உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 5 லட்சத்துக்கும் அதிகமானோர் அடமானம் வைத்த நகைகள் மீட்பு

5 லட்சத்துக்கும் அதிகமானோர் அடமானம் வைத்த நகைகள் மீட்பு

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கூட்டுறவு வங்கிகளில், கடந்த மூன்று மாதங்களில், நகை அடமானம் வைத்து கடன் வாங்கிய, 5 லட்சத்துக்கும் அதிகமானோர், தங்களின் நகைகளை மீட்டுள்ளனர்.கூட்டுறவுத் துறை கீழ் செயல்படும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், நகைக் கடன் பிரிவில், தங்க நகைகள் அடமானமாக பெறப்பட்டு, கடன் வழங்கப்படு கிறது.அவற்றில், வட்டி குறைவாக இருப்பதுடன், அடகு நிறுவனங்கள் மற்றும் பிற வங்கிகளைப் போல், குறித்த காலத்தில், வட்டி, அசல் செலுத்தா விட்டால், உடனே நகைகளை ஏலம் விடுவதில்லை. இதனால், பலரும் கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் வாங்குகின்றனர்.சர்வதேச நிலவரங்களால், கடந்த மூன்று மாதங்களாக, தமிழகத்தில் தங்கம் விலை, தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. சவரன் தங்கம் விலை, 67,000 ரூபாயாக உள்ளது.மூன்று மாதங்களில் மட்டும், சவரனுக்கு 10,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், கூட்டுறவு வங்கிகளில், நகைக்கடன் வாங்கியவர்கள், வட்டி மற்றும் அசல் செலுத்தி, நகைகளை மீட்டு வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 5 லட்சத்துக்கும் அதிகமானோர், அடகு வைத்த நகைகளை மீட்டுள்ளனர்.அவற்றின் மதிப்பு சராசரியாக, 6,000 கோடி ரூபாயாக உள்ளது. தற்போது, கூட்டுறவு வங்கிகளில், ஆறு மாதங்கள் வரையிலான, நகைக் கடனுக்கு கிராம் தங்கத்தின் மதிப்பில், 75 சதவீதம் வரை, ஓராண்டிற்கான கடனுக்கு கிராமுக்கு, 6,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V Rajendran
ஏப் 06, 2025 05:50

பிஜேபிக்கும் தங்கத்துக்கும் சம்பந்தம் இல்லை. தங்கம் சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி விலை கூடவோ குறையவோ செய்யும்.


Geetha S
ஏப் 05, 2025 22:05

பிஜேபி வோட் கேட்க வருவாங்களா அப்பொ இருக்கு


ஆரூர் ரங்
ஏப் 05, 2025 09:26

உதயநிதியின் பேச்சைக் கேட்டு அடமானம் வைத்த பலர் சாபம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை