உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய் மவுசு ஏறுகிறதா: உளவு துறை ஆய்வு

விஜய் மவுசு ஏறுகிறதா: உளவு துறை ஆய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பூத் ஏஜன்டுகள் கருத்தரங்கம் நடத்திய நிலையில், அவரது கட்சி செல்வாக்கு அதிகரிக்கிறதா என உளவுத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.த.வெ.க., என்ற கட்சியை துவக்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலுக்கு, கட்சியை தயார்படுத்தி வருகிறார்.

நான்கு மண்டலம்

கட்சி கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில், 120 மாவட்டச்செயலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுதும் உள்ள, 60,000 ஓட்டுச்சாவடிகளுக்கு, பூத் ஏஜன்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஓட்டுச்சாவடிகளில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து, பயிற்சி அளிக்க கட்சி தலைமை முடிவு செய்தது. ஒரே இடத்தில் வைத்து பயிற்சி அளிக்க முடியாது என்பதால், நான்கு மண்டலமாக பிரித்து, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி முதல் பயிற்சி கருத்தரங்கம், கோவையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில் விஜய் பங்கேற்று, ஆலோசனைகள் வழங்கி உள்ளார். கோவை சென்ற விஜயை பார்ப்பதற்கு, மக்கள் அதிக அளவில் கூடினர். அதேபோல், கூட்டம் நடந்த இடத்திற்கு சென்ற விஜயை, ஏராளமானோர் பின் தொடர்ந்தனர். கூட்ட அரங்கிற்குள் நுழைய, தொண்டர்கள் முண்டி அடித்தனர். இதுவரை கட்சி நிகழ்ச்சிகளை, கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும், கட்சி அலுவலகத்திலும் விஜய் நடத்தி வந்தார். தற்போது, வெளியிடங்களுக்கு செல்ல, ஆர்வம் காட்ட துவங்கியுள்ளார். கோவையை தொடர்ந்து மதுரை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் பூத் ஏஜன்டுகள் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது.

ரகசிய உத்தரவு

இந்நிலையில், இரண்டு நாட்கள் கோவை கருத்தரங்கம் வாயிலாக, அங்கு விஜய் செல்வாக்கு அதிகரித்துள்ளதா என, உளவுத்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். மேலும், விஜய்க்கு போட்டியாக, துணை முதல்வர் உதயநிதி, அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.விஜயை பார்க்க அக்கட்சி தொண்டர்கள், பொதுமக்கள், பெண்கள் செல்வதை தவிர்க்க, கோவையில் ஜல்லிக்கட்டு போட்டியும் நடத்தப்பட்டது. இதையும் மீறி, விஜயை பார்க்க திரண்டவர்களால், அது ஓட்டாக மாற வாய்ப்புள்ளதா என்பது குறித்து, விரிவாக அறிக்கை அளிக்கும்படி, உளவுத்துறைக்கு ஆளுங்கட்சி சார்பில், ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

naranam
ஏப் 28, 2025 18:27

ஒரு மவுசும் ஏறவில்லை. கூட்டத்தைப் பார்த்து ஏமாந்த கதை எத்தனையோ இருக்கு. திமுகவின் மவுசு வேகமாகக் குறைந்து வருகிறது என்பது உண்மை தான். அதிமுக எப்படிக் கூட்டணி அமைக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே அதன் வெற்றி தோல்வி அமையும். தவேக சில தொகுதிகளில் வெல்லும் என்று எதிர் பார்க்கலாம். அவ்வளவு தான்.


INDIAN Kumar
ஏப் 28, 2025 17:00

முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் , உதை யை விஜயால் தான் வெல்ல முடியும்


INDIAN Kumar
ஏப் 28, 2025 16:58

ஊழல் கட்சிகள் மறையட்டும் புதியவர்கள் வெற்றி பெறட்டும்


எஸ் எஸ்
ஏப் 28, 2025 11:02

ஒரு புண்ணாக்கும் ஏறாது. விஜய் தேர்தலுக்கு பின் உணர்வார்


sasidharan
ஏப் 28, 2025 10:26

எப்படியும் அடுத்த முதல்வர் EPS தான், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் . தாமரை துணையுடன் இரட்டை இலை துளிர்க்கும். இது உறுதி.


Oviya Vijay
ஏப் 28, 2025 08:55

இந்த ரகசிய சர்வேயில் பிஜேபி, நாதக மற்றும் அதிமுகவின் செல்வாக்கு தமிழக மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக அஸ்தமனமாகிக் கொண்டு வருகிறது என்பதையும் உளவுத்துறை கண்டறியும்...


angbu ganesh
ஏப் 28, 2025 10:05

ஆமா இவளா இவனான்னு தெரியல இது எதுன்னு புரியல


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 28, 2025 10:39

கூடவே..... திமுகவின் வளர்ச்சி அபரிமிதமானதாக உள்ளதால் தனித்து போட்டியிட்டால் 200க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என்பதையும் உளவு அறிக்கை மூலம் தெரிந்து கொண்டார் முதல்வர் ஆதலால் கூட்டணி கட்சிகளை கழட்டி விடுமாறு அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.....!!!


எஸ் எஸ்
ஏப் 28, 2025 11:01

கனவு காணும் உரிமை எல்லோருக்கும் உண்டு


vivek
ஏப் 28, 2025 11:26

பாவம் ஆர்டிஸ்ட்...அங்கே 2 மந்திரிக்கு ஆப்பு வச்சா நியூஸ் ல. ஆளையே காணோம்...இங்க வந்து ஒப்பரி வைக்குது...


Oviya Ajith
ஏப் 28, 2025 11:41

தாவெக வுக்கு ஒட்டு ஐந்து சதவீதம் கூட தாண்டாது என்பதை 2026 தேர்தல் நிரூபிக்கும். இவரை விட பல மடங்கு ஆளுமை மிக்க விஜய்காந்த் கூட எட்டு சதவீதம் தான் பெற முடிந்தது. லயோலா பேக் அப்பில் சினிமாவைப் போல் பொய்யான வெற்றி பிம்பத்தை அரசியலில் காண்பிக்க முடியாது.


sridhar
ஏப் 28, 2025 21:35

எதற்கு கஷ்டப்பட்டு கண்டறிய வேண்டும். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான உங்களிடம் கேட்டால் போதுமே .


ராமகிருஷ்ணன்
ஏப் 28, 2025 06:39

TVK ஒரு ரிலீஸ் ஆகாத படம் போன்றது. ரிலீசுக்கு முன்பு பற்பல பில்டப்கள் தரப்படும். அப்பத்தான் நல்ல விலை போகும். படம் வெளியான பிறகு தான் மக்களின் ஆதரவுப் பொருத்து வெற்றி தோல்வி கணிக்க முடியும். இப்போ பில்டப் நேரம். பொருத்து தான் போவனும், தமிழர்களின் தலையெழுத்து


Balasubramanian
ஏப் 28, 2025 06:16

அரசியல் பெரும் பெருச்சாளிகள் முன் இந்த மவுசு மறைந்து போகும் மய்யம் மாதிரி


PATTALI
ஏப் 28, 2025 14:47

திரு. பாலசுப்ரமணியன் அவர்களே, மாற்றத்தை கொண்டுவரவேண்டிய நீங்களே வாக்காளர் இப்படி பேசலாமா. முதலில் நீங்கள் மாறுங்கள். உங்களை போல் மற்றவர்களும் வருவார்கள்.


Ganesan M
ஏப் 28, 2025 06:09

தமிழ்நாட்டில் திமுக அதிமுக ஆட்சி ஆண்டது போதும் மாற்றம் தேவை


BHARATH
ஏப் 28, 2025 18:51

அதுக்கு நல்லவன் வரணும் இந்த ஏமாத்துக்காரன் ஜோசப் வரக்கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை