உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பயங்கரவாதிகளின் புகலிடம் கோவை?

பயங்கரவாதிகளின் புகலிடம் கோவை?

கோவையில், 'அரபிக் கல்லுாரி' போர்வையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்காக, நான்கு பேர் ஆள் சேர்த்து வந்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த, 2022 கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த, பயங்கரவாத குண்டு வெடிப்பு தாக்குதலை, வெறும் சிலிண்டர் விபத்து என, தி.மு.க., அரசு பூசி மொழுக முயன்றது. ஆனால், இச்சம்பவத்தை அடுத்து தொடர்ச்சியாக, பயங்கவராத அமைப்புகளை சார்ந்தோர், தேசிய புலனாய்வு அமைப்பால், கோவையில் கைது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் தொடர்ச்சியாக நடந்து வரும் முதியோர் கொலை, மறுபுறம் கோவில் சிலைகள் சேதம். இதற்கிடையில் மனதை அதிர வைக்கும் அளவுக்கு, பயங்கரவாத அமைப்பினரின் புழக்கம் என, கோவை சுற்று வட்டாரப் பகுதிகளை, மொத்தமாக அச்சுறுத்தல் வளையத்திற்குள் வைத்து, மக்கள் பாதுகாப்பை கேள்வி குறியாக்கியுள்ளது தி.மு.க., அரசு. மொத்தத்தில், பயங்கரவாதத்தில் புகலிடமாக கோவை மாறி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Srprd
ஜூன் 20, 2025 21:38

Ever since Al Umma was found to have established itself there, the city permanently turned for the worse. Ukkadam and other suspicious areas should be regularly searched by NIA with the protection of Paramilitary personnel. It's definitely a warning sign if the Principal of a so-called Arabic college is doing anti national activities.


c.mohanraj raj
ஜூன் 20, 2025 14:24

ஒரு கல்லூரி முதல்வர் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்க்கிறான் என்றால் நம்முடைய கல்வியின் நிலை என்ன நாடு எங்கே போய்க் கொண்டிருப்பது இருக்கிறது என்று தெரியவில்லை


venugopal s
ஜூன் 20, 2025 14:10

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு கோவை ஒரு நல்ல உதாரணம்!


Ramesh Sargam
ஜூன் 20, 2025 12:57

நாடு முழுவதும் அந்த அமைதி மார்கத்தினர் நடத்தும் அரபிக் கல்லூரிகள் அனைத்தும் மொத்தமாக மூடப்படவேண்டும். அவர்கள் நம் நாட்டின் அமைதியை குலைக்க கல்லூரி என்கிற பெயரில் சதி செய்துகொண்டிருக்கின்றனர். பாக்கிஸ்தான் தெரிந்தே பயங்கரவாதிகளை வளர்க்கிறது. நாம் தெரியாமல் அவர்களை வளர்க்கிறோம். அது நிறுத்தப்படவேண்டும்.


Prasanna Krishnan R
ஜூன் 20, 2025 09:58

முதலில் எல்லா மாதரசாக்களையும் மூடு. அல்லது உள்ளே சிசிடிவி கேமராவை பொருத்து.


புதிய வீடியோ