உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஐகோர்ட் நீதிபதிகளை வசை பாடுவதா? தி.மு.க.,வுக்கு கிருஷ்ணசாமி கண்டனம்

ஐகோர்ட் நீதிபதிகளை வசை பாடுவதா? தி.மு.க.,வுக்கு கிருஷ்ணசாமி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : உயர் நீதிமன்ற நீதிபதிகளை தி.மு.க.,வினர் ஜாதி ரீதியாக வசை பாடுவதாக, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

பல்கலை துணைவேந்தர்களை நியமிக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவுக்கு தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை தாங்கிக்கொள்ள முடியாத தி.மு.க.,வினர், நீதிபதிகளின் படங்களை வெளியிட்டு, அவர்களை ஜாதி ரீதியாக வசை பாடியுள்ளனர். இது, தி.மு.க., மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்களின் வக்கிர புத்தியை காட்டுகிறது. இவர்கள் என்ன விரும்புகின்றனரோ, அதை அப்படியே எல்லா நீதிமன்றங்களும் தீர்ப்பு எழுதிட வேண்டும். இல்லையேல், அது 'பிராமண நீதிமன்றம்' என முத்திரை குத்துகின்றனர். இதை ஒரு உத்தியாக காலங்காலமாக பின்பற்றுகின்றனர். தி.மு.க.,வின் இந்த கலாசாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுவிடம் நிதி பெற்றே, அனைத்து பல்கலைகளும் இயங்குகின்றன. மாநில அரசின் நிதி பங்களிப்பு என்பது மிக மிக குறைவு தான். எனவே, யு.ஜி.சி., மற்றும் கவர்னர் அனுமதியின்றி துணைவேந்தர்களை நியமனம் செய்ய, சட்டத்தில் வழியே இல்லை. இதெல்லாம் நன்கு தெரிந்தே, சட்டத்துக்கு விரோதமாக தி.மு.க., செயல்படுகிறது. இதை சுட்டிக்காட்டுவோரை, ஜாதி வாயிலாக விமர்சிக்கின்றனர். இதை, தி.மு.க., உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venugopal s
மே 23, 2025 21:19

இங்கு ஒரு கும்பல் கடந்த இரண்டு நாட்களாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளை டாஸ்மாக் தீர்ப்புக்கு பிறகு கண்டபடி பேசிக் கொண்டு இருப்பது இவருக்குத் தெரியாதா அல்லது தெரியாதது போல் நடிக்கிறாரா?


Oviya Vijay
மே 23, 2025 17:33

தமிழகத்தின் கேவலமான அரசியல்வியாதி இந்த கிருஷ்ணசாமி...


lana
மே 23, 2025 15:51

குஜராத் இல அந்த சட்டம் ஜனாதிபதி ஆல் ஏற்றுக் கொள்ள பட்டு நடை முறை படுத்த பட்டது. இந்திய அரசமைப்பின் படி concurrent list இல் இருக்கும் ஒரு விஷயத்தில் சட்டம் இயற்றினா அது மத்திய சட்டம் ஐ எதேனும் ஒரு சரத்தில் மீறினால் இல்லாவிட்டாலும் ஜனாதிபதி இடம் அனுமதி பெற வேண்டும். சமச்சீர் boys க்கு இது தெரிய வாய்ப்பில்லை


Oviya Vijay
மே 23, 2025 13:16

இவர்தான் நேர்மையான அரசியல்வாதி...டாக்டர் டாக்டர்தான்...


நல்லவன்
மே 23, 2025 11:40

பாவம்... எடப்பாடியின் துதிப்பாடி ....


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 23, 2025 11:28

நமக்கு எதுக்கு சார் இதெல்லாம் எப்பவுமே ரெடிமேட் ஸ்டிக்கர் ரெடியா இருக்கு. பணம் யாராவது செலவு செய்து ஏதாவது செலவு செய்தால் நாம் ஸ்டிக்கர் ஒட்டி கொள்ள வேண்டும் அது தான் நல்ல பிள்ளைக்கு அழகு. இப்படி தான் நேற்று கூட ஏதோ புதுப்பிக்கப்பட்ட இரயில் நிலையம் திறப்பு விழா அங்கே தமிழக முதல்வரை புகழ்ந்து பேசி ஸ்டிக்கர் ஒட்டி கொள்ள வில்லையா.


ஜெய்ஹிந்த்புரம்
மே 23, 2025 07:51

செல்லாக் காசு, உலகில் உண்டோ...


pmsamy
மே 23, 2025 07:11

கிருஷ்ணசாமி ஒரு....


Oviya Vijay
மே 23, 2025 06:37

இவர் எல்லாம் ஒரு செல்லாக்காசு. தமிழ்நாட்டுக்கு கிடைத்த சாபக்கேடு இந்த ஆள். இவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட வேண்டிய அவசியமே இல்ல...


மூர்க்கன்
மே 23, 2025 10:40

நமக்கு சாதகமா பேசினால் யாவரும் நல்லவரே?? இல்லையா?? இங்கே இவ்வளவே பேசும் கிஸ்சன்னசாமி அப்படியே இதனை குசராத்துல பேசுவாரா?? அங்கே மட்டும் எப்படி?? அதிகாரம் மாநில அரசுக்கு??


புதிய வீடியோ