உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் டாஸ்மாக் கடைகளில் இருந்தால் தவறா?

அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் டாஸ்மாக் கடைகளில் இருந்தால் தவறா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை,: 'தமிழக அரசு அலுவலகங்களில் முதல்வர் ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளதை போல, அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகளிலும் முதல்வர் படங்களை வைப்பதால் அரசுக்கும், முதல்வருக்கும் பெருமையே கிடைக்கும்; பா.ஜ.,வினரை கைது செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும்' என்று பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ரெய்டு நடத்தினர். இதில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக, அமலாக்கத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த ஊழலை கண்டித்து போராட்டத்திற்கு புறப்பட்ட பா.ஜ., தலைவர்களை, தமிழக போலீசார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.தற்போது தமிழகத்தின் பல பகுதிகளிலும், முதல்வர் ஸ்டாலின் போட்டோக்களை டாஸ்மாக் கடைகளில் பா.ஜ.,வினர் வைக்கின்றனர். தன் போட்டோவை, பா.ஜ.,வினர் தங்களுடைய சொந்த செலவில் வைக்கின்றனர். அதை பெருமையாக நினைக்காமல், போலீசாரை வைத்து கைது செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகளிலும் முதல்வர் போட்டோ வைப்பதால் அரசுக்கும், முதல்வருக்கும் பெருமை தான். இதை புரிந்து கொள்ளாத முதல்வர் போட்டோக்களை வைக்கும் பா.ஜ.,வினரை, அதுவும் பெண்களை போலீசார் கைது செய்து, இரவு வரை வைத்திருக்கின்றனர். இதை, இனியாவது முதல்வர் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Azar Mufeen
மார் 21, 2025 22:40

ஏன் இந்த அறிவு அ. தி. மு. க கூட்டணியில் இருந்த போது பழனிசாமி புகைப்படம் வைக்க சொல்லி இருக்கலாமே,, இங்கே ஸ்டாலின் படம் மாட்டுவோம், குஜராத் பணக்காரர்கள் பர்மிட் வாங்கி குடிக்கிற இடத்தில் அந்த மாநில முதல்வர் படத்தையும் மாட்ட வேண்டியதுதானே,, உங்க ரெண்டு பேருக்கும் ஆட்சி கவிழாமல் இருக்க இந்த மாதிரி குரளி வித்தை காமிக்கணும் போங்கடா கூட்டு களவாணி கட்சிகளா


venugopal s
மார் 21, 2025 22:36

அவர் நாட்டுக்கே பிரதமர், என் வீட்டு கழிப்பறையும் நாட்டுக்குள் தானே இருக்கிறது நான் என் வீட்டு கழிப்பறையில் பிரதமர் படத்தை மாட்டி வைக்கலாமா?


venugopal s
மார் 21, 2025 20:58

அப்படிப் பார்த்தால் நாட்டுக்கே பிரதமர் என் வீட்டுக்கும் பிரதமர் தானே? நான் என் வீட்டு கழிப்பறையில் அவர் படம் வைக்கலாமா?


ப.சாமி
மார் 21, 2025 18:01

அரசு அலுவலகங்கள்,நியாய விலை கடை போன்ற அரசு சம்பந்தப்பட்ட இடங்களில் முன்னாள் இந்நாள் முதல்வர் படங்கள் வைப்பது போல் அரசுத்துறை டாஸ்மாக் கடையிலும் முதல்வர் படம் வைக்க அரசு முன்வரவேண்டும்...


R.P.Anand
மார் 21, 2025 10:19

படம் வைக்கி ரது தபில்லிங்க


ஆரூர் ரங்
மார் 21, 2025 07:11

மணக்கும் கூவத்தின் கரைகளில் கலைஞர் சிலைகளை வைத்து அமைச்சர் அலுவலகங்களை அமைக்க வேண்டும்.


अप्पावी
மார் 21, 2025 07:00

தமிழ்நாட்டில் உள்ள எல்லா பா.ஜ அலுவககங்களிலும் ஸ்டாலின் படம் வைக்கலாம் .உங்களுக்கு நல்லது செய்கிறார் ஹை.


பேசும் தமிழன்
மார் 21, 2025 11:29

அனைத்து அரசு அலுவலங்களில் முதல்வர் படம் இருக்கும் போது.. டாஸ்மாக் மதுக் கடைகள் கூட அரசு சார்ந்த இடம் தான்.. அதனால் அங்கேயும் படம் இருப்பது தான் சரியாக இருக்கும்.. இவர்கள் அதை மட்டும் எதிர்ப்பது ஏன்? குடிக்க வைப்பது அப்பா தான் என்று மக்கள் நினைத்து விடுவார்கள் என்பதாலா ???


Padmasridharan
மார் 21, 2025 01:51

நெத்தியடி.. ஆனால் வாங்கி குடிக்கும் குடிமகன்கள் "உண்ணா"விரத போராட்டம் மாதிரி மது "குடிக்காமல்" இருந்து போராட்டம் பண்ணலாமே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை