உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு

ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை, தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1997ல் வெளிநாட்டில் இருந்து அனுமதி இன்றி நன்கொடை பெற்றதாக, மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஜவாஹிருல்லா மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.இவருக்கு உடந்தையாக இருந்ததாக ஹைதர் அலி என்பவருக்கும், ஓராண்டு சிறை தண்டனையும், சையத் நிசார் அஹமத், ஜி.எம்.ஷேக் மற்றும் முகமத் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜவாஹிருல்லா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார்.இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், எதிர் மனுதாரரான சி.பி.ஐ.,க்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

S Srinivasan
ஏப் 29, 2025 22:23

இந்த மாதிரி தீர்ப்பு சொல்லி சமுதாயம் கெட்டு போச்சி போடா நீங்களும் உச்ச நீதி மன்றமும்


மோகனசுந்தரம் லண்டன்
ஏப் 29, 2025 15:36

இதை விட கேவலம் வேறு ஒன்றும் இல்லை.


ganesh
ஏப் 29, 2025 11:09

நீதி கிடைக்குமா கிடைக்காதா ?


ஆரூர் ரங்
ஏப் 29, 2025 09:45

தண்டனை பெற்ற பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு உதவ சட்டத்தை மீறி அன்னிய நாடுகளில் நிதி வசூல் செய்துள்ளாராம். ஆக எதிர்கால பயங்கரவாதிகளுக்கும் ஊக்கமளிக்கும் வேலையை மறைமுகமாக செய்துள்ளார். எல்லாம் திமுக கொடுக்கும் தைரியம்.


ஆரூர் ரங்
ஏப் 29, 2025 09:42

தண்டனை பெற்றவுடன் ரம்ஜானுக்கு பிறகு சரணடைய ஒப்புக் கொண்டார். பல ரம்ஜான் கழிந்த பின்பும் சரணடையவில்லை. குற்றவாளிக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பது நியாயமற்றது.


Rajasekar Jayaraman
ஏப் 29, 2025 09:11

உச்சநீதி மன்ற வேலை அரசியல்வாதிகள் தண்டனையை நிறுத்தி வைப்பது மட்டும்தானோ.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 29, 2025 21:50

உச்ச நீதிமன்றத்தின் வேலை அரசியல்வாதிகளின் தண்டனைய நிறுத்தி வைப்பது மட்டுமல்ல, மேற்கொண்டு விசாரணையை நிறுத்தி வைப்பது, பிரதிவாதிகளிடம் கருத்து கேட்பது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாட்சிகளை கலைக்க ஏதுவாக அவகாசம் அளித்து வழக்கை தள்ளி வைப்பது, முக்கியமாக ஜாமீன் கொடுப்பது, கொடுத்து விட்டு நாங்கள் தவறு செய்து விட்டோம் என்று சப்பைக்கட்டுவது....இதுவெல்லாம் இப்பொழுது நீதிமன்றங்களின் முக்கிய பணியாகிவிட்டது.....!!!


theruvasagan
ஏப் 29, 2025 08:33

நமக்கு எதிரிகள் வெளியே மட்டும் இல்லை. உள்ளுக்குள்ளேயே அதுவும் அதிகாரபீடங்களில். உடனிருந்தே கொல்லும் கேன்சர்.


மணி
ஏப் 29, 2025 06:07

இதே தீர்ப்பு. ஒரு. சாமானியனுக்கு கிடைக்குமா


Nandakumar Naidu.
ஏப் 29, 2025 03:15

உச்ச நீதிமன்றமா? இதேச,சமூக,மற்றும் ஹிந்து விரோதிகளின் தீர்ப்பு விஷயத்தில் உச்ச நீதி மன்றத்தின் செயல்பாடுகள் மிகவும் அபத்தானவைகளாக உள்ளன.


ராமகிருஷ்ணன்
ஏப் 29, 2025 03:06

ஏன் பாடருக்கு போக போகிறார்ரா.


சமீபத்திய செய்தி