உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அறுபடை வீடுகளுக்கு காவடி யாத்திரை: தயாராகிறது ஹிந்து முன்னணி

அறுபடை வீடுகளுக்கு காவடி யாத்திரை: தயாராகிறது ஹிந்து முன்னணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முருக பக்தர்கள் மாநாட் டின் வெற்றியை தொடர்ந்து, முருக பெருமானின் அறுபடை வீடுகளுக்கு, காவடி யாத்திரை நடத்த, ஹிந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற ஹிந்து அமைப்புகள் தயாராகி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில், முதல் வீடான, மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில், சில அமைப்புகள் ஆடு, கோழி பலியிடப் போவதாக அறிவித்தன. இது பெரும் சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து, கடந்த பிப்., 4ல், மதுரையில் ஹிந்து முன்னணி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xf0a92n1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரசின் தடையை மீறி, உயர் நீதிமன்ற அனுமதியுடன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தன்னெழுச்சியாக திரண்ட கூட்டம், ஹிந்து அமைப்புகளை உற்சாகப்படுத்தின. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 22ல், மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை, ஹிந்து முன்னணி நடத்தியது. வி.எச்.பி., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளும் பா.ஜ.,வும் தீவிர பணிகளில் ஈடுபட்டதால், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டனர். இந்த மாநாட்டால் எழுந்த, ஹிந்து எழுச்சியை தக்க வைக்கவும், முருகனை மையமாக வைத்து, ஹிந்துக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தவும், புகழ் பெற்ற முருகன் கோவில்களுக்கு, குறிப்பாக அறுபடை வீடுகளுக்கு, காவடி யாத்திரை நடத்த, ஹிந்து முன்னணி, வி.எச்.பி., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. முருகன் கோவில்களுக்கு, காவடி எடுத்து செல்வது, தமிழகத்தில் காலங்காலமாக நடந்து வருகிறது. தைப்பூசம் நாளில், அறுபடை வீடுகள் மட்டுமல்லாது, அனைத்து முருகன் கோவில்களுக்கும், லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று வழிபட்டு வருகின்றனர். வட மாநிலங்களில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், பல லட்சக்கணக்கான சிவ பக்தர்கள், ஹரித்துவார், கேதார்நாத், வாரணாசி, பிரயாகை போன்ற புனித தலங்களுக்கு, 'கன்வர்' யாத்திரை எனப்படும் காவடி யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். வாரணாசி விஸ்வநாதர் கோவில் சீரமைக்கப்பட்ட பின், ஒவ்வொரு ஆண்டும் காவடி யாத்திரை, உ.பி.,யில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், காவடி யாத்திரைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். காவடி யாத்திரையை, அரசியல் ஆயுதமாக பா.ஜ., பயன்படுத்தி வருவதாக, அம்மாநிலத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதே போன்று, தமிழகத்தில் முருகன் காவடி யாத்திரையை, பெரும் விழாவாக மாற்ற, ஹிந்து அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன. இனி வரும் ஆண்டுகளில், தைப்பூசம் அல்லது பங்குனி உத்திரம் நாளில், தமிழகம் முழுதும் காவடி யாத்திரையை நடத்த, தயாராகி வருவதாக, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 26, 2025 00:04

அறுபது படை வீடுகளுக்கு தலைகீழா நடந்து காவடி எடுத்தாலும் பாஜாக்காக்கு மொட்டை தான்


Ramesh Sargam
ஜூலை 25, 2025 04:01

அடுத்து சூர சம்ஹாரம். ஆம் dmk எனும் சூரர்கள் சம்ஹாரம்.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 25, 2025 20:09

இது முருகனுக்கு தெரியுமோ? ஹிந்தியிலே அஜென்டாவை அனுப்பினா தமிழ்கடவுளுக்கு தெரியுமா


ramesh
ஜூலை 24, 2025 17:33

அனைத்தும் அறிந்தவன் முருக கடவுள்


ramesh
ஜூலை 24, 2025 17:30

கடைசி வரை இவர்கள் பொருளாதார வளர்ச்சி பற்றி பேச மாட்டார்கள் .. இதனால் தான் அயோத்தியில் பிஜேபி படு தோல்வி அடைய செய்தார் . இப்போது தமிழ் கடவுளை ஏமாற்ற பார்க்கிறார்கள் . அவருக்கு தெரியும் இவர்களின் அரசியல் முருக பக்தி . அவருடைய வேலாலே இந்த போலி இந்து அரசியல் வாதிகளை ஓட விடுவார்.


vivek
ஜூலை 24, 2025 20:43

திருட்டு திமுகவை சொல்றீங்களா ரமேஷு


Oviya Vijay
ஜூலை 24, 2025 15:14

முருகன் மாநாட்டிற்கு வந்திருந்த மக்களை ஏதோ செய்கிறார்கள்... என்ன தான் செய்கிறார்கள் என்று பார்க்கலாம் என்ற எண்ணம் தான் அவர்களிடத்தில் மேலோங்கியிருந்திருக்கும்... ஆனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களும் மேடையில் வீற்றிருந்த சிலரும் தான் இந்த மாநாட்டை அரசியலுக்கு ஆதாயமாக்க முற்பட்டனர்... அவர்களது உள்மனமே அதை ஒப்புக் கொள்ளும்... 2026 தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் முருகன் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் அடையப்போகும் அதிர்ச்சி அளப்பரியது... இத்தனை செய்துமா நாம் தேர்தலில் தோற்றோம் என எண்ணி எண்ணியே வேதனை படப் போகிறார்கள்... எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த மக்கள் 2026 தேர்தலில் அவரவர்கள் விருப்பப்படி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டளிப்பர்... ஆன்மீக மாநாட்டின் மூலம் ஆதாயம் தேட முற்பட்ட சங்கிகளுக்கு மாத்திரமே ஏமாற்றம்... அது ஒரு சிறு கூட்டம்... அவ்வளவே...


vivek
ஜூலை 24, 2025 18:35

ஓவியரே .....படித்தோம்..........சிரித்தோம்.....


Amsi Ramesh
ஜூலை 24, 2025 19:04

கடவுள் மறுப்பாளர்கள் முருகன் மாநாடு நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது இதற்கு பதில் இருக்கிறதா? இந்து ஒற்றுமை துவங்கி விட்டதின் அறிகுறியே.... திமுக பழனிக்கு பால்காவடி எடுத்தாலும் எடுக்கும் பொறுத்திருந்து பார்க்கவும்


vivek
ஜூலை 24, 2025 20:44

ஓகே ஓவியரே...உங்கள் இதயம் பத்திரம்...உங்க டயலாக் தான்...


Oviya Vijay
ஜூலை 24, 2025 15:10

ஆக மொத்தத்துல முருகன் மாநாடு தான் நீங்க நம்பிக்கிட்டு இருக்கிறது... அப்படித் தானே... 2026 தேர்தல்ல எல்லா தொகுதியிலயும் புட்டுக்கிருச்சு ஏன் முருகா அப்படின்னு நீங்க அந்த முருகப் பெருமான்கிட்ட முறையிட்டா அவர் என்ன பதில் சொல்லுவார் தெரியுமா... பக்தி மாநாடு நடத்துவீங்கன்னு பார்த்தா அரசியல் மாநாடா டா நடத்துறீங்க... அதனால இதுவும் என்னுடைய திருவிளையாடல்களில் ஒன்று... ஓடிப் போயிருங்க அப்படின்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகி போயிக்கிட்டே இருப்பாரு...


பாரத புதல்வன்
ஜூலை 24, 2025 11:57

நிச்சியம் முருக பெருமான் தமிழக மக்களை காப்பார்....ஆன்மீக ஆட்சி அமையும், போலி திருட்டு மாடல் ஒழியும்.


venugopal s
ஜூலை 24, 2025 10:54

அடுத்த நாடகம் தயாராகி விட்டது!


VENKATASUBRAMANIAN
ஜூலை 24, 2025 09:50

இந்துக்கள் காசுக்கு ஓட்டு போடாமல் இருந்தால் போதும்


பிரேம்ஜி
ஜூலை 24, 2025 08:31

எங்கே என்ன காவடி எடுத்தாலும் தமிழ் இந்துக்கள் ஓட்டு திமுக கூட்டணிக்குத்தான்! முதலில் கூட்டணியை பலப்படுத்துங்கள்! பிறகு முருகனுக்கும் சட்டசபைக்கும் காவடி எடுக்கலாம்!


சமீபத்திய செய்தி