ஸ்ரீசிட்டியில் எல்.ஜி.,எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவனங்கள், 2,000 கோடி ரூபாயை முதலீடு செய்து ஆலைகள் அமைக்க உள்ளன.தெலுங்கானாவின் சீதாராம்புர் தொழில் பூங்காவில் 1,700 கோடி ரூபாய் முதலீட்டில், பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனம் 4 ஜிகாவாட் திறன் கொண்ட சோலார் பேனல் செல் உற்பத்தி ஆலை அமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது அதுவும் ஆந்திராவின் நெல்லுாரில் உள்ள நாயுடுபேட்டா தொழில் பூங்காவுக்கு இடம் மாறி உள்ளது.தென்னிந்திய மாநிலங்களில் முதலீட்டை ஈர்ப்பதில், ஆந்திரா முனைப்புடன் செயல்படும் நிலையில், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் கோட்டை விடுவதையே இது காட்டுகிறது. தமிழகம், தெலுங்கானாவுக்கு வர வேண்டிய ரூ.9,700 கோடி முதலீடுகளை ஈர்த்துக் கொண்டது ஆந்திரா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

guna
மார் 26, 2025 21:52

வேகாத பகோடா தான் பாமரன்


பாமரன்
மார் 26, 2025 18:40

ஸ்ரீசிட்டி சென்னை அருகில் மற்றும் தமிழ் நாட்டின் மனித வளத்தை நம்பி தனியாரால்... ரிப்பீட் தனியாரால் நடத்தப்படும் தொழில்பேட்டை... அங்கு உள்ள நிறுவனங்களின் நடு மற்றும் முதுநிலை அதிகாரிகள் கிட்டத்தட்ட அனைவரும் சென்னையில் இருந்து போய் வருபவர்கள்... அங்கு இருக்கும் நிறுவனங்கள் யூஸ் பண்ணுவதும் சென்னையில் இருக்கும் துறைமுகங்களை தான்... நொய்டாவில் குர்கானில் பரீதாபாத்தில் வரும் வளர்ச்சி டில்லியின் தோல்வின்னு சொன்னால் நம்பும் பகோடா பீஸ்கள் இந்த நியூஸ் படிச்சிட்டு குதூகலிப்பார்கள்... அட அப்ரசண்டிகளா அந்த தனியார் தொழில் பேட்டை கூட காங்கிரஸ் ஆட்சியில் வந்தது...


krishna
மார் 26, 2025 20:04

EERA VENGAAYAM PAAMARAN IVVALAVU KEVALAMA 200 OOVAA COOLIKKU MUTTU KODUKKUREENGA.UNGA MAGAN THAYAARA INBAAVUKKU KODI PIDIKKA. NEENGA ELLAM INDHA MANNIN SAABA KEDU. IPPADIYAA EAKAR KANAKKIL POYYA SOLLI MUTTU KODUPPEENGA ADHUVUM JUST 200 OOVAA COOLIKKU.


vivek
மார் 26, 2025 21:50

பாமர மூளைக்கு மாநில.எல்லைகள் தெரியுமா...ஓசூர் தாண்டினால் கர்நாடக மாநிலம் அறிவிலி


krishna
மார் 26, 2025 17:42

I DONT CARE.THAM8ZHAN ELLAM VELAIKKU PONA EN MAGAN PERANUKKU KOTHADIMAI AAGA POSTER OTTA AAL VENDAAMA.IPPO ENAKKU MUTTU KODUKKUM OOPIS VENUGOPAL OVIYA VIJAYAN PONDRA KOMAALIGA PILLAIGAL EN SANDHADHIKKU KOTHADIMAI AAGA 200 OOVAAVUKKU VELAI .ADHUDHAAN DRAVIDA MODEL VELAI.


venugopal s
மார் 26, 2025 16:38

டெல்லிக்கு அருகாமையில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா மற்றும் ஹரியானாவின் குர்கான் தொழில் நகரங்கள் மற்றும் பெங்களூருக்கு அருகாமையில் உள்ள தமிழகத்தின் தொழில் நகரான ஹோசூர் போன்றே சென்னைக்கு அருகாமையில் உள்ள ஸ்ரீசிட்டியை ஆந்திர அரசு தொழில் நகரமாக மாற்றி உள்ளது! இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? இது தமது மாநிலத்தின் தொழில்துறை முன்னேறத்துக்கு அந்தந்த மாநில அரசுகளின் ஒரு வகை ஸ்ட்ராடெஜி, அவ்வளவுதான்!


ஆரூர் ரங்
மார் 26, 2025 14:00

ஓங்கோல் வளர்வது மகிழ்ச்சிதானே?


c.mohanraj raj
மார் 26, 2025 13:16

என்ன பெரிய தொழில் எங்களுக்கு சாராயம் இருக்கிறது அது போதும்


Sadananthan Ck
மார் 26, 2025 11:23

எங்களுக்கு இப்போது தொழிலா முக்கியம் இல்லாத இந்தி திணிப்பு இன்னும் எதுவுமே தெரியாத தொகுதி மறு சீரமைப்பு அதுதான் முக்கியம் மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு ஓட்டு வாங்க வேண்டும் மற்றபடி தொழில் எல்லாம் எங்களுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை


Shekar
மார் 26, 2025 11:09

ஸ்டெர்லைட் ஆலையை முடியாச்சி. சாம்சங்க்கு கொடைச்சல். டங்ஸ்டன் ஆலை நிறுத்தம். இப்படி எல்லாம் நடந்தா எவன் வருவான்.


अप्पावी
மார் 26, 2025 10:53

இப்பதான் முதலுடு வெளியேறுதாக்கும்? ரொம்ப நாளாவே கலப்பட நெய் திருப்பதிக்கு போய்க்கிட்டே இருக்கே..


Bhaskaran
மார் 26, 2025 09:02

இப்போ எங்களுக்கு நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை பிரச்சனை தான் முக்கியம் வேலைவாய்ப்பு பத்தி கவலை இல்லை அரிசி ஒசி மாதம் ஆயிரம் தர்றோம் சாப்பிட்டுட்டு கலைஞர் டிவி பாருங்க இந்தி தெரிஞ்சவங்க வடநாட்டு கங்கு வேலைக்கு போகட்டும் இங்லீஷ் நல்லா தெரிஞ்சவங்க மேலை நாடு போகட்டும் உருது அரபி தெரிஞ்சவங்க வளைகுடா நாட்டுக்கு போய் வேலை செய்யட்டும் மத்தவங்க பேரன் வளர்ச்சிக்கு பாடுபடட்டும்


புதிய வீடியோ