தமிழகத்தில், 3, 5, 8ம் வகுப்புகளுக்கு நடத்தப்பட்ட கற்றல் அடைவு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், கன்னியாகுமரி முதலிடத்தையும், கோவை கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.தமிழகத்தில், அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், 3, 5, 8ம் வகுப்புகளில், கற்றல் திறன் முன்னேற்றம் குறித்து தெரிந்து கொள்ள, பிப்., 4, 5, 6ல், கற்றல் அடைவு தேர்வு நடத்தப்பட்டது. ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வாயிலாக, தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களிலும், 8ம் வகுப்புக்கு அறிவியல், சமூக அறிவியல் பாடங்களிலும் கூடுதலாக மதிப்பீடு செய்யப்பட்டது. மூன்றாம் வகுப்பு மதிப்பீடு, 36,561 பள்ளிகளில், 3 லட்சத்து, 8,695 மாணவ - மாணவியரிடம் நடத்தப்பட்டது. 5ம் வகுப்பு மதிப்பீடு தேர்வு, 36,659 பள்ளிகளில், 3 லட்சத்து, 43,261 மாணவ - மாணவியரிடம் நடத்தப்பட்டது. 8ம் வகுப்பில், 16,218 பள்ளிகளில் இருந்து, 3 லட்சத்து 28,356 மாணவ - மாணவியரிடம் நடத்தப்பட்டது.இதற்கான தேர்வு முடிவுகள், 'எமிஸ்' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. slas.tnschools.gov.in என்ற இணையதளத்தில், தேர்வின் முழு விபரங்களும், மதிப்பீடு விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய மாணவர் மதிப்பீடு முதல், பள்ளி, ஒன்றியம், மாவட்டம், மாநிலம் வாரியாக அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.அதில், கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தையும், கோவை மாவட்டம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.மாவட்டங்கள் வாரியாக தேர்ச்சி விபரம்
மாவட்டம் - தேர்ச்சி சதவீதம்கன்னியாகுமரி - 66.55கடலுார் - 63.99மதுரை - 63.72தென்காசி - 63.05ராமநாதபுரம் - 61.31திருச்சிராப்பள்ளி - 61.22தேனி - 60.96திண்டுக்கல் - 60.95திருவண்ணாமலை - 60.83சிவகங்கை - 60.7விழுப்புரம் - 60.39மயிலாடுதுறை - 60.25அரியலுார் - 59.97கள்ளக்குறிச்சி - 59.85புதுக்கோட்டை - 59.34ராணிப்பேட்டை - 58.91கிருஷ்ணகிரி - 58.51விருதுநகர் - 58.5தஞ்சாவூர் - 58.41பெரம்பலுார் - 57.65வேலுார் - 57.18தர்மபுரி - 56.06காஞ்சிபுரம் - 55.6நாகப்பட்டினம் - 55.35திருவள்ளூர் - 54.49திருப்பத்துார் - 54.23திருநெல்வேலி - 53.39துாத்துக்குடி - 53.3திருப்பூர் - 53கரூர் - 52.67திருவாரூர் - 52.19நீலகிரி - 52.07நாமக்கல் - 51.95சேலம் - 51.13செங்கல்பட்டு - 49.9ஈரோடு - 49.62சென்னை - 48.71கோவை - 48.24 - நமது நிருபர் -