உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 12 ரயில் திட்டங்களுக்கு நிலம் எடுக்க நடவடிக்கை ஐந்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் ஒப்புதல்

12 ரயில் திட்டங்களுக்கு நிலம் எடுக்க நடவடிக்கை ஐந்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில், 12 ரயில் திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ரயில்வே துறை சார்பில், பல்வேறு வழித்தடங்களில் புதிதாக அகலப்பாதை அமைப்பது உட்பட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னை காரணமாக, திட்டப் பணிகள் தாமதமாகின்றன. இதற்கு தீர்வு காண்பதற்காக, போக்குவரத்து, வருவாய், ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் 13 மாவட்ட கலெக்டர்கள், தெற்கு ரயில்வே அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடந்தது. இது குறித்து வருவாய் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த ஆய்வு செய்யப்பட்டது. நிலம் எடுப்பதில் எந்த பகுதியில், என்ன பிரச்னை உள்ளது என ஆய்வு செய்யப்பட்டு, அதற்கு தீர்வு காண, உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கூட்டத்தில் பங் கேற்ற, 13 மாவட்ட கலெக்டர்களில், 11 பேர், நிலம் எடுப்பு பணிகளை முடிக்க உடனடி ஒப்புதல் அளித்தனர். இப்பணிகளை அதிகபட்சம் ஓரிரு வாரங்களில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்றுவதாக, அனைத்து துறை அதிகாரிகளும் ஒப்புதல் அளித்தனர். இதனால், நிலப்பிரச்னைகள், ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 12 ரயில்வே திட்டங்களின் நிலை: ரயில் வழித்தடம் கையகப்படுத்த வேண்டிய நிலம்(ஏக்கரில்) கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு * திண்டிவனம் - நகரி 1.18 ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர், ஒரு வாரத்தில் பிரச்னையை தீர்க்க உத்தரவு. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க, 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு * மதுரை - துாத்துக்குடி இரு வழிப்பாதை 32.04 மதுரை, விருதுநகர், துாத்துக்குடி மாவட்டத்தில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் * திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இருவழி பாதை 45 நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சி துறையினர், தடையின்மை சான்று வழங்க உத்தரவு * சின்ன சேலம் - கள்ளக்குறிச்சி புதிய அகலபாதை 1.18 நிலத்தை ஒப்படைப்பதற்கான கோப்பு, பல்வேறு துறை அதிகாரிகள் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. உடனடியாக ஒப்புதல் வழங்கவும் * மொரப்பூர் - தர்மபுரி புதிய அகலப்பாதை 51.49 நிலத்துக்கான இழப்பீடை, விரைவில் இறுதி செய்ய வேண்டும் * கொருக்குபேட்டை - எண்ணுார் நான்காவது பாதை 4,000 சதுர அடி நிலத்துக்கான இழப்பீட்டு தொகையை, ஒரு வாரத்தில் இறுதி செய்ய உத்தரவு * செங்கல்பட்டு - விழுப்புரம் புதிய அகலப்பாதை நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அறிக்கையை, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் நில நிர்வாக ஆணையருக்கு உடனே அனுப்ப வேண்டும் * . மயிலாடுதுறை - திருவாரூர் அகலப்பாதை 32 மயிலாடுதுறை மாவட்டத்தில், நிலம் எடுப்பது தொடர்பான, வரைவு திட்டத்தை, உடனடியாக அனுப்ப வேண்டும், திருவாரூர் மாவட்டத்தில் நிலம் எடுக்க ஒரு பேரூராட்சியிடம் தடையின்மை சான்று வராமல் உள்ளது. அதை வழங்க வேண்டும் * பட்டுக்கோட்டை - மன்னார்குடி புதிய அகலப்பாதை - கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தை, நீர் வளத்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து, ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் * தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை புதிய அகலப்பாதை - திருவாரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிலம் எடுக்க, ஒப்புதல் அளிக்க வேண்டும் * சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை 3, 4வது பாதை - 42 வீடுகளை இடமாற்றம் செய்ய, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தடம் பேசி, மாற்று வீடுகள் ஒதுக்க வேண்டும் * விழுப்புரம் - திண்டுக்கல் 2வது அகலப்பாதை 28.20 ஏக்கர் விழுப்புரம், திண்டுக்கல், திருச்சி மாவட்டத்தில் நிலத்தை ஒப்படைக்க ஒப்புதல் அளிக்க வேண்டும் *** - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை