உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதல்வரின் பார்வைக்கு... இருதய அறுவை சிகிச்சைக்கு டாக்டர் இல்லை; ஏழை நோயாளிகள் பலியாகும் பரிதாபம்

முதல்வரின் பார்வைக்கு... இருதய அறுவை சிகிச்சைக்கு டாக்டர் இல்லை; ஏழை நோயாளிகள் பலியாகும் பரிதாபம்

கோவை : கோவை அரசு மருத்துவமனை இருதயவியல் அறுவை சிகிச்சை பிரிவில் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே இருப்பதால், அவசர சிகிச்சை பெறமுடியாமல், ஏழைகள் உயிரிழக்கின்றனர்; இதற்கு 'முதல்வர் முற்றுப்புள்ளி வைப்பாரா' என்ற கேள்வி எழுந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் தினமும், 7,000 முதல், 9,000 பேர் உள், புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு சிகிச்சைகளுக்கு, நோயாளிகள் இங்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். இங்குள்ள இதயவியல் அறுவை சிகிச்சை பிரிவுக்கு, அனுமதிக்கப்பட்ட நான்கு டாக்டர் பணியிடங்களில், தற்போது ஒரே ஒரு டாக்டர் மட்டுமே உள்ளார். இதனால், இதய அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை. முக்கிய அறுவை சிகிச்சையின்போது, நான்கு டாக்டர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். டாக்டர்கள் இல்லாததால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளிகளை சென்னை, மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கின்றனர். நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்கள், உயிரிழக்கின்றனர். சற்று வசதி உள்ளவர்கள், தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து உயிரை காப்பாற்றிக்கொள்கின்றனர். ஆனால், ஏழை மக்களுக்கு அரசு மருத்துவமனையை விட்டால் வேறு வழியில்லை. அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை குறித்து, சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால், அரசு மருத்துவமனையில் ஏழைகளுக்கு அனைத்து தரமான சிகிச்சையும் அளிப்பதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், முதல்வரும் மாறி, மாறி கூறி வருகின்றனர். இங்கோ, ஏழை மக்கள் உயிரிழப்பதை கண்கூடாக காண முடிகிறது. மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சருக்கு இது நன்கு தெரிந்தும், கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்பது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கேட்கும் கேள்வி. முதல்வர் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்வாரா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

P.M.E.Raj
அக் 09, 2025 13:26

பயிற்சி மருத்துவர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம்கூட தரவில்லை. இதுதான் திராவிட மாடல் அரசு


Barakat Ali
அக் 09, 2025 13:16

முன்னேறிய மாநிலம் ........ ஆனால் இங்கேயும் பீமாரு மாநிலங்களில் நடக்கும் அவலங்கள் .....


S SRINIVASAN
அக் 09, 2025 12:57

Even in govt hospital there is a politics, nasamapoga intha govt, TN people have to change the govt


Rajasekar Jayaraman
அக் 09, 2025 12:24

ஏன் தெரிந்து சிறுநீரகம் போல் இதயத்தை திருடவா.


ஆரூர் ரங்
அக் 09, 2025 11:18

இந்த அழகில் இல்லம் தேடி மருத்துவம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ன்னு உருட்டல் பிரச்சாரம் வேறு.


Manyan
அக் 09, 2025 11:00

தினமலர் செய்திகளை முதல்வர் பார்க்கிறார் என உணர்வதால் இது போன்று வேண்டுகோள்களை தங்கள் செய்தியின் வாயிலாக தினமலர் வெளியிடுகிறது. தமிழக அரசு வாயிலாக இதற்கான தீர்வு நிச்சயம் கிடைக்கும் என நம்புவோம்.


Vasan
அக் 09, 2025 10:59

"நோயாளி" என்று சொல்லாதீர்கள், "மருத்துவ பயன் கிடைக்காத பயனாளி" என்று சொல்லுங்கள்.


Ramesh Sargam
அக் 09, 2025 10:01

மாண்புமிகு தமிழக முதல்வரே, தமிழக மக்களால் அப்பா என்று அழைக்கப்படுபவரே, காசாவில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனம் உருகி கண்ணீர் விடுபவரே, இங்கே உங்கள் ஆட்சியில் இதுபோன்று ஒரு அவலநிலை. இந்த அவலநிலையை பார்த்தபிறகும் உங்கள் கண்ணில் கண்ணீர் வரவில்லையென்றால் நீங்கள் அந்த பதவிக்கு பொருத்தமா என்று நீங்களே கூறுங்கள். முதலில் தமிழக அவலங்களை போக்க முயற்சியுங்கள். பிறகு காசா மக்களுக்காக நாம் எல்லோரும் சேர்ந்து கண்ணீர் விடுவோம், உதவி செய்வோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை