உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மதுரையில் முருக பக்தர் மாநாடு உ.பி., முதல்வருக்கு அழைப்பிதழ்

மதுரையில் முருக பக்தர் மாநாடு உ.பி., முதல்வருக்கு அழைப்பிதழ்

திருப்பூர்: மதுரையில் ஹிந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.ஹிந்து முன்னணி சார்பில், 'குன்றம் காக்க... கோவிலை காக்க' என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு, மதுரையில் வரும் 22ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் வீடு தோறும் மக்களை சந்தித்து மாநாட்டில் பங்கேற்குமாறு, நிர்வாகிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர். மடாதிபதிகள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். சில நாட்கள் முன், சென்னை வந்த பவன் கல்யாணை நிர்வாகிகள் நேரில் சந்தித்து அழைப்பு கொடுத்தனர்.நேற்று முன்தினம் லக்னோவில் உ.பி., முதல்வரை சந்தித்து, ஹிந்து முன்னணி தென்பாரத அமைப்பாளர் பக்தன், பா.ஜ., மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஆகியோர் அழைப்பிதழை வழங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்க வருவதாக உ.பி., முதல்வர் உறுதியளித்துள்ளார்.மாநாடு அழைப்பிதழ் தொடர்பான புகைப்படத்தை உ.பி., முதல்வர், தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
ஜூன் 02, 2025 17:12

தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் மாநாட்டுக்கு தமிழர்கள் புறக்கணிப்பு மற்றும் தமிழர்களுக்கு அழைப்பு கிடையாது. ஆனால் உ. பி க்காரனுக்கும்,பீகார் காரனுக்கும், குஜராத் காரனுக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பா? அந்த முருகனுக்கே அடுக்காது!


முருகன்
ஜூன் 02, 2025 23:14

இதற்கு பின் இருப்பது யார் என்று முருகன் அறிவார்


Ramesh Sargam
ஜூன் 02, 2025 12:08

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் துணைவி துர்கா அவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுங்கப்பா. அவர் கட்டாயம் வருவார்.


madhesh varan
ஜூன் 02, 2025 11:03

சங்கிகளின் பொய்பிரச்சாரத்தை, மதவாதிகளின் தேசிய தனத்தை, மக்கள் நன்றாக பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள் ,


vivek
ஜூன் 02, 2025 12:45

பிரியாணி இருக்காது என்ற கோவத்தில் இது குரைகிறது


rasaa
ஜூன் 02, 2025 07:27

நீதிபதிகளின் தீர்ப்பு கேலி கூத்தாக உள்ளது. ஒருவர் தண்டணை என்கின்றார். மற்றொருவர் விடுவிக்கின்றார். அப்படி என்றால் தண்டணை என்று கூறியவர் முட்டாளா? இது தனிபட்ட கருத்து என எண்ணுக்கும் தவிர நீதி என கூறமுடியாது.


Svs Yaadum oore
ஜூன் 02, 2025 06:51

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை